TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
இந்த நாட்களில் துளசி செடியை தொடுவது உங்களுக்கு மரணத்தை உண்டாக்கும்
பூமியில் இருக்கும் மிகவும் பயனுள்ள மூலிகைகளில் ஒன்றாக கருதப்படுவது துளசி. சொல்லப்போனால் மூலிகைகளின் ராணி என்று கூட இதனை சொல்லலாம். மூலிகை என்பதை தாண்டி இந்து மதத்தில் துளசிக்கென்று தனி அடையாளமும், புனிதமும் இருக்கிறது. இந்து கடவுள்கள் பலருக்கும் துளசியை பிரசாதமாக வைத்திருக்கிறார்கள், பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் துளசி செடி வளர்ப்பதை புண்ணியமாக கருதுகின்றனர்.
துளசி செடி இருக்கும் வீடானது ஒரு புனித ஸ்தலம் போன்றது, அங்கு எந்தவித நோயும், எமனும் நெருங்கமாட்டார்கள் என்பது நம்பிக்கை. பெரும்பாலும் அனைத்து கோவில்களிலும் துளசி செடி இருக்கும், அதனை கடவுளுக்கு படித்து நமக்கு பிரசாதமாக கொடுப்பார்கள். குறிப்பாக விஷ்ணுவிற்கு. எமனை தடுக்கும் துளசியே நீங்கள் அதனை அவமதித்தால் எமனை உங்களை நோக்கி வேகமாக இழுத்து வந்துவிடுவார். இந்த பதிவில் துளசியை என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
துளசி
துளசி உபயோகமான மூலிகை, இந்துக்களின் புனிதமான பொருள் என்பதையெல்லாம் தாண்டி அதனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. இறகு உங்கள் உடலில் ஆரோக்கியரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்துவதுடன் சிலசமயம் உங்கள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.
துளசியை மெல்லக்கூடாது
துளசி இலைகளை எப்பொழுதும் வாயில் போட்டு மெல்லக்கூடாது என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். மெல்லுவதற்கு பதிலாக அதனை தண்ணீரில் போட்டு அந்த தண்ணீரைத்தான் குடிக்க வேண்டும். ஏனெனில் அதில் உள்ள அல்லாய் பொருட்கள் மெல்லும்போது பற்களுடன் நேரடி தொடர்பு கொள்கிறது. இதனால் உங்கள் ஈறுகளில் பிரச்சினை ஏற்படும்.
அசுரன் ஜலந்தரன்
அசுரன் ஜலந்தரன் என்பவன் தான் கடவுளால் எப்பொழுதும் தோற்கடிக்கப்படக்கூடாது என்னும் திவ்ய வரத்தை பெற்றிருந்தான். தன் மனைவியின் கற்பு நெறியை பொறுத்தும், தன்னிடம் கிருஷ்ணா கவசம் இருக்கும்வரையும் தன்னை யாரும் வதைக்ககூடாது என்னும் வரத்தை வாங்கியிருந்தான். அந்த தைரியத்தில் ஜலந்தரனின் அட்டூழியங்கள் அதிகரித்தது. அதனால் அவனை அடக்க சிவபெருமானும், விஷ்ணுவும் இணைந்து ஒரு திட்டம் தீட்டினர்.
MOST READ: நீங்கள் சமைக்க பயன்படுத்தும் இந்த பாத்திரத்தால் உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் தெரியுமா?
விஷ்ணுவின் திட்டம்
விஷ்ணுபகவான் ஜலந்தரனை அணுகி அவனின் கிருஷ்ண கவசத்தின் ரகசியத்தை கேட்டறிந்தார். பின்னர் ஜலந்தரின் உருவத்தில் சென்று அவன் மனைவியின் கற்புக்கு கேடுவிளைவித்தார். இதன் மூலம் ஜலந்தரனின் மரணம் சிவபெருமானின் கைகளால் நிறைவேறியது.
விஷ்ணுவின் வரம்
தன் கணவன் சிவன் மற்றும் விஷ்ணுவால் கொல்லப்பட்ட செய்தியறிந்த துளசி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். தன்னால் ஏமாற்றப்பட்ட துளசிக்கு விஷ்ணு தெய்வீக நிலையை ஆசீர்வதித்தார். தன் கணவனை சிவபெருமான் கொன்றதால் அவரை வணங்கவும், தன்னை கொண்டு அவரை வழிபடுவதையும் துளசி தவிர்த்தார். எனவே ஒருபோதும் சிவபெருமானை துளசியை கொண்டு பூஜிக்காதீர்கள். இது உங்களுக்கு துளசியின் சாபத்தை பெற்றுத்தரும்.
துளசியை பறிக்காதீர்கள்
சில நாட்களில் துளசி இலைகளையோ அல்லது செடியையோ பறிக்காதீர்கள். அது உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய சாபமாக மாறிவிடும். குறிப்பாக ஏகாதசி, சூரிய மற்றும் சந்திர கிரகணம் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் துளசியை பறிக்கக்கூடாது.
காரணம்
அதற்கு காரணம் சிவனும், விஷ்ணுவும் துளசியின் புனிதத்தை கெடுத்து அவரின் கணவரை கொன்றது அந்த நாளில்தான். அந்த நாட்களில் துளசியை தீண்டுவது நீங்களும் அவரின் புனிதத்தை கெடுப்பது போன்றதாகும். இந்த நாளில் துளசியை பறித்தால் துளசியின் சாபத்திற்கு ஆளாவதுடன் அதனால் மரணம் கூட ஏற்படலாம்.
MOST READ: கௌதம் கம்பீர் குறித்து பலரும் அறியாத சில சுவாரஸ்யமான உண்மைகள்!
துளசியை அவமதிக்கக்கூடாது
தங்கள் வீடுகளில் துளசியை வளர்ப்பவர்கள் அதனை எப்போதும் வணங்கவேண்டும், ஒருபோதும் மறக்கவோ அல்லது அவமதிக்கவோ கூடாது. இல்லையெனில் துளசியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். பூமிக்கும், சொர்க்கத்திற்கும் இடையில் நுழைவாயிலாக இருப்பது துளசிதான் என்று நம்பப்படுகிறது.
வீட்டிற்குள் துளசி செடியை வைக்காதீர்கள்
துளசி செடியை ஒருபோதும் வீட்டிற்குள் வைக்கக்கூடாது. ஏனெனில் ஜலந்தரனின் இறப்பிற்கு பிறகு விஷ்ணு துளசிக்கு ராதையை போல தன் பிரியசகியாக எப்போதும் இருப்பாய் என வரம் வழங்கினார். எனவே துளசி தன்னை வைகுண்டத்திற்கு அழைத்து செல்லும்படி விஷ்ணுவிடம் கேட்டார்.
விஷ்ணுவின் பதில்
துளசி விஷ்ணுவிடம் தன்னை வைகுண்டத்திற்கு அழைத்து செல்லும்படி கேட்டபோது அவர் அதனை ஏற்க மறுத்தார். ஏனென்று கேட்டபோது " எனது இல்லம் எப்போதுமே என் லக்ஷ்மிக்கு மட்டுமே உரியது, ஆனால் என் உள்ளம் உனக்குறியது " என்று கூறினார். எனவே தனக்கு விஷ்ணுவின் வீட்டிற்கு வெளியிலாவது இடம் கொடுக்கும்படி கேட்டார் துளசி. விஷ்ணுவும் அதற்கு சம்மதித்தார். அன்றிலிருந்து துளசி வீட்டிற்கு வெளியிலேயும், கோவிலுக்கு வெளியேயும் வளர்க்கப்பட்டு வருகிறது.
துளசியின் விளைவுகள்
துளசியை ஒருபோதும் வீட்டிற்குள் வளர்க்கக்கூடாது. அதையும் மீறி வளர்த்தால் பல பிரச்சினைகள் ஏற்படலாம். குறிப்பாக கணவன் மனைவி உறவுக்குள் அதிக சிக்கல்கள் ஏற்படும். மேலும் துளசி வீட்டிற்குள் இருக்கும்போது அதனால் பல ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
MOST READ: உங்க முடி சும்மா தொட்டாலே இப்படி வழுக்கிக்கிட்டு போகணுமா? இந்த கற்பூர எண்ணெய தேய்ங்க...