For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகேஷ் அம்பானி பயன்படுத்தும் விலை உயர்ந்த பொருட்கள் - டாப் 10!

|

திருபாய் அம்பானியின் மகன்கள் முகேஷ் மற்றும் அணில் அம்பானி. இதில், முகேஷ் அம்பானி ஒருமுறை உலகின் முதல் பணக்கார இடத்தை பிடித்தும் சாதித்துள்ளார். இந்தியாவின் அசைக்க முடியாத பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இவரது சரியான திட்டமிடலும், சரியான துறைகளில் முதலீடு செய்வதன் காரணத்தாலும், குறுகிய காலத்தில் தனது ரிலைன்ஸ் நிறுவனத்தின் நிலையை பன்மடங்கு உயர்த்திட்டிவிட்டார்.

சீரியசான பிஸ்னஸ் முதல் கேளிக்கை முதல் முகேஷ் அம்பானி கால் பதிக்காத துறையே இல்லை எனும் வகையில் அத்தனை பிஸ்னஸ் செய்கிறார். இதில் ஆச்சரியம் என்னவெனில், பெரும்பாலான பிஸ்னஸ்களில் பல மடங்கு அதிக லாபம் ஈட்டி பல தொழிலதிபர்களை வியக்க வைத்துள்ளார்.

முகேஷ் அம்பானியிடம் இருக்கும் சில பொருட்கள் மிகவும் விலை உயர்ந்தவை. அதில் டாப் 10 பட்டியல் இங்கே...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அண்டிலா!

அண்டிலா!

உலகின் விலையுயர்ந்தது வீடுகளில் முதல் இடத்தில் இருக்கிறது அண்டிலா. இது மும்பையின் கும்பாலா ஏரியாவில் அமைந்துள்ளது. இதன் ஒட்டுமொத்த மதித்து ஒரு பில்லியன் டாலர்களை தாண்டும் என கருதப்படுகிறது.

ஏறத்தாழ அறுபது மாடிகள் கட்டலாம் என்ற உயரத்தில் வெறும் 27 மாடிகள் தான் கட்டியுள்ளனர். ஒவ்வொரு தளமும் மிக விசாலமான அகலம், நீளம் மற்றும் உயரத்துடன் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் உயரம் 570 அடி எனப்படுகிறது. நான்கு இலட்சம் சதுர அடியில் இந்த வீட்டை கட்டியுள்ளனர்.

வசதிகள்!

வசதிகள்!

இந்த வீட்டில் வேலைக்கு மட்டும் 600 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது போல ஐம்பது பேர் சேர்ந்த பார்க்க வசதியான ஹோம் தியேட்டர் இருக்கிறது. பார்க்கிங் செய்ய மட்டும் ஆறு தளங்கள் உள்ளன. அதிவேகமான 9 எலிவேட்டர்கள், மூன்று ஹெலிபாட் நிறுத்தம், நடனமாட தனி தளம், யோகா அரை, ஸ்விம்மிங் பூல், ஆரோக்கியம் மேம்படுத்த தனி அறை என சகல வசதிகளும் கொண்டுள்ளது நித அண்டிலா இல்லம்.

ஃபால்கோன் 900EX!

ஃபால்கோன் 900EX!

அம்பானியின் ஃபால்கோன் 900EX விமானம் சாட்டிலைட் டிவி, மியூசிக் சிஸ்டம், வயர்லஸ் கம்யூனிகேஷன், அம்பானிக்கென தனி கேபின் என பல வசதிகள் கொண்டுள்ளது. ஒரு தொழிலதிபருக்கு சிறந்த விமானம் இது. இந்த விமானத்தில் 8,340 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் ஒரு சிறிய மீட்டிங் கூட கூட்டலாம். இதன் விலை 43.3 மில்லியன் டாலர்கள் ஆகும்.

மேபேக் 62

மேபேக் 62

மேபேக் 62 என்பது ஆடம்பரத்தின் உச்சம் என கருதப்படும் கார். இது குண்டு வெடிப்பு மற்றும் தோட்டாக்கள் துளைக்காத வண்ணம் வடிவமைக்கப்பட்டது. இந்த காரில் இன்பில்ட் டிவி, கான்ஃபரன்ஸ்ல் பங்கேற்பதற்கான வசதிகள் என அனைத்தும் இருக்கிறது. இதன் விலை ஒரு மில்லியன் டாலர்கள் ஆகும்.

போயிங் பிஸ்னஸ் ஜெட் 2

போயிங் பிஸ்னஸ் ஜெட் 2

இது அம்பானியிடம் இருக்கும் இரண்டாவது ஜெட் விமானம் ஆகும். இதில் 1004 சதுரடி கொண்ட கேபின் இருக்கிறது. இந்த விமானத்தில் 78 பயணிக்கலாம். இந்த பிரைவேட் ஜெட்டின் விலை 73 மில்லியன் டாலர்கள் ஆகும்.

மெர்சிடிஸ் எஸ். கிளாஸ்!

மெர்சிடிஸ் எஸ். கிளாஸ்!

மேபேக் 62க்கு இணையான கார் இது. இதிலும் குண்டு மற்றும் தோட்டாக்கள் துளைக்காத வண்ணம் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் இருந்தபடி கான்ஃபரன்ஸ்ல் கலந்து கொள்ளலாம். லேப்டாப், டிவி திரைகள் உண்டு. 3.9 வினாடிகளில் அறுபது கிலோமீட்டர் வேகம் அடையும் திறன் கொண்டுள்ளது. அம்பானி இந்த காரை வாங்க ஒன்றரை இலட்சம் டாலர்கள் செலவு செய்துள்ளார்.

ஏர்பஸ் 319 கார்ப்பரேட் ஜெட்

ஏர்பஸ் 319 கார்ப்பரேட் ஜெட்

இது ஒரு பெரிய ஜெட் விமானம். இதில் 25 பயணிகள் பயணிக்கலாம். இதில் பெரியளவிலான கேளிக்கை கேபின் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்கை பார், ஃபேன்சி டைனிங் ஏரியா, தனித்துவமான லெதர் சீட்டிங் என பல்வேறு வசதிகள் கொண்ட இந்த விமானத்தின் விலை நூறு மில்லியன் டாலர்கள் ஆகும்.

மெர்சிடிஸ் SL500

மெர்சிடிஸ் SL500

இந்த மெர்சிடிஸ் SL500 காரிலும் தோட்டாக்கள் துளைக்காத பாதுகாப்பு உள்ளது. டர்போ 6L என்ஜின், 621 ஹார்ஸ்பவர், 7 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் என ஹைடெக் காராக இது அமைந்துள்ளது. இதன் விலை ஒரு இலட்சம் டாலர்கள் ஆகும்.

அம்பானி யாச்

அம்பானி யாச்

கார்கள், விமானங்கள் மட்டுமல்ல, அம்பானியிடம் கப்பலும் இருக்கிறது. யாச் வகை வாகனங்கள் வைத்துள்ளார் அம்பானி. இவருக்கென தனியாக சிறப்பம்சங்கள் கொண்ட யாச் தயாரிக்கப்பட்டது. இந்த யாச் ஒரு குதிரையின் காலை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எரிபொருள் சேமிப்பு அம்சங்கள் கொண்டுள்ளது. இந்த யாச்சில் எலிவேட்டர் வசதிகளும் உள்ளது. சகல வசதிகளும் கொண்டுள்ள இந்த யாச்சின் விலை என்ன என்பது வெளிப்படையாக அறியப்படவில்லை.

எப்படியும் சில நூறு மில்லியன் டாலர்கள் இருக்கும் என அறியப்படுகிறது.

ஆஸ்டன் மார்டின் ரேபிட்

ஆஸ்டன் மார்டின் ரேபிட்

அம்பானியிடம் இருக்கும் விலை உயர்ந்த கார்களில் இதுவும் ஒன்று. இது 4.4 வினாடிக்குள் அறுபது கிலோமீட்டர் வேகம் எட்டும் வகையில் திறன் கொண்டுள்ளது. மணிக்கு 203 மைல் வேகத்தில் செல்லும். இதன் விலை 1.7 இலட்சம் டாலர்கள்.

ரிலையன்ஸ் நிறுவனம்!

ரிலையன்ஸ் நிறுவனம்!

முகேஷ் அம்பானி இந்த நிறுவனத்தின் 44.75% பங்குகள் கொண்டுள்ளார். இதன் தலைமை அலுவலகம் மும்பையில் இருக்கிறது. பெட்ரோ-கெமிக்கல்ஸ், டெக்ஸ்டைல்ஸ், நேச்சுரல் ரிசோர்ஸ், ரீட்டைல், டெலி - கம்யூனிகேஷன்ஸ் என வருடத்திற்கு இவர் ஈட்டும் லாபம் மட்டும் 4.1 பில்லியன் டாலர்கள் என கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 10: Costliest Things Owned By Indias Richest Man Mukesh Ambani!

Top 10: Costliest Things Owned By Indias Richest Man Mukesh Ambani!
Story first published: Thursday, November 2, 2017, 11:23 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more