யார் இவர்? இந்திய அரசியலை புரட்டிப் போடும் அளவிற்கு வல்லமை கொண்ட தீனதயாள்!

Posted By:
Subscribe to Boldsky

தீனதயாள் உபாத்தியாயா பிறந்தநாள் இன்று, இவரை இன்றைய பா.ஜ.க-வின் தாய் கட்சியான பாரதிய ஜன சங்கத்தின் முதல் பொது செயலளார் என்பதைவிட, இந்தியத் தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமுகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர் மற்றும் அரசியல் அறிவியலாளர் என பன்முகங்கள் கொண்டவர் என தீனதயாள் உபாத்தியாயா அவர்களை குறிப்பிடலாம்.

1951ல் சியாமா பிரசாத் முகர்ஜி, பாரதிய ஜனசங்க கட்சியை துவக்கிய போது, தீனதயாள் உபாத்தியாயா கட்சியின் முதல் பொதுச் செயலரானார். தீனதயாள் உபாத்யாயா குறித்து சியாமா பிரசாத் முகர்ஜி,"இவரை போல இன்னும் கூடுதலாகஇரண்டு தீனதயாள் உபாத்யாயாக்கள் இருந்திருந்தால், இந்தியாவின் அரசியல் முகம் வேறு மாதிரி மாறியிருக்கும்" என்றார்.

1953இல் சியாமா பிரசாத் முகர்ஜி இறந்த பிறகு, ஜன சங்கம் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார் தீனதயாள் உபாத்தியாயா...

இந்த நாள், அந்த வருடம்: செப்டம்பர் 25.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பு!

பிறப்பு!

1916 - இந்தியத் தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமுகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர் மற்றும் அரசியல் அறிவியலாளர் என பன்முகங்கள் கொண்ட தீனதயாள் உபாத்தியாயா பிறந்தநாள்.

இவர் பா.ஜ.க-வின் முன்னோடி கட்சியான பாரதிய ஜன சங்கம் கட்சியின் மூத்த உறுப்பினர். மற்றும் முதல் பொது செயலாளர் ஆவார்.

1977 - இந்திய திரைப்பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் பிறந்த தினம் இன்று. இவர் கள்ளக்குறிச்சியில் பிறந்தவர். இவரை இயக்குனராக மட்டுமே நாம் அறிவோம்.

ஆனால், கல்லூரி படிக்கும் போதே சினிமாவில் ஆர்வம் கொண்டிருந்த முருகதாஸ். கல்லூரி கலை நிகழ்சிகளில், நாடகங்களில் நடிப்பது, பல நடிகர்களின் குரல்களில் மிம்மிக்கிரி செய்வது என அசத்தியுள்ளார்.

1968 - பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பிறந்த தினம்.

அசம்பாவிதம்!

அசம்பாவிதம்!

1992ல் விடுதலை புலிகளின் தாக்குதலில் யாழ்ப்பாணம், பூநகரியில் இருந்த 62 இராணுவக் காவல் அரண்கள் அழிக்கப்பட்டன.

1915ல் முதலாம் உலக போரில், கேம்பைன் இரண்டாம் போர் துவங்கியது.

2002ல் குஜராத்தில் இந்துக் கோயில் ஒன்றில் நடைப்பெற்ற மதவெறி வன்முறை காரணத்தால் 32 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாறு!

வரலாறு!

1513ல் ஸ்பானிஷ் கடல் ஆராய்ச்சியாளர் வாஸ்கோ நூனியெத் தே பால்போவா என்பவர் பெருங்கடல் ஒன்றை அடைந்தார். அந்த கடல் தான் பின்னாளில் பசிபிக் பெருங்கடல் என்ற பெயர் பெற்றது.

1912ல் நியூயார்க் நகரில் ஊடகவியலாளருக்கான பட்டதாரி கல்வி கொலம்பியா பல்கலைகழகத்தில் துவக்கப்பட்டது.

1926ல் அடிமைகள் வாங்கி, விற்று நடத்தப்படும் வணிகத்தைத் தடுக்கும் முறையில், பன்னாட்டு ஒப்பந்தம் ஒன்று உலக நாடுகள் அணியின் ஆதரவுடன் கையெழுத்திடப்பட்டது.

1962ல் அல்ஜீரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டது.

அறிவியல்!

அறிவியல்!

1992ல் மார்ஸ் அப்சர்வர் என்ற பெயரில் மார்ஸுக்கு 17 ஆண்டுகள் பயணம் மேற்கொண்டு தகவல்கள் அனுப்பும் செயற்கை கோளை அனுப்பியது நாசா. இதன் மதிப்பு $511 மில்லியன்.

ஆனால், 11 மாதத்திலேயே அந்த மிஷன் தோல்வியடைந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Day That Year: September 25!

This Day That Year: September 25,