For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விநாயகர் சிலையை 3 ஆம் நாள் ஏன் ஆற்றில் கரைக்கிறோம் என்பதன் உண்மையான காரணம் தெரியுமா?

விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கான ஆன்மீக மற்றும் அறிவியல் காரணங்களை இந்த ஆன்மீகக் கட்டுரையில் காணலாம்.

|

விநாயகரை ஆதிகாலம் முதலே வணங்கி வந்தாலும் அதனை மக்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் பிரபலப்படுத்தியவர் பாலகங்காதர திலகர். 1893 ஆம் ஆண்டிலிருந்து விநாயகர் சதுர்த்தி என்ற விழா எடுத்து விமர்சையாக கொண்டாட வழிவகுத்தார்.

அவரது விருப்பப்படி முதன்முதலாக பூனாவில் உள்ள விநாயகர் கோவிலில் தான் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாடி முடித்த பிறகு அந்த சிலைகளை தண்ணீரில் கரைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். அறிவியல் ரீதியாக, ஆன்மீகம் ரீதியாக என்னென்ன காரணங்கள் இருக்கிறது தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழ்க்கை ரகசியம் :

வாழ்க்கை ரகசியம் :

உலகத்தில் தோன்றிய எல்லாருக்கும் ஒரு முடிவு உண்டு என்பதை உணர்த்துகிறார். மண்ணோடு மண்ணாகி புழுவாகி மீண்டும் நெளிவோம். எதுவுமே நிரந்தரமில்லை. என்பதை உணர்த்துகிறார்.

எது நிரந்தரம் :

எது நிரந்தரம் :

களிமண்ணில் உருவாகிறார் பிள்ளையார். அதாவது பஞ்சபூதத்தில் ஒன்றான மண். அதைப் பிரதிஷ்டை செய்யும்போது அதில் உயிர்ப்பு உருவாகிறது. கல்லிலும் உறைகிறார் கடவுள். அவரது சக்தியை நினைத்து உருகி வணங்குகிறோம்.

பின்னர், கொண்டாட்டமாய், பக்திப்பரவசத்துடன் விநாயகரை வழியனுப்புகிறோம். நம்மை விட்டு சென்றிடும் என்று பிரியம் காலம் தெரிந்து பிறகு நம் கண் முன்னால் தெரியும் நம்பிக்கைக்கு அளவீடே கிடையாது.

நீரில் கரையும் போது :

நீரில் கரையும் போது :

விநாயகரை நீரில் கரைக்கும் போது உயிர்ப்பில் இருந்து விடுபடுகிறான். பஞ்சபூதமான நீரில் கரைந்து மீண்டும் மண்ணாகவே மாறுகிறான். மாற்றம் இல்லாத மாற்றம். உறவைப் பேணத்தான் வேண்டும். ஆனால் அதுவே சாஸ்வதம் ஆகாது. அது மாயை.

அறிவியல் காரணம் :

அறிவியல் காரணம் :

ஆடிப்பெருக்கு அன்று வெள்ளம் ஏற்ப்பட்டு ஆற்றில் உள்ள மணலை எல்லாம் வெள்ள நீர் அடித்துச் சென்றிடும்.இதனால் அந்த இடத்தில் நீர் தங்காமல் நிலத்தடி நீர் குறைந்திடும். இதனை சமாளிக்கவே கெட்டியாக தங்கிடும் களிமண்ணினால் செய்த பிள்ளையாரை 3ஆம் நாள் ஆற்றில் கரைத்தார்கள்.

ஏன் 3 நாள் கழித்து?

ஏன் 3 நாள் கழித்து?

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் முடிந்து மூன்றாம் நாள் தான் சிலையை கரைப்பார்கள். இதற்கு காரணம், களிமண்ணினால் செய்யப்பட்ட விநாயகர் சிலை ஆரம்பத்தில் ஈரப்பதத்துடன் இருக்கும்.

இதனை அன்றைய தினமே கரைத்தால் ஈரமான களிமண் தங்காமல் வெள்ள நீரில் அடித்துச் சென்றுவிடும் என்பதால் தான் நன்றாக காயும் வரை காத்திருந்து மூன்றாம் நாள் கரைக்க வேண்டும் என்று உருவாக்கிக் கொண்டார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ganesh Chaturthi 2020: Why Lord Ganesha idol immersed in water?

Ganesh Chaturthi 2020: Why Lord Ganesha idol immersed in water? Read on...
Desktop Bottom Promotion