For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  கோஹினூர் வைரம் மற்றும் 30,000 பெண்களை அடிமையாக வைத்திருந்த அரசன் பற்றி தெரியுமா?

  By Staff
  |
  Alauddin Khilji Facts

  Image Credit: Wikipedia

  பத்மாவத் என்கிற பத்மாவதி படத்தை கண்ட அனைவருக்கும் அலாவுதீன் கில்ஜி என்பவர் ஒரு மிகப்பெரிய கொடுமைக் காரன், இச்சை குணம் படைத்த பெண் பைத்தியம் என்ற பிம்பமே உருவாகியிருக்கும்.

  கில்ஜி சாம்ராஜ்ஜியத்தின் இரண்டாவது மாபெரும் அரசனாக திகழ்ந்த மன்னன் அலாவுதீன் கில்ஜி. தனது ஆட்சிக் காலத்தில் பல போர்களில் வென்று, அசைக்க முடியாத மாமன்னனாக இருந்தான் கில்ஜி.

  இந்தியாவில் பெரும்பகுதிகளை வென்ற முதல் இஸ்லாம் அரசன் என்ற பெயரும் கில்ஜிக்கு இருந்தது. தென்னிந்தியா வரை தனது ஆட்சியை நீட்டித்து பெரும் ஆளுமை கொண்டிருந்தான் கில்ஜி.

  டெல்லியின் சுல்தானாக திகழ்ந்த அலாவுதீன் கில்ஜி ஆங்கிலே அரசால் இந்தியாவில் இருந்து கடத்தி செல்லப்பட்ட வரலாற்றி சிறப்புமிக்க கோஹினூர் வைரத்தை தன் கையகப்படுத்தி வைத்திருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

  அலாவுதீன் கில்ஜி என்ற அரசன் யார், அவன் இந்தியாவிலும், எதிரி நாட்டவர் மீதிலும் ஏற்படுத்திய தாக்கம் என்ன? அவனது போர் குணம் மற்றும் வெற்றிகள் குறித்தும் அறிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  அலாவுதீன் கில்ஜி!

  அலாவுதீன் கில்ஜி!

  பெங்காலில் இருந்த பிர்பும் என்ற பகுதியில் 1250ல் ஷிஹாபு தீன் மசூத் என்பவருக்கு பிறந்த ஜுனா முகமது கில்ஜி தான் பின்னாளில் அலாவுதீன் கில்ஜியாக மாறினான். கில்ஜியின் தந்தையின் சகோதரர் ஜலாலுதீன் ஃபிரூஸ் கில்ஜி தான் சுல்தான் ஆப் கில்ஜியின் முதல் அரசர்.

  மாவீரன்!

  மாவீரன்!

  அலாவுதீன் கில்ஜிக்கு சிறுவயதில் படிப்பு பெரிதாக ஏறவில்லை. படிப்பில் கொஞ்சம் மந்தம் என்றாலும், போர் குணத்திலும், ஆளுமை மற்றும் சண்டைக்கட்டும் வீரத்திலும் அலாவுதீன் கில்ஜி.

  ஆரம்பத்தில் கில்ஜிக்கு சுல்தான் தனது அவையில் அமீர் ஐ துசுக் (Master of Ceremonies) எனும் பதவி வழங்கப்பட்டது.

  1291ல் காராவின் கவர்னர் பதவி வழங்கப்பட்டது. பிறகு தனது சொந்த மாமாவான ஜலாலுதீனை கொன்று, 1296ல் தில்லியின் சுல்தானாக தன்னை தானே முடிசூடிக் கொண்டான் கில்ஜி.

  ஆளுமை!

  ஆளுமை!

  ஜலாலுதீனை கொலை செய்த பிறகும் கூட அலாவுதீனை சுற்றி சில சூழ்ச்சிகள் பின்னியிருந்தன. தன்னை அழிக்க சூழ்ந்திருந்த கிளர்ச்சியாளர்களை தான் ஆட்சிக்கு வந்த முதல் இரண்டு வருடத்தில் கொன்று குவித்தான் கில்ஜி. பிறகே, முழு ஆளுமையுடன் சுல்தானாக வலம்வந்தார்.

  மங்கோலியா!

  மங்கோலியா!

  1296- 1308 வரை மங்கோலிய சாம்ராஜ்ஜியம் தில்லி மீது தொடர்ந்து போர் தொடுத்துக் கொண்டே இருந்தது. மங்கோலிய சாம்ராஜ்ஜியம் பல தலைவர்களுக்கு கீழ் இவர்கள் மீது போர் எடுத்து வந்தது. ஆனால், அவர்கள் அனைவரையும் வென்று தான் பெரிய வீரன் என்பதை கில்ஜி நிரூபணம் செய்தார்.

  அடிமைகள்!

  அடிமைகள்!

  சில மங்கோலிய மன்னர்கள் தில்லியில் இஸ்லாம் மதத்திற்கு மாறி புதிய இஸ்லாமியர்கள் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். இதன் பின்னணியில் பல சர்ச்சைகள் இரகசியங்கள் புதைந்துள்ளன என்றும் கூறப்படுகிறது.

  தான் வென்ற அரசர்களின் கீழ் வாழ்ந்து வந்த முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை தனக்கு கீழ் அடிமைகளாக வைத்துக் கொண்டான் அலாவுதீன் கில்ஜி.

  குஜராத் பயணம்!

  குஜராத் பயணம்!

  1299ல் தான் அலாவுதீன் கில்ஜி முதன் முறையாக குஜராத் பக்கமாக பயணம் மேற்கொண்டார். பிறகு 1303ல் ராஜ்புட் அரசர்கள் மீது போர் தொடுக்கப்பட்டது. முதல் முறையில் தோல்வியுற்றாலும். இரண்டாம் முறை வெற்றிகரமாக கோட்டையை பிடித்தான் அலாவுதீன் கில்ஜி.

  போர்கள்!

  போர்கள்!

  1303ல் மேவர் (Mewar) அரசை ஆண்டு வந்த சித்தூர் அரசர் ரத்தன் சிங்கை கொன்று, அவர் மனைவி பத்மினி என்கிற பத்மாவதியை அக்டத்தி செல்ல திட்டமிட்டான் கில்ஜி. ஆனால், ராணி தீயில் தன்னை இரையாக்கி தற்கொலை செய்துக் கொண்டார். கில்ஜி சித்தூரை தன்வசப்படுத்திக் கொண்டான்.

  இதை தொடர்ந்து சந்தேரி (Chanderi), தார் (Dhar), வரங்கள் கோட்டை (Warangal Fort) மற்றும் அதன் முழு நிதி புதையல் (கோஹினூர் உட்பட) வென்றான் அலாவுதீன் கில்ஜி.

   விலை நிர்ணயம்!

  விலை நிர்ணயம்!

  தனது ஆட்சியின் கீழ் நிதி பற்றாக்குறை ஏற்பட்ட போது, வணிக பொருட்களை தானே சந்தைப்படுத்தி அதற்கு விலை நிர்ணயம் செய்து அதன் மூலம் பொருளாதாரம் ஈட்டியுள்ளார் அலாவுதீன் கில்ஜி என்று கூறப்படுகிறது.

  உணவு பொருட்களிலிருந்து, உடை, மருந்து, கால்நடை, குதிரைகள் என பலவன அலாவுதீன் கில்ஜி நிர்ணயம் செய்த விலையிலேயே சந்தைகளில் விற்கப்பட்டுள்ளது.

  கடைசி நாட்கள்!

  கடைசி நாட்கள்!

  1316ல் உடலில் நீர்க்கட்டு (நீர் வீக்கம்) ஏற்பட்டு அலாவுதீன் கில்ஜி இறந்ததாக கூறப்படுகிறது.

  மாவீரன் அலக்ஸாண்டரின் மீது பெரும் ஈர்ப்பு கொண்டிருந்தார் அலாவுதீன் கில்ஜி. ஆகையால், தான் அச்சிட்ட நாணயத்தில் இரண்டாம் அலக்சாண்டர் என்ற பெருமையாக பதித்துக் கொண்டார்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Alauddin Khilji Facts

  Facts to Know About Alauddin Khilji, Who declared himself as Second Alexander of the World
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more