அடடே ஆச்சரியக்குறி! ஸ்டாலின், எடப்பாடி, ஒ.பி.எஸ், ரஜினி, சு. சுவாமி அனைவரும் ஒரே பட்டியலில்!

By Staff
Subscribe to Boldsky

சமீபத்தில் ஆங்கில செய்தி ஊடகமான இந்தியன் எக்ஸ்பிரஸ் சக்தி வாய்ந்த இந்தியர்கள் என டாப் 100 பட்டியல் ஒன்று வெளியிட்டிருந்தது. அதில் தமிழகத்தை சேர்ந்த எட்டு பேர் இடம் பெற்றிருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் அரசியல் தலைவர்கள்.

Eight People From Tamil Nadu Took Place in IE-100 List of Most Powerful Indians!

சென்ற ஆண்டுகளிலும், இந்த ஆண்டிலும் தொடர்ந்து இந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பவர் மூவர். (சிதம்பரம், ஸ்டாலின் மற்றும் சுப்ரமணியன் சுவாமி). புதியதாக இந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பவர் ஐவர் (நிர்மலா சீதாராமன், ரஜினிகாந்த், பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி, டி.எம். கிருஷ்ணா).

இனி, யார், யார் எந்தெந்த இடத்தைப் பிடித்துள்ளனர் என்று இந்த தொகுப்பில் காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#100 டி.எம். கிருஷ்ணா

#100 டி.எம். கிருஷ்ணா

இவர் கர்நாடக சங்கீதத்தில் காணப்படும் சாதிய ஏற்றத்தாழ்வு மற்றும் மாற்றுக் கருத்துக்கள் குறித்து சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். இவர் இதையொட்டி புகல்பற்ற பழம்பெரும் மார்கழி விழாவில் பாட மறுத்தார்.

இவர் ஒரு பொருளாதார வல்லுனராக விரும்பினார், இதற்காக லண்டனில் படிக்கவும் திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#78 ரஜினிகாந்த்

#78 ரஜினிகாந்த்

தொடர்ந்து நாற்பது ஆண்டு காலமாக தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டார் ஹீரோவாக வளம் வந்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த். ஒருவழியாக அரசியலிலும் களம்புக திட்டமிட்டுள்ளார். இவரது அரசியல் வருகை திமுக - அதிமுக வாக்கு வங்கிகளை குறைக்கும் என்று கருதப்படுகிறது.

சிஸ்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் கூறிக் கொண்டிருக்கும் ரஜினி எம்ஜிஆர் பாதையில் அரசியல் செய்வேன் என்று கூறியுள்ளார்.

#67 சிதம்பரம்

#67 சிதம்பரம்

காங்கிரஸ் கட்சின் சீனியர் தலைவர் சிதம்பரம். இவர் முன்னாள் நிதி அமைச்சர் ஆவார். உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேலாண்மை குறித்த இவரது பார்வை கவனிக்கத்தக்கது. தனது பேச்சு மற்றும் எழுத்தால் மத்திய அரசுக்கு அதிக நெருக்கடி கொடுத்து வருகிறார்.

#65 பன்னீர்செல்வம்

#65 பன்னீர்செல்வம்

அதிமுகவில் உறுப்பினர்கள் அங்கு செல்வதா, இங்கு செல்வதா என்ற அலைச்சலில் திரிந்துக் கொண்டிருக்கிறார்கள். தனது தர்ம யுத்தம் மற்றும் தியானம் காரணமாக கடந்த ஆண்டில் பெரும் புயலை ஏற்படுத்தியவர் பன்னீர்செல்வம். ஒரு கட்டத்தில் ட்விட்டரில் இவருக்கு மக்கள் அமோக ஆதாரவும் அளித்தனர்.

அதிமுகவின் முடிவு என்ன என்பது அடுத்த ஓரிரு ஆண்டுகளில் முழுமையாக தெரிந்துவிடும்.

#64 எடப்பாடி பழனிச்சாமி

#64 எடப்பாடி பழனிச்சாமி

அதிமுகவில் யாரெலாம் முதல்வர் ஆக வேண்டுமோ எல்லாரும் இந்த ஐந்து ஆண்டிலேயே ஆய்விடுங்கள். அப்பறம் அடுத்த தேர்தலில் ஓட்டுப் போடவில்லை, தோல்வி அடைந்துவிட்டோம் என்று அழுது அடம்பிடிக்க கூடாது என்று, இவர் முதல்வர் ஆனபோது பெரும்பாலான ட்விட்டர் வாசிகள் கேலியாக கருத்து வெளியிட்டு பகிர்ந்திருந்தனர்.

இப்போது பேருக்கு தான் எடப்பாடி ஆட்சி, இவர்கள் தாமரை கட்சிக்கு எடுபுடு ஆட்சி தான் செய்து வருகிறார்கள் என்றும் மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

#37 சுப்பிரமணியன் சுவாமி

#37 சுப்பிரமணியன் சுவாமி

நியமன ராஜ்ய சபா உறுப்பினராக இருந்து வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி. சு.சு. ஒரு ஒன்-மேன் ஆர்மி என இவரை பின்தொடரும் ஆதரவாளர்கள் கூருவருகிறார்கள். இவருக்கு பிடித்தமான எதிரிகளில் ஒருவர் இறந்துவிட, இப்போது சோனியா மற்றும் ராகுலை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்.

தாலி எடுத்துக் கொடுக்க அழைத்தால், தாலி கட்ட முயற்சிப்பது இவருக்கு பிடித்தமான விளையாட்டு.

#24 மு.க. ஸ்டாலின்

#24 மு.க. ஸ்டாலின்

தி.மு.க தலைவர் தி.மு.க (திரு.மு.கருணாநிதி) உடல்நலம் சரியின்றி இருப்பதால், அவரது மகனும், இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் நீண்ட காலம் இருந்த ஸ்டாலின் அவர்கள் செயல் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திடீரென முக்கிய மேடைகளில் வீர முழக்கமிட வேண்டிய சூழல் வந்த காரணத்தால், இவர் சில பழமொழி பேசி பழக ஆரம்பித்தார். ஆனால், பழமொழிகள் பால் நழுவி பழத்தில் விழுந்த கதையாகிப் போனதால். இப்போது மீம் டெம்ப்ளேட்களில் சிக்கி தவித்து வருகிறார்.

இவர் தமிழகத்தின் முதல்வராகும் வாய்ப்பு இருக்கு, ஆனா இல்ல...

#22 நிர்மலா சீதாராமன்!

#22 நிர்மலா சீதாராமன்!

இந்தியாவின் முதல் முழுநேர பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமை இவருக்கு உண்டு. தனது கட்சியின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளின் போது ஊடகத்தின் முன் தோன்றி ஆதரவு குரல் கொடுக்கும் தைரியம் மிக்கவர். பல அரசியல் பிரச்சனைகள் பற்றியும் குரல் கொடுத்து பேசியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Eight People From Tamil Nadu Took Place in IE-100 List of Most Powerful Indians!

    Eight People From Tamil Nadu Took Place in IE-100 List of Most Powerful Indians!
    Story first published: Saturday, March 31, 2018, 12:45 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more