40 மணிநேரம் மட்டுமே மனைவி - ஹிட்லரை பற்றி வெளிவராத வரலாற்று மர்மங்கள்!

Subscribe to Boldsky

ஹிட்லர் என்றாலே கொடுங்கோல் ஆட்சியாளன். யூதர்களை இரக்கமின்றி கொத்துக் கொத்தாக கொலை செய்து கொடூரன் என்ற பிம்பம் தான் இருந்து வருகிறது. இதற்கு மாற்றுக் கருத்தே இல்லை. இது போக சிலருக்கு ஹிட்லரின் குழந்தை பருவம் மிகவும் மோசமாக இருந்தது. ஹிட்லரின் தந்தை, இவரது தாயையும், இவரையும் நிறைய கொடுமை செய்துள்ளார், அது இவரது மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் அறிந்திருப்பார்கள்.

These Eight Things Will Change Your Perception About Hitler!

Cover Image Credit: Wikimedia Commons

ஆனால், ஹிட்லருக்கும் ஒரு காதல் கதை இருந்தது. அவர் பெண்கள் மீது பெரும் ஈர்ப்பு கொண்டிருந்தவர் என உங்களுக்கு தெரியுமா? யூத குலத்தின் பெரும் எதிரி, யூதர்களை தனது வாழ்நாள் முழுக்க வெறுத்தார், முற்றிலும் அழிக்க பார்த்தார் என படித்தறிந்த உங்களுக்கு, ஹிட்லர் ஒரு யூத பெண்ணை காதலித்தார் என்பது பற்றி தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யூத பெண் மீது காதல்!

யூத பெண் மீது காதல்!

ஸ்டீபனி ஐசாக் எனும் யூத பெண் மீது ஹிட்லருக்கு அலாதியான பிரியமும், காதலும் இருந்ததாம். ஸ்டீபனி ஐசாக் ஹிட்லருடன் பள்ளியில் படித்தவர். பள்ளி பருவத்தில் ஹிட்லர் மிகவும் கூச்சமுடைய நபராக இருந்த காரணத்தால், இவர் ஸ்டீபனி ஐசாக்கிடம் தனது விருப்பதையும் கூறியதில்லை, ஏன் ஸ்டீபனி ஐசாக்கிடம் ஒரு வார்த்தை கூட தனது உணர்வுகள் குறித்து பேசியதில்லையாம் ஹிட்லர்.

முறையற்ற நடத்தை!

முறையற்ற நடத்தை!

ஹிட்லருக்கு புகை பழக்கம், இல்லை, மது அருந்தமாட்டார், அவர் பெண்களிடம் தவறாக நடந்துக் கொண்டதில்லை. காதலித்து திருமணம் செய்து கொண்டவர் என பலமுறை நாம் கேட்டு, படித்து அறிந்திருப்போம். ஆனால், ஹிட்லர் தனது சகோதர / சகோதரியின் மகள் ஒருவருடன் முறையற்ற வகையில் தவறாக நடந்துக் கொண்டு வந்தார் என கூறப்படுகிறது.

கெலி ரூபல்

கெலி ரூபல்

கெலி ரூபல் எனும் அந்த பெண்ணிடம் அவரது அனுமதியின்று பலமுறை தகாத முறையில் அணுகியுள்ளார் ஹிட்லர். 1929லிருந்து, மரணம் வரைக்கும் ஹிட்லருடன் தான்ஒரு அப்பார்ட்மெண்ட்டில் வாழ்ந்து வந்துள்ளார் கெலி ரூபல்.

செப்டம்பர் 18,1931ல் தனது 23 வயதில் ஹிட்லரின் செக்சுவல் டார்ச்சர் தாளாமல் கெலி ரூபல் தற்கொலை செய்துக் கொண்டார் என்றும் ஹிட்லர் பற்றிய சில இரகசிய கோப்புகளில் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

ஹிட்லரின் துப்பாக்கி!

ஹிட்லரின் துப்பாக்கி!

கெலி ரூபல் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக அறியப்படுகிறது. மேலும், இவர் பயன்படுத்திய துப்பாக்கி ஹிட்லரின் பிஸ்டல் ஆகும். கெலி ரூபல் உடனான உறவை மிகவும் நெருக்கமாக, முக்கியமானதுமாக கருதியுள்ளார் ஹிட்லர்.

ஈர்ப்பு!

ஈர்ப்பு!

ஹிட்லருக்கு பெண்கள் மீது ஈர்ப்பு அதிகம். இதை அவரே அறிந்ததும் உண்டு. இது தனது அரசியல் வாழ்க்கைக்கு தடையாக இருக்கும் என்பதால் இதை வெளிக்காட்டாமல் இருந்துவந்தார். இதுகுறித்து ஜெர்மன் மக்களுக்கே தெரியாது. போர் முடிவு வரும் வரை பலருக்கும் இவா பிரவுன்ஹிட்லரின் துணையாக இருந்தது தெரியவந்தது.

இவர் ஹிட்லருக்கு 40 மணிநேரதிற்கும் குறைவாக தான்மனைவியாக இருந்தார் என சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

மனைவி!

மனைவி!

ஹிட்லரின் மனைவி இவா பிரவுன் ஹிட்லரிடம் உதவியாளராக இருந்தவர். ஹிட்லரிடம் இவர் சேரும் போது இவரது வயது 17. உதவியாளராக மட்டுமின்றி, ஹிட்லரின் புகைப்படக் கலைஞரிடம் இவர் மாடலாகவும் இருந்து வந்தார். ஹிட்லருடன் உறவில் இருந்த சமயத்தில் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார் இவா பிரவுன். இவா பிரவுனும் ஒரு புகைப்பட கலைஞர் ஆவார்.

இவா பிரவுன் தற்கொலை...

இவா பிரவுன் தற்கொலை...

இவா பிரவுன் தனது தந்தையின் பிஸ்டல் பயன்படுத்தி தனது நெஞ்சில் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். இந்த சம்பவம் ஆகஸ்ட் 10 அல்லாது 11, 1932ல் நடந்ததாக அறியப்படுகிறது. ஆனால், வரலாற்றில் இது பெரும் நிகழ்வாக பதிவு செய்யப்படவில்லை. ஆனால், இது ஹிட்லரை மிகவும் பாதித்தது. பிறகு இவா பிரவுன் கொஞ்சம், கொஞ்சமாக உடல்நலம் தேற ஆரம்பித்தார்.

காதல்!

காதல்!

இவா பிரவுனின் இந்த தற்கொலை முயற்சிக்கு பிறகு தான் ஹிட்லர் இவா பிரவுனுடன் நெருக்கமாக ஆரம்பித்தார். மெல்ல, மெல்ல இவரும் 1932-ன் இறுதியில் காதலர்களாக மாறினார். சில சமயங்களில் ஹ்ட்லரின் முனிச் அப்பார்ட்மெண்ட்டில் இவா பிரவுன் நள்ளிரவு வரை எல்லாம் தங்கியுள்ளார்.

வண்டி ஓட்ட தெரியாது...

வண்டி ஓட்ட தெரியாது...

ஹிட்லருக்கு வண்டி ஓட்ட தெரியாது. வண்டி ஓட்ட கற்க வேண்டும் என்று ஒரு போதும் ஹிட்லர் முயற்சி செய்ததும் இல்லை. மக்கள் முன்னிலையில் இதற்கு பயிற்சி செய்து கீழே விழுந்துவிட் கூடாது, தோல்வி அடைந்துவிட கூடாது என்பதில் மட்டுமே உறுதியாக இருந்தார் ஹிட்லர். மேலும், தன்னிடம் நிறைய ஓட்டுனர்களை பணிக்கு வைத்திருந்தார். ஒருநாள் கூட ஓட்டுனர் இருக்கையில் ஹிட்லர் அமர்ந்தது இல்லை.

ஒரு விரை!

ஒரு விரை!

1916ல் ஒரு போரின் போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக, ஹிட்லர் அபாயமான காயத்திற்குள்ளானார். அவரை காப்பாற்ற வேண்டும் எனில், இரண்டில், ஒரு விரையை (Testicle) நீக்க வேண்டும் என மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

ஹிட்லரின் கோபம், பொறாமை, பழிவாங்கும் குணம் மற்றும் மனிதத்தன்மையற்ற செயலுக்கு கிடைத்த பரிசு தான் இதென மக்கள் பேசினார்கள்.

மற்றுமொரு பிரச்சனை...

மற்றுமொரு பிரச்சனை...

ஹிட்லருக்கு இருந்த மற்றுமொரு பிரச்சனை, என்ன சாபிட்டாலும், அவருக்கு வயிறு பிரச்சனை வந்துவிடும். வயிற்று வலி, வாயுத்தொல்லைக்கு ஆளாகிவிடுவார். இது ஹிட்லரை மிகவும் அசௌகரியமாக உணர செய்தது. இதற்கு தீர்வு காண 29 வெவ்வேறு மருத்துவம் மேற்கொண்டார் ஹிட்லர். ஆனால், எதுவும் அவருக்கு பயனளிக்கவில்லை.

கடவுளாக வேண்டும்...

கடவுளாக வேண்டும்...

சிறு வயதில் ஹிட்லருக்கு கடவுளாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இருவரு குளிர்காலத்தில் குளத்தில் ஹிட்லர் விழுந்துவிட்டார். அப்போது அவரை ஒரு போதகர் தான் காப்பாற்றினார். அந்த தருணத்தில் இருந்து தான் எதிர்காலத்தில் ஒரு நாள் போதகராகி, கடவுளுக்கு சேவை செய்ய வேண்டும் என விரும்பினார்.

புகை!

புகை!

மிக ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்த ஹிட்லர், பல ஸ்பெஷல் விஷயங்களை அனுபவித்த ஹிட்லர் தன் வாழ்நாளில் புகை வெறுத்தார். இளம் வயதில் இவர் நிறைய புகைத்துள்ளார். ஆனால், காலப்போக்கில் புகையை மிகவும் வெறுக்க துவங்கினார். இதற்கு காரணம், பணத்தை வீணடிக்கும் செயல்களில் புகையும் ஒன்றென அவர் கருதியதே ஆகும்.

அசைவம்!

அசைவம்!

அதே போல ஹிட்லர் அசைவ உணவையும் விரும்பியதில்லை. இதற்கு காரணம் உடல் ஆரோக்கியம் மேலான அக்கறை எல்லாம் இல்லை. கால்நடைகள், விலங்குகள் மீது மிகவும் விரும்பும் நபர் ஹிட்லர். ஆகையால், அவற்றை கொன்று உண்பதில் அவருக்கு உடன்பாடு இல்லை. இதனாலே சைவ உணவுகளை மட்டும் உண்டு வந்தார் ஹட்லர். இதையே மற்றவருக்கும் உரைத்தார். இதுகுறித்து ஹிட்லர் தனது டைரியிலும் குறிப்புகள் எழுதி வைத்துள்ளார்.

பிச்சை!

பிச்சை!

உலகைய அச்சுறுத்திய ஒரு சர்வாதிகாரி, கார் லோன் கேட்டு கெஞ்சி கடிதம் எழுதினார் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம்! செப்டம்பர் 1924ல் லண்டன்ஸ்பெர்க் கோட்டை சிறையில் இருந்த போது மெர்சிடஸ் கார் வாங்க கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இந்த கடிதத்தை 2010ல் ஜெர்மனியில் ஏலம்விட்டனர்.

ஒரே ஒரு யூதர்!

ஒரே ஒரு யூதர்!

இக்கட்டான பொருளாதார காலக்கட்டத்தில் தனது குடும்பத்திற்கு இலவசமாக மருத்துவ சேவை செய்த ஒரே ஒரு யூத-ஆஸ்திரிய மருத்துவரை மட்டும் ஹிட்லர் பாதுகாத்து வைத்திருந்தார். இவரை ஹட்லர் நோபல் யூதன் என அழைத்து வந்தார்.

பெண்ணாக மாற்ற!

பெண்ணாக மாற்ற!

அமெரிக்காவை சேர்ந்த ஒரு இரகசிய சேவை மையம், ஹிட்லரின் உணவில் பெண்களின் ஹார்மோன்கள் அதிகரிக்கும் வகையில் கலப்பு செய்ய முயற்சித்தது. இதன் மூலமாக ஹிட்லர் பாதிக்கப்படுவார், பெண் குணம் அடைவார் என அவர்கள் கருதினர்.

இது போல இன்றளவும் ஹிட்லர் பற்றி பெரிதும் நாம் அறியாத தகவல்கள், உண்மைகள் பலவன இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    These Eight Things Will Change Your Perception About Hitler!

    These Eight Things Will Change Your Perception About Hitler!
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more