யாரும் முயற்சி செய்துவிட கூடாத ஏடாகூட உலக சாதனைகள் - டாப் 25!

Posted By:
Subscribe to Boldsky

கடினமாக உழைத்து, பெரும் பயிற்சிகள் மேற்கொண்டு, தவமாய் தவமிருந்து தான் சாதனைகள் செய்ய வேண்டும் என்றில்லை. உங்களுக்கு நல்ல மன உறுதி இருந்து சில எசக்கபிசக்கான விஷயங்கள் செய்ய தயாராக இருந்தாலும் சொல்லுங்கள், நீங்கள் உலக சாதனைகள் செய்யலாம்.

இந்த வகையில் பல உலக சாதனைகள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அக்குள் பகுதியை நுகர்ந்து பார்த்தல், புழுக்களை வாய்க்குள் அடைத்து வைத்தல், டிவி, சைக்கிள்களை சாப்பிடுவது என பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

இப்படி எல்லாமா சாதனை செய்வார்கள் என யோசிக்க வைத்தாலும், இவற்றை மேற்கொள்ள யாருக்கும் தைரியம் இருக்காது. முடிந்த வரை நீங்களும் முயற்சிக்காமல் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#25 மண்டை பத்திரம்!

#25 மண்டை பத்திரம்!

அமெரிக்காவை சேர்ந்த கெவின் ஷெல்லி என்பவர் ஒரே நிமிடத்தில் 46 டாய்லெட் இருக்கைகளை உடைத்து சாதனை புரிந்துள்ளார். இந்த விசித்திர சாதனையை இவர் கடந்த 2007ம் ஆண்டு ஜெர்மனியில் நிகழ்த்தினார். யார் முயற்சி பண்ணி பார்க்க போறீங்க.... சவாலுக்கு ரெடியா...?

#24 ஸ்ட்ரா!

#24 ஸ்ட்ரா!

ஒரே நேரத்தில் வாயில் அதிக எண்ணிக்கையிலான ஸ்ட்ராக்களை அடக்கிய கின்னஸ் சாதனையை மும்பையை சேர்ந்த ரிஷி தன்வசம் வைத்துள்ளார். இவர் இந்த சாதனையை கடந்த 2011ம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தினார். இவர் தனது கைகளின் உதவியோடு 496 ஸ்ட்ராக்களை ஒரே நேரத்தில் தனது வாயில் அடக்கி இந்த சாதனையை செய்தார். இந்த விசித்திர சாதனையை படைக்க, தனது அனைத்து பற்களையும் ரிஷி அகற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

#23 கண்!

#23 கண்!

கண்களை கொண்டு அதிகப்படியான எடையை தூக்கிய சாதனையை யு.கே-வை சேர்ந்த மஞ்சித் சிங் என்பவர் தன்வசம் வைத்துள்ளார். இவர் 16.2 கிலோ எடையை கண் இமைகள் மூலம் தூக்கி இந்த சாதனையை செய்தார்.

#22 தேனீக்கள்!

#22 தேனீக்கள்!

சீனாவை சேர்ந்த ருவன் லியங்மிங் எனும் நபர், தனது உடலை 63.7 கிலோ எடைக்கொண்ட 6,37,000 தேனீக்கள் மூலம் மூடி உலக சாதனை செய்துள்ளார். இந்த சாதனையை இவர் கடந்த 2016ல் நிகழ்த்தினார்.

#21 கார் பயணம்

#21 கார் பயணம்

கடந்த 2015ல் ரஷ்யாவில் ஒரே காரில் அதிகமான நபர்கள் பயணித்த சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்த சாதனைக்காக ஒரே காரில் 41 பேர் பயணம் செய்தனர். இதை சைபீரியன் ஃபெடரல் பல்கலைகழக மாணவர்கள் ஏற்பாடு செய்தனர். டொயோட்டா ராவ்4 என்ற காரில் இந்த சாதனையை செய்தனர்.

#20 தர்பூசணி

#20 தர்பூசணி

தனது தொடை மூலம் ஒரே நேரத்தில் மூன்று தர்பூசணியை மிக வேகமாக நசுக்கும் சாதனையை 2015ல் உக்ரேனை சேர்ந்த ஒல்கா என்பவர் செய்தார். இவர் வெறும் 14 நொடியில் இந்த சாதனையை செய்தார். இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

#19 ஏப்பம்

#19 ஏப்பம்

பர்கர் கிங் என அழைக்கப்படும் பவுல் எனும் நபர் கடந்த 2009ல் மிகவும் சப்தம் மிகுந்த ஏப்பம் வெளிப்படுத்தி ஒரு உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்த ஏப்பதின் போது பவுல் வெளிப்படுத்திய சப்தத்தின் அளவு 109.9 டெசிபல் ஆகும். இந்த கின்னஸ் உலக சாதனை நீண்ட வருடங்களாக தகர்க்க முடியாமல் இருக்கிறது. இந்த சப்தம் ஒரு பெரிய ஆர்கஸ்ட்ராவை விட சப்தம் மிகுந்தது என கூறப்படுகிறது.

#18 பால்

#18 பால்

பாலை அதிக தூரம் உறிஞ்சு துப்பும் சாதனை இது. இந்த சாதனையை துருக்கியை சேர்ந்த இல்கர் எனும் நபர் செய்துள்ளார். இவர் மூக்கு மூலமாக பாலை உறிஞ்சி, கண்கள் மூலமாக ஒன்பது அடி, இரண்டு அங்குலம் தூரமாக தெறிக்கவிட்டுள்ளார். இந்த சாதனை 2004ல் நிகழ்த்தப்பட்டது.

#17 கரப்பான்பூச்சி

#17 கரப்பான்பூச்சி

ஒரே நிமிடத்தில் அதிக கரப்பான்பூச்சி சாப்பிட்ட சாதனை கடந்த 2001ம் ஆண்டு, கென் எட்வர்ட் எனும் யூ.கேவை சேர்ந்த நபர் செய்துள்ளார். இவர் ஒரே நிமிடத்தில் 36 கரப்பான்பூச்சிகளை சாப்பிட்டு இந்த சாதனை நிகழ்த்தியுள்ளார்.

#16 மண்டை ஓடு

#16 மண்டை ஓடு

இந்த சாதனையை யாரும் முயற்சி செய்திட கூடாது. 1998ல் அமெரிக்காவை சேர்ந்த மைக்கல் ஹில் என்பவர் கத்தியால் குத்தப்பட்டு மரண படுக்கையில் இருந்தார். கிட்டத்தட்ட எட்டு அங்குலம் நீளம் இருந்த அந்த கத்தியை மருத்துவர்கள் மண்டை ஓட்டில் இருந்து அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் அகற்றினர். இது ஒரு உலக சாதனையாக இருந்து வருகிறது.

#15 நுகர்தல்

#15 நுகர்தல்

இது ஒரு கன்றாவியான உலக சாதனை. ஓஹியோவை சேர்ந்த மேடலின் எனும் பெண் 5600 பேரின் அக்குள் மற்றும் கால்களை நுகர்ந்து உலக சாதனை படைத்துள்ளார்.

#14 ஆப்பிள்!

#14 ஆப்பிள்!

தார்பூசணி நசுக்கியது விசித்திரமாக தெரியவில்லை என்பவர்களுக்கு இந்த சாதனை. ஆம்! ஒரே நிமிடத்தில் தனது பைசப் மூலமாக 14 அப்பில்களை நசுக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ட்ரூவ் எனும் நபர் கடந்த 2016 ஆண்டு சாதனை நிகழ்த்தியுள்ளார்.

#13 கண்கள்

#13 கண்கள்

தனது கண்களை பெரிதாக விரித்த சாதனையும் ஒருவர் செய்துள்ளார். அதாவது கண்களில் இருந்து 12 எம்.எம் அளவிற்கு வெளிவந்த படி கண்களை விரித்துள்ளார். கிம் காட்மேன் எனும் இந்த நபர் இஸ்தான்புல் பகுதியை சேர்ந்தவர். இந்த சாதனையை இவர் 2007ல் நிகழ்த்தியுள்ளார்.

#12 நீண்ட நேரம்

#12 நீண்ட நேரம்

அதிக நேரம் பாதாளத்தில் சிக்கி தப்பிய சாதனையும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 2010 ஆண்டு சிலியில் நடந்த ஒரு சுரங்க விபத்தில் 2,257 அடிக்கு கீழே 69 நாட்கள் ஒருவர் சிக்கி இருந்து உயிர் தப்பினார்.

#11 நத்தை

#11 நத்தை

2007ல் 11 வயதே நிரம்பிய ஃபின் கெல்லர் எனும் சிறுவன் தனது முகத்தில் 43 நத்தைகளை 10 நிமிடத்தில் நிரப்பி சாதனை நிகழ்த்தினான். இதற்கு முன்னர் 36என்ற அளவில் நிகழ்த்தப்பட்ட சாதனையை தகர்த்து தனது வெற்றியை பதிவு செய்தான் சிறுவன் ஃபின்.

#10 வயதான

#10 வயதான

யு.கேவை சேர்ந்த 93 ஆண்டுகள் 100 நாட்கள் வயதான தாமஸ் எனும் நபர் 2013ல் ஸ்காட்லாந்திலிருந்து, வடக்கு அயர்லாந்திற்கு ஏரோப்ளேன் விங்கில் பயணித்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

Image Credit: commons.wikimedia

#09 உதை

#09 உதை

ஆண்களின் தொடைக்கு நடு பகுதியான கவட்டியில் மிக வலுமையான அடி வாங்கி ஒருவர் சாதனை செய்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஜஸ்டிஸ் ஸ்மித் எனும் நபர் 35.4 கிலோமீட்டர் வேகத்தில் 500 கிலோ எடை கொண்ட காற்றின் வேகத்தில் அடி வாங்கி இந்த சாதனை செய்துள்ளார்.

#08 இடை

#08 இடை

அமெரிக்காவை சேர்ந்த கேத்தி ஜங் அனும பெண் வெறும் 15 அங்குலம் இடை அளவு கொண்டு சிறிய இடை கொண்டவர் என்ற உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். 1983ல் இருந்து தினமும் 23 மணிநேரம் இவர் இறுக்கமான உடை அணிந்து இந்த சாதனை செய்துள்ளார்.

#07 தேள்

#07 தேள்

2000ம் ஆண்டு அமெரிக்கவை சேர்ந்த டீன் ஷெல்டன் எனும் நபர் தனது வாயில் 7 அங்குலம் நீளம் கொண்ட தேளை 18 நொடிகள் வைத்திருந்துஅதிபயங்கரமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

#06 காஸ்மெடிக் சிகிச்சைகள்

#06 காஸ்மெடிக் சிகிச்சைகள்

1988 முதல் இந்த சாதனையை தன்வசம் வைத்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த கிண்டி ஜாக்சன் எனும் நபர். இவர் 47 வித்தியாசமான காஸ்மெடிக் சிகிச்சைகள் மேற்கொண்டுள்ளார். இதில் 9 முக அமைப்பு மாற்ற அறுவை சிகிச்சைகளும் அடங்கும். முகம் மட்டுமின்றி, மூட்டு, இடை, தொடை என உடல் எங்கிலும் இவர் சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

#05 இரும்பு கம்பி

#05 இரும்பு கம்பி

கடந்த 2012ல் இத்தாலியில் இந்த சாதனை அன்ரூவ் ஸ்டான்ஸன் எனும் நபரால் நிகழ்த்தப்பட்டது. இந்த சாதனையில், இவர் 10.91 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பியை மூக்கு வழியாக உள்ளே விட்டு, வாய் வழியாக வெளியே எடுத்துள்ளார்.

wikimedia commons

#04 டயட்

#04 டயட்

உடல் எடையை குறைக்க பலரும், பல வகையிலான டயட்டுகள் மேற்கொள்வதுண்டு. ஆனால், இந்த் டயட் கொஞ்சம் விசித்திரம். பிரஞ்சு நாட்டை சேர்ந்த மைக்கல் லாலிடோ எனும் நபர் 18 சைக்கிள், 15 சூப்பர் மார்கெட் ட்ராலிகள், 7 டிவி, 6 சரவிளக்குகள், 2 மெத்தை மற்றும் கணினி போன்றவற்றை உண்டு சாதனை படைத்துள்ளார்.

#03 புழுக்கள்

#03 புழுக்கள்

சார்லி பெல் எனும் நபர் மொத்தம் 2 சதுர அடி நீளமுள்ள புழுக்களை ஒருமணிநேரம் தனது வாய்க்குள் அடைத்து வைத்து இந்த விசித்திர உலக சாதனைகள் படைத்துள்ளார்.

#02 விக்கல்

#02 விக்கல்

அமெரிக்காவை சேர்ந்த சார்லஸ்-க்கு 1922ல் விக்கல் எடுக்க ஆரம்பித்தது. ஏதோ ஒரு விசித்திர மருத்துவ நிலை மாற்றத்தால், இவரது விக்கல் நிற்கவே இல்லை. இந்த விக்கல் பிப்ரவரி, 1990 வரை (68 வயது வரை) நீடித்துக் கொண்டே இருந்தது.

#01 முகத்தில் துளைகள்!

#01 முகத்தில் துளைகள்!

ஜெர்மனி சேர்ந்த ஜோல் மிக்லர் எனும் நபர் தனது முகத்தில் 11 துளைகள் இட்டுக் கொண்டு சாதனை செய்துள்ளார். இதில் ஒரு துளை 34 மி.மி உள்ளது, இதுவே இவரது முகத்தில் இருக்கும் மிகப்பெரிய துளை ஆகும்.

Image Credit: Youtube

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top 25: Weirdest World Records!

Top 25: Weirdest World Records!