இந்த 4'ல நீங்க எந்த வகை? உங்களைப்பத்தி தெரிஞ்சுக்க இதப்படிங்க!

Posted By:
Subscribe to Boldsky
இந்த 4'ல நீங்க எந்த வகை? உங்களைப்பத்தி தெரிஞ்சுக்க இதப்படிங்க!- வீடியோ

உங்கள் உள்ளங்கை ரேகையில் உங்கள் ஒட்டுமொத்த வருங்காலம் மற்றும் காதல் வாழ்க்கை குறித்த அத்தனையும் அடங்கியிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? கைரேகை ஜோதிடத்தின் மூலம் இதை அறிந்துக் கொள்ள முடியும் என்கிறார்கள் ஜோதிட நிபுணர்கள்.

உள்ளங்கையில் இருக்கும் இதய ரேகையின் அமைப்பை பொருத்தும், அதன் நீட்சி எவ்வாறு உள்ளது என்பதை பார்த்துமே இருவரது காதல் மற்றும் எதிர்காலத்தை பற்றி சொல்லிவிட முடியுமாம்.

இதோ! இனி, நீங்களே உங்கள் இதய ரேகை அமைப்பை வைத்து உங்கள் லவ்தீக வாழ்க்கை பற்றி அறிந்துக் கொள்ளலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய ரேகை!

இதய ரேகை!

முதலில் உங்கள் இதய ரேகை எப்படி பயணிக்கிறது என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்.உங்கள் வலது கையில் இதய ரேகையை வைத்து தான் நாம் காதல் மற்றும் எதிர்காலத்தை பற்றி அறிந்துக் கொள்ள முடியும். இதய ரேகையின் நீட்சி எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தே ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அறிய முடியும். நேராக செல்கிறதா? அந்த விரல் நோக்கி மேலோங்குகிறது? அல்லது கீழே வளைந்து செல்கிறதா? போன்றவற்றை முதலில் காண வேண்டும். (படத்தில் இருப்பதை போல)

உறவுகள்!

உறவுகள்!

இதய ரேகையின் மற்றுமொரு பெயர் காதல் ரேகை ஆகும். இதய ரேகையை வைத்து தான் இருவரின் காதல் வாழ்க்கை பற்றி அறிந்துக் கொள்ள முடியும். ஒருவரது குணாதிசயங்கள் முதல் உறவில் அவர் எப்படிப்பட்ட நபராக இருப்பார், உணர்வு நிலை எப்படி இருக்கும் என்பது வரை இந்த இதய ரேகை வைத்து அறிந்துக் கொள்ள முடியும்.

அளவு!

அளவு!

ஜோதிட நிபுணர்கள் கூறுவதை வைத்து பார்க்கையில், இதய ரேகையின் நீளத்தை வைத்து ஒருவரது குணாதிசயங்கள் பற்றி அறிந்துக் கொள்ள முடியும் என கூறப்படுகிறது. நீளத்தை வைத்து அவரது ஆயுள் குறித்து அறியலாமாம். மிக சிறிய இதய ரேகை கொண்டுள்ளவர்கள் கொஞ்சம் தன்னலமாகவும், மற்றவர் நலம் குறித்து யோசிக்காத நபர்களாகவும் இருப்பார்கள் என கூறபடுகிறது.

ஒருவரது இதய ரேகை நீளமாக இருந்தால் அவர் ஸ்ட்ரைட் ஃபார்வார்ட் என்கிறார்கள். அவர்கள் மிகவும் நம்பகத்தன்மையுடன் நடந்துக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

கிளைகள்!

கிளைகள்!

சிலரது இதய ரேகையில் குறுக்கே, நெடுக்கே என கிளை ரேகைகள் இருக்கும். இதற்கு பல அர்த்தங்கள் கூறப்படுகின்றன. இதய ரேகையில் இருந்து மேல்நோக்கி கிளை ரேகைகள் சென்றால் நல்லது. கீழ்நோக்கி சென்றால் திருமண வாழக்கை நீடித்திருக்காது, இதுவே இதய ரேகையில் பிரிவுகள், விரிசல்கள் இருந்தால் அவர்கள் காதலுக்காக என்ன தியாகம் வேண்டுமானாலும் செய்வார்கள்.

நடுவிரல்

நடுவிரல்

உங்கள் இதய ரேகை நடுவிரல் நோக்கி இருப்பது போன்று இருந்தால் நீங்கள் லட்சிய வெறி கொண்ட நபராக இருப்பீர்கள். வாழ்வில் மென்மேலும் உயர வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் அதிகமாக இருக்கும்.

மேலும் உங்களிடம் நற்குணங்கள் அதிகமாக காணப்படும். மற்றவரை நீங்கள் கணிக்கும் முறை, நீங்கள் எடுக்கும் முடிவுகள் கச்சிதமாக இருக்கும். மற்றவரோடு இணைந்து பணியாற்றுவதில் சிறந்து விளங்குவீர்கள்.

மத்தியில்

மத்தியில்

நடுவிரல் மற்றும் ஆள்காட்டி விரலுக்கு மத்தியில் இதயரேகை மேல்நோக்கி சென்றால்...

நீங்கள் மிகவும் மரியாதை செலுத்தும், அன்பு காட்டும், கனிவான, நம்பகமான நபராக இருப்பீர்கள். வெளிப்படையாக பேசும் மனம் கொண்டிருப்பீர்கள். அனைவரும் விரும்பும் நல்ல மனிதராக நீங்கள் திகழ்ந்தாலும், உங்கள் மீது அக்கறையும், பாதுகாப்பு உணர்வும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஆள்காட்டி விரல்

ஆள்காட்டி விரல்

நம்பிக்கை தான் உங்கள் பலம். நீங்கள் உங்கள் வாழ்க்கையை மிகவும் நேசிக்கும் நபராக இருப்பீர்கள். ஒவ்வொரு நொடியையும், ஒவ்வொரு நாளையும் விரும்பி வாழும் மனிதராக திகழ்வீர்கள்.

தனியாக இருப்பினும் சரி, நண்பர்களுடன் இருப்பினும் சரி, உறவில் இருப்பினும் சரி நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக தான் இருப்பீர்கள். உங்கள் மகிழ்ச்சி மற்றவர்களை சார்ந்து இருக்காமல், உங்களை சார்ந்தே இருக்கும்.

கீழ்நோக்கி செல்லுதல்

கீழ்நோக்கி செல்லுதல்

அமைதி, பொறுமை, அக்கறை, கனிவான இதயம் போன்றவை உங்களது நற்குணங்கள். மற்றவர்கள் உங்களுடன் நெருக்கமாக, அன்புடன், உண்மையாக பழக காரணியாக இருக்கும்.

தர்மம் செய்வது, மற்றவருக்கு உதவி செய்தல், தொண்டு காரியங்களில் ஈடுபடுதல், சமுதாய பணிகளில் உங்களை உட்படுத்திக் கொள்வதில் நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Everything That You Need To Know About Your Heart Line!

Everything That You Need To Know About Your Heart Line
Subscribe Newsletter