நவராத்திரி அன்று கொலுவை தவிர லட்சுமி அருள் பெற வேறு என்ன செய்யலாம்?

Written By:
Subscribe to Boldsky

நவராத்திரி பெண்களின் விழாவாகும். அதற்காக ஆண்கள் இதிலிருந்து விலகி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு விலகவும் கூடாது. நிச்சயம் உங்களது குடும்ப பெண்கள் தனது துணை நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணியே நவராத்திரி பூஜை செய்வார். நீங்கள் இந்த பூஜை காலத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்து, பூஜை வெற்றி பெற உதவுங்கள். நவராத்திரி பூஜை என்றால் கொழு வைப்பது மட்டும் தானா? இந்த நல்ல நாட்களில் வேறு என்ன எல்லாம் செய்யலாம் என்பதை இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கூட்டு பிராத்தனை

கூட்டு பிராத்தனை

நவராத்திரி காலங்களில் குடும்பத்தார் அனைவரும் அதிகாலையிலேயே நீராடி கூட்டுப்பிராத்தனை செய்ய வேண்டியது அவசியம். பூஜை அறையை மற்றும் கொலு மேடையை சுத்தம் செய்து, உலக உயிர்கள் அனைத்தும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டும் ஐந்து முக விளக்கை ஏற்ற வேண்டும்.

குழந்தைகள்

குழந்தைகள்

குழந்தைகளின் தெய்வீக சிந்தனையை அதிகப்படுத்துங்கள். அபிராமி அந்தாதியில் உள்ள ஒரு பாடலை மனப்பாடம் செய்ய சொல்லுங்கள்.

பரிசு

பரிசு

கொலு பார்க்க வரும் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், பூ கொடுத்து வழியனுப்புங்கள். இதனால் உங்களது வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும்.

துர்க்கை வழிபாடு

துர்க்கை வழிபாடு

அம்மன் கோவில்களில் விளக்கேற்றுங்கள். மாலையில் விளக்கு பூஜை நடத்துங்கள். கன்னிப்பெண்கள் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தால் விரைவில் திருமணம் நடக்கும்.

கோ பூஜை

கோ பூஜை

பசுவிற்கு அருகம்புல், அகத்திக்கீரை கொடுத்து, மூன்று முறை சுற்றி வந்து வழிபட்டால் மூன்று தேவிகளின் மனம் குளிரும். அவர்களின் அருள் கிடைக்கும்.

உதவுங்கள்

உதவுங்கள்

ஆதரவற்ற குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் உங்களால் இயன்ற உதவிகளை செய்து, அன்னமிடுங்கள். இதனால் தெய்வத்தின் ஆசிர்வாதம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What we can do better than golu during navratri pooja

What we can do better than golu during navratri pooja