Latest Updates
-
Strawberry Moon 2026: ஸ்ட்ராபெரி நிலவு எப்போது வருகிறது? இந்தியாவில் எந்த நேரத்தில் இது பிரகாசமாக தெரியும்? -
கொங்கு ஸ்பெஷல் முட்டை சிந்தாமணி ரெசிபி - 4 முட்டை இருந்தா இத செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
39 மனைவிகள், 94 குழந்தைகள் என ஆலமரமாய் வாழ்ந்த இந்தியர் யார் தெரியுமா? உலகிலேயே பெரிய குடும்பம் இவரோடதுதான் -
பெங்காலி ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
சுக்கிரன்-சூரியனின் ராசி மாற்றத்தால் ஜூலை மாதத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
காரசாரமான.. சிக்கன் மிளகு கிரேவி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
வார ராசிபலன் (28 June 2026-04 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது..! -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த சோள மாவு ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சன்டே ஸ்பெஷல் ஹனி கார்லிக் சிக்கன் - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
இன்னைக்கு இந்த ராசிக்கு மேற்கு திசையில இருந்து ஒரு சுபசெய்தி வரப்போகுது... அது எந்த ராசி?
daily horoscope 27.6.18, 27.6.18 ஆம் நாளான இன்று உங்களுடைய ராசிக்கான பலன் எப்படி இருக்கும்
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

மேஷம்
வீட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். வீட்டில் உள்ளவர்களுக்கும் உங்களுக்கும் பெரிய மகான்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். மனதில் நினைக்கும் எண்ணங்கள் அத்தனையும் மேம்பட்டதாக இருக்கும். வீட்டுக்கு சுப செய்திகள் வந்து சேரும். வேலை சம்பந்தமாக அலைச்சல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட நிறமாக கருநீலமும் இருக்கும்.

ரிஷபம்
விவாதங்களில் ஈடுபடும் முன் யோசித்து செய்யுங்கள். உங்களுக்கு சாதகமான முடிவுகள் வந்து சேர கொஞ்சம் கால தாமதமாகும். மனதுக்குள் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றி மறையும். உடன் வேலை செய்பவர்களிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். உறவினர்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். வாகனப் பயணங்களின் மூலம் தொழிலுக்கு ஆதாயமும் அனுகூலமான பலன்களும் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

மிதுனம்
தொழிலில் புதிய வாய்ப்புகள் தானாக தேடி வரும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் உண்டாகும். வீட்டுக்கு உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சியும் குதூகலமும் ஏற்படும். வீட்டில் மனைவியின் ஆசைகளை நிறைவேற்றுவதன் மூலம் கணவன், மனைவிக்கு இடையேயான நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியினால் உங்களுடைய பொருளாதார நிலை மேம்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கடகம்
சொந்த விஷயத்திலும் தொழிலிலும் உறவினர்களுடைய ஆதரவு கிடைக்கும். அதனால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். தொழிலில் பிரியமான ஆட்களுடைய அறிமுகம் ஏற்படும். மனதில் இருந்து வந்த குழப்பங்களும் குறைகளும் நீங்கும். முக்கியமான உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சவாலான பணிச்சூழல் ஏற்படும். கோர்ட்டில் நிலுவையில் இருந்த வழக்குகளில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாகவே வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

சிம்மம்
பணியில் இட மாற்றங்கள் உண்டாகும் வாய்ப்புகள் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு, சேமிப்பை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பொது சேவைகளில் ஈடுபடுகிறவர்களுக்கு சாதகமற்ற சூழல் தான் இருக்கிறது. வீட்டில் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி
தாய்வழியிலான உறவினர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். பழைய கடக்ளைத் திரும்பி செலுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மாணவர்களுடைய புத்திக்கூர்மையை வெளிப்படுத்தும் சூழல் உண்டாகும். உங்களுடைய நெருங்கிய நட்பு வட்டாரம் விரிவடையும். வீட்டில் பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை ஏற்படும். பயணங்களில் இருந்து வந்த அசௌகரியங்கள் நீங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

துலாம்
வெளியூா் பயணங்களின் வழியாக தொழிலுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். உடன் பணிபுரியும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள். தொழிலில் இதுவரை இருந்து வந்த இடர்பாடுகள் விலகி ஓடிவிடும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலுக்கு வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் மீது மற்றவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகரித்துக் கொண்டே போகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
தொழிலில் முக்கியமான நிர்வாக முடிவுகளை எடுப்பதற்கு முன் கொஞ்சம் நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். பணியில் உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். நினைத்த காரியங்களை நிறைவேற்றுவதில் இதுவரை இருந்து வந்த தடைகளுக்கு காரணமான மறைமுக எதிரிகளைக் கண்டறிவீர்கள். தொழில் சம்பந்தமான எண்ணங்கள் உங்களுக்கு மேம்பட ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 87ம் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

தனுசு
முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுக்கு மேல் உள்ள தலைமை அதிகாரிகளுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். நெருங்கிய நண்பர்களிடத்தில் இருந்து வந்த சிறுசிறு மனக்கசப்புகள் நீங்கும். நண்பர்கள் உங்களுடைய எண்ணங்களை அறிந்து செயல்பாடுவார்கள். செய்யும் செயல்களின் மூலமாக தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

மகரம்
மனதில் நினைத்த காரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கி, உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் விவேகமாக நடந்து கொள்ளுங்கள். பழைய கடன்களைத் திருப்பி அடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொதுப்பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கும்பம்
எந்த புதிய காரியங்களை செய்தாலும் மனதில் தைரியத்துடன் செயல்படுங்கள். வேலை செய்யும் இடங்களில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். மனதில் புதுவித புது்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். ஆன்மீகத்தில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். வழக்குகளில் கொஞ்சம் கவனத்துடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மீனம்
மனதில் மகிழ்ச்சியான நினைவுகளை எண்ணி மனதில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களின் வழியில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வுலை பார்க்கும் இடங்களில் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். புதிய நபர்களுடைய வருகையின் காரணமாக, லாபகரமான சூழ்நிலை உண்டாகும். சொத்துக்கள் வாங்கிக் குவிக்கும் எண்ணங்கள் மேலோங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு இருக்கும்.



Click it and Unblock the Notifications