Just In
- 2 hrs ago
தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...!
- 7 hrs ago
இந்த ராசிக்காரங்களுக்கு குருபகவான் முழு யோகங்களையும் வாரி வழங்குவார் தெரியுமா?
- 19 hrs ago
வாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான்...!
- 19 hrs ago
ஆண்களே… உங்கள் ஆண்குறியில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா?...தீர்வுகளை தெரிந்துகொள்ளுங்கள்…!
Don't Miss
- News
ஷாக்கிங்.. இந்தியாவிற்கு என்ன ஆனது? குடியுரிமை மசோதா பற்றி சர்வதேச செய்தி நிறுவனங்கள் விமர்சனம்!
- Movies
இவரும் இருக்காராமே... அஜித்தின் 'வலிமை'யில் விஜய்யின் ஒல்லி பெல்லி ஹீரோயின்
- Finance
ஸ்டெர்லைட் ஆலை மூடல் எதிரொலி.. காப்பர் உற்பத்தி படு வீழ்ச்சி..!
- Automobiles
டூவீலர் மீது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சேல்ஸ்மேன்... அந்தரத்தில் பறந்து சென்ற அதிர்ச்சி வீடியோ
- Technology
முதல் மாதம் இலவசம், ரூ.1000 தள்ளுபடி: ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு
- Education
CBSE: 11-ம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக 12ம் வகுப்பு தேர்வெழுதலாம்- அரசாணை வெளியீடு
- Sports
நம்பர் 1 இடத்தை அப்படிலாம் விட்ற முடியாது.. 7 சிக்ஸ் விளாசி ரோஹித்துடன் முட்டி மோதிய கேப்டன்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காசிக்கு அடுத்ததாக ராமேஸ்வரத்தை புனிதமாகக் கருதுவது ஏன்? அந்த சுவாரஸ்ய கதை இதுதான்...
ராமேஸ்வரம் இந்தியாவில் உள்ள இந்துக்களின் புனித தலமாகும். இது நமது தமிழ்நாட்டில் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள அழகிய நகரமாகும். மேலும் இது சிவன் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த இடமாகவும் உள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த புனித தலமான ராமேஸ்வரத்தின் பெருமையை நீங்கள் ராமாயணத்தில் அறியலாம். கடவுள் ஸ்ரீ ராமர், லட்சுமணன், சீதை மற்றும் அனுமான் போன்றவர்கள் கொடிய அரக்கன் ராவணனை வீழ்த்த தென்கிழக்கு கடற்கரையில் சிவலிங்கத்தை வைத்து பூஜித்த சரித்திர வரலாற்றை இது பறைசாற்றுகிறது.

அனுமான் சீதையை சந்தித்தல்
ராவணனால் இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்ட தன் மனைவி சீதாவை காண ராமர் வானர படைகளையும் தன் நண்பன் அனுமானையும் இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார். அனுமானும் சீதையை சந்தித்து ராமர் சொல்லிய தகவலை அவரிடம் கூறி விட்டு சீதையின் நினைவாக அவரின் தலை ஆபரணமான சூடாமணியை வாங்கிக் கொண்டு ராமனிடம் கொடுக்க புறப்பட்டார்.

ராமர் இலங்கையை கைப்பற்ற தயராகுதல்
சீதை அங்கு மிகுந்த வருத்தத்தில் இருந்ததை அறிந்த உடன் ராமர் இலங்கை மீது போர் தொடுக்க தயாராகிறார். இலங்கை கடல்களால் சூழப்பட்ட அழகான ஒரு தீவு. உள்ளே தன் படைகளை வழிநடத்தி செல்ல வேண்டும் என்றால் கடலை கடந்து செல்ல வேண்டும். எனவே ராமர் கடலின் கடவுளான சமுத்திர ராஜாவை நோக்கி வழிபடுகிறார். ஆனால் சமுத்திர ராஜா பதில் எதுவும் அளிக்காததால் கோபமடைந்த ராமர் தன் வில்லை எடுத்து கடலின் நடுவில் எய்தார்.உடனே கடல் வழியை நகர்த்தி ராமரின் படைகள் போக பாலத்தை அமைக்க உதவியது.
MOST READ: இந்த மிளகாயை எண்ணெயில் கலந்து தேய்ச்சா முடி நீளமா வளருமாம்... என்ன அளவுல தேய்க்கணும்?

தனுஷ்கோடி பாலம்
ராமர் சீதையை மீட்க கடலின் நடுவே இலங்கைக்கு பாலம் அமைக்க ஆரம்பித்தார். அப்பொழுது ஒரு சிறிய அணில் தன்னால் முடிந்த மணலை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பாலம் கட்ட உதவியது. இதைக் கண்ட ராமரும் வானர படைகளும் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தனர். அணில் முதுகில் மூன்று கோடுகள் எப்படி வந்தது என்ற கதை நம் எல்லோருக்கும் தெரியும். அதுவும் இங்கு தான் நடந்தது. இதனைக் கண்ட ராமர் அணிலின் இந்த அன்பை பார்த்து அதன் முதுகில் லேசாக வருடிக் கொடுத்தால். அவர் மூன்று விரல்களால் தடவி விட்ட அந்த அன்பு வருடல் தான் அணிலின் முதுகில் மூன்று வெள்ளை கோடுகளை உருவாக்கியது.

ராவணனை அழித்தல்
பாலம் கட்டும் பணி முடிவடைந்ததும் ராமர், அனுமான், வானர படைகள் அனைத்தும் இலங்கையை சென்றடைந்தது. போரின் போது இந்திரன் தன் வதம் மீது அமர்ந்து இருந்தார், அகஸ்தியர் முனிவர் ஆதித்யா ஹரிதயா மந்திரத்தை ஓதினார். ராமர் தான் கற்ற வில்வித்தையான பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தி ராவணனை கொன்று வீழ்த்தினார்.
MOST READ: ஷேவ் செய்த பின்னும் சருமம் வழுவழுப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

சீதையுடன் ராமேஸ்வரம்
ராவணன் அழிந்த பிறகு ராவணனின் மகன் விபுசனாவை இலங்கையின் அரசனாக்கி விட்டு ராமர் சீதை, இலட்சுமணன் மற்றும் அனுமானுடன் அன்னப் பறவை வதத்தில் பறந்து இராமேஸ்வரம் வந்தார்.

அகஸ்தியரை சந்தித்தல்
இராமேஸ்வரம் வந்த ராமர் அகஸ்தியர் முனிவரையும், தண்டகரினியா முனிவரையும் சந்தித்து ஆசி பெற்றார். அவர்களின் அறிவுரை படி ராவணனை கொன்ற பிரம்மஹத்தி பாவம் போக அங்கே சிவலிங்கத்தை நிறுவி வழிபட தயாராகினார்.

சிவ பூஜை
எனவே ராமர் சிவ பூஜைக்கான ஏற்பாடு செய்ய முடிவெடுத்தார். அனுமானும் சிவலிங்கம் கொண்டு வருவதற்காக கைலாசம் வரை ஆகாய மார்க்கமாக பறந்து சென்றார்.
MOST READ: தலையில் உள்ள எண்ணெய் பசையைப் போக்கும் தக்காளி... எப்படி அப்ளை செய்ய வேண்டும்?

மணல் லிங்கம்
சிவலிங்கத்தை எடுக்க சென்ற அனுமானால் சீக்கிரம் திரும்ப முடியவில்லை. பூஜைக்கான நேரம் நெருங்க ஆரம்பித்தது. இந்த நேரத்தில் தான் சீதை மணலால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை உருவாக்கினார்.

வழிபாடு
பூஜை நேரம் வந்து விட்டதால் அகஸ்தியர் முனிவர் மணல் லிங்கத்திற்கே பூஜை செய்து விடுங்கள் என்று ராமனிடம் கூறினார்.

ராமேஸ்வரம் பெயர் வரக் காரணம்
சீதை, ராமர், லட்சுமணன் சேர்ந்து பிரம்மஹத்தி பாவம் போக சிவ பூஜையில் ஈடுபட்டார்கள். அவர்கள் செய்த பூஜையின் பயனால் சிவனும் பார்வதியும் முன் தோன்றி தனுஷ்கோடி நீரில் குளித்து எழுந்திருங்கள். பாவம் எல்லாம் கரைந்தோடி விடும் என்று அருளினார். அப்படி ராமர் வழிபட்ட அந்த சிவலிங்கம் தான் ராமலிங்கம் என்ற பெயரை பெற்றது. அங்கே எழுந்தருளிய கடவுள் சிவன் ராமநாத சுவாமி என்றும் அந்த இடத்திற்கு ராமேஸ்வரம் என்ற பெயரும் புகழும் ஏற்பட்டது.
MOST READ: கல்லீரல் வீக்கத்தை சரிசெய்து கழிவுகளை வெளியேற்றும் பப்பாளி விதை... எவ்வளவு சாப்பிடலாம்?

இரண்டு லிங்கம்
இதற்கிடையே கைலாச மலைக்கு சென்ற அனுமான் அங்கே சிவனை சந்திக்க முடியாததால் சிவலிங்கத்தை பெற முடியாமல் தவித்தார். ராமருக்கு சிவலிங்கத்தை எடுத்து வருவதாக வாக்கு கொடுத்ததால் சிவனை நோக்கி அனுமான் தவம் பிரியலானார். அவரின் அன்பை பார்த்த சிவன் அவருக்கு அருளி இரண்டு சிவலிங்கத்தை கொடுத்து அனுப்பினார்.
அனுமான் தன்னுடைய இரண்டு சிவலிங்கத்தையும் சுமந்த படி ஆகாய மார்க்கமாக ராமேஸ்வரம் பறந்து வந்தார்.

பல லிங்கங்கள்
ராமேஸ்வரம் வந்தடைந்த அனுமான் அங்கே ராமரின் சிவன் பூஜை முடிவடைந்து விட்டதை நினைத்து வருத்நமடைந்தார். அவரின் வருத்தத்தை போக்கும் வகையில் ராமரும் இந்த மணலிங்கத்தை எடுத்து விட்டு நீ கொண்டு வந்த லிங்கத்தை வேண்டும் என்றால் வை அனுமான் என்றார்.

வலிமையான மணலிங்கம்
அனுமான் தன் வாலால் கைகளால் இப்படி எப்படி நகர்த்த முடிந்தும் சீதை செய்த அந்த மணலிங்கத்தை அவரால் நகர்த்த முடியவில்லை. ஏனெனில் சீதை தன்னுடைய முழுமையான பக்தியால் தனுஷ்கோடி மண்ணிலிருந்து அதை உருவாக்கி இருந்தார்.
அனுமான் கொண்டு வந்த லிங்கம் ஏன் முதலில் வணங்கப்படுகிறது
அனுமான் கொண்டு வந்த லிங்கத்தை சீதையால் நிறுவப்பட்ட ராமலிங்கத்தின் வடக்கு பகுதியில் வைத்து விடும் படி ராமர் கூறினார். இதனால் பக்தர்கள் அனுமான் கொண்டு வந்த லிங்கத்தை வணங்கிய பிறகே ராமலிங்கத்தை வணங்குவார்கள் என்றார் ராமர். அனுமான் கொண்டு வந்த மற்றொரு லிங்கம் அனுமானை வழிபடும் வாயிலின் வெளியில் வைக்கப்பட்டுள்ளது. இப்படித்தான் ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் உருவாகி இந்த முறைப்படி வணங்கப்பட்டு வருகிறது.