Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
இந்த 4ல ஒண்ணு சூஸ் பண்ணுங்க.. உங்க எதிர்கால வாழ்க்கை ரகசியம் பத்தி நாங்க சொல்றோம்!
இந்த 4ல ஒண்ணு சூஸ் பண்ணுங்க.. உங்க எதிர்கால வாழ்க்கை ரகசியம் பத்தி நாங்க சொல்றோம்!
இவை ஒரு வகையான சைக்கலாஜி பர்சனாலிட்டி டெஸ்ட் என்று கூறப்படுபவை.
எப்போதுமே நாம் நமது ஜாதகம், கைரேகை போன்ற விஷயங்களை கொண்டு நமது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தான் அறிந்திருப்போம். ஆனால், இத்தகைய சைக்கலாஜி பர்சனாலிட்டி டெஸ்ட் மூலமும் இதை அறியலாம் என்று கூறுகிறார்கள். இது நூறு சதவிதம் அனைவருக்கும் பொருந்தாது என்றாலும்... இது ஒரு பொது பலன் போல காணலாம்.
எல்லா ராசி, நட்சத்திரதிற்கும், ஜாதக காரர்களுக்கும் பொது பலன் என்று ஒன்றிருக்கும். அதாவது.. அனைரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள் என்றாலும்.. அந்தந்த ராசி காரர்கள் மத்தியில் சில விஷயங்கள் பொதுவாக இருக்கும் என்று கருதப்படுவதுண்டு. விருப்பம், வெறுப்பு, குணாதியங்கள், ஒரு சூழலில் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என பொதுவாக அறியப்படும்.

ஒருவரது குணாதியங்களை அவரது விருப்ப, வெறுப்பை வைத்து தான் அறிய முடியும். அந்த வகையில் ஒருவருக்கு பிடித்த நிறம், பாடல் வகையை வைத்து கூட அவரது மனநிலை மற்றும் குணாதியங்கள் அறிய முடியும் என்கிறார்கள். சிவப்பு என்பதை கோபத்தை குறிக்கும், வெள்ளை அமைதியை குறிக்கும், பச்சை நிதானத்தை குறிக்கும் என்பதை போல... வைத்துக் கொள்ளுங்களேன்.
இந்த வகையில்... இந்த நான்கு கார்டுகளில் ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை தேர்வு செய்வதை வைத்து, அவரது எதிர் காலம் பற்றி அறிந்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இது லக்காக கூட இருக்கலாம்.. ஜஸ்ட் ட்ரை பண்ணி பாருங்க...

கார்டு #1
நீங்கள் தேர்வு செய்தது கார்டு நம்பர் ஒன்று என்றால்...
உங்கள் வாழ்வில் மிக விரைவில் ஒரு நேர்மறை தாக்கம் ஏற்பட போவதை இது குறிக்கிறது. உங்களை சுற்றிலும் நல்ல அதிர்வுகள், பாஸிடிவ் வைப்ரேஷன் நீங்கள் உணர்வீர்கள். நீங்கள் திட்டமிட்ட படியே அனைத்தும் நடக்கும். அது மட்டுமின்றி... உங்களது நீண்ட நாள் திட்டம் அல்லது கனவு சரியான பாதையில் பயணிக்க துவங்கும். உங்கள் கனவுகள் நிறைவேறும்.
நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விஷயம்... நேர் முகத்துடன் எதிர்கொண்டு நடக்க வேண்டியது மட்டுமே. சின்ன, சின்ன விஷயங்கள் மீது மயக்கம் கொண்டு விட வேண்டாம். நீங்கள்... எல்லாம் நல்லதாக வாழ்வில் நடக்கும் ஒரு கட்டத்தில் இருக்கிறீர்கள்.

கார்டு #2
நீங்கள் தேர்வு செய்தது கார்டு நம்பர் இரண்டு என்றால்...
நீங்கள் கொஞ்சம் கடுமையான நாட்களை எதிர்கொள்ள போகிறீர்கள். அவை நிச்சயம் மிகவும் மோசமாக இருக்காது. ஆனால், உங்கள் நேரம் கொஞ்சம் நீங்கள் எதிர்பார்க்காதது போல திசை மாறலாம். ஒரு போதும் யாரை சார்ந்தும் இருந்துவிட வேண்டாம். உங்கள் வாழ்வில் எந்த ஒரு விஷயத்தையும் நீங்களே தனித்து நின்று செய்துக் கொள்ள முடியும் என்ற நிலைக்கு நீங்கள் உங்களை தயார் செய்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் எதிர்பாராத சிலர் உங்களை பின்னாடி இருந்து தாக்க வாய்ப்புகள் உண்டு. யாரையும் குருட்டுத்தனமாக நம்பிவிட வேண்டாம். உங்கள் மீதான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். நிச்சயம் எத்தகைய அழுத்தமாக இருந்தாலும், நீங்கள் சிறந்து செயற்படுவீர்கள் என்பதை நீங்கள் உணரும் காலம் வரும்.

கார்டு #3
நீங்கள் தேர்வு செய்தது கார்டு நம்பர் 3 என்றால்...
நீண்ட காலமாக ஒரு பெரிய விஷயத்தை சாதிக்க வாழ்வில் போராடி வரும் நபரா நீங்கள்... ஆம்.. நீங்கள் தேர்வு செய்த கார்டு நம்பர் மூன்று... உங்களுக்கானது தான். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த விஷயங்களை உங்கள்வை வந்தடையும். அவை வெற்றியாக இருக்கலாம், பொருளாக இருக்கலாம், நட்பாக இருக்கலாம்.
நீங்கள் கண்ட கனவெல்லாம் நிஜமாக மாறும். ஒருவேளை நீண்ட காலமாக விஷத்தன்மை வாய்ந்த சில உறவில் இருந்து வெளிவர நீங்கள் முயற்சித்து கொண்டிருக்கிறீர்களா... இது தான் உங்களுக்கான சரியான நேரம். உங்களது கடின உழைப்புக்கான பலனை சீக்கிரம் அடைவீர்கள்.

கார்டு #4
நீங்கள் தேர்வு செய்தது கார்டு நம்பர் 4 என்றால்...
நீங்கள் நிறைய கனவு கண்டிருக்கலாம்... அவற்றில் சிலவன நீங்கள் தவறாக உருவகப்படுத்தி வைத்திருக்கலாம். தன்னம்பிக்கை அவசியம் தான். ஆனால், அதீத நம்பிக்கை கொஞ்சம் மோசமானது. அது உங்களை சிக்கலில் மாட்டிவிடலாம்.
உங்கள் வாழ்வில் உங்கள் வெற்றிக்கு துணை நின்றவர்களுக்கு, உதவியவர்களுக்கு அவர்களுக்கான நன்றியை தெரிவியுங்கள். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கிரெடிட்டை தர மறுக்க வேண்டாம். அடக்கம் ஒருபோதும் யாரையும் வருந்த செய்யாது.
என்னவாக இருப்பினும், நீங்கள் என்ன செய்வதாக இருந்தாலும்.. அதில் உங்கள் சிறந்த உழைப்பை, திறனை வெளிப்படுத்துங்கள். உங்கள் கடின உழைப்பும், மன உறுதியும் லக் என்பதை தாண்டி... வெற்றிகளை உங்களுக்கு சாதகமாக்கும்.



Click it and Unblock the Notifications