நவராத்திரி பூஜையினால் இழந்த ராஜ்ஜியத்தை மீட்டெடுத்த அரசரின் கதை !!

Posted By:
Subscribe to Boldsky

இந்தியா முழுவதும் நவராத்திரி விழா கொண்டாடப்பட இருக்கிறது. நவராத்திரி கொண்டாடப்படுவதற்கு முன்னதாக நவராத்திரி வழிபாட்டின் மகிமையை உணர்த்தும் கதையை தெரிந்து கொள்ளலாம்.

காட்டில் கணவர் மனைவி வாழ்ந்து வருகிறார்கள். மிகவும் வறுமையில் இருக்கும் அவர்கள் மிகவும் துன்பத்தில் இருக்கிறார்கள் கணவருக்கு தீர முடியாத நோய் வேறு அடுத்து என்ன செய்யப்போகிறோம்? உணவைத் தேடி செல்வதா? கணவருக்கான மருந்துகளை தேடுவதா? உணவா? பொருளா? மருந்தா என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது வாசலில் யாரோ அழைக்கும் ஓசை கேட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாசலில் மகரிஷி :

வாசலில் மகரிஷி :

உதவி கேட்டு மகரிஷி ஒருவர் வந்திருந்தார். அழுது வீங்கிய கண்களுடன் இந்தப் பெண்ணைப் பார்த்தவுடனேயே, மகரிஷி ஒரு உண்மையை கண்டுபிடித்தார். உன்னைப் பார்த்தால் அரச குடும்பத்தைச் சேர்ந்தவளைப் போல இருக்கிறது. என்ன ஆயிற்று? ஏன் இங்கே வந்திருக்கிறாய் ? என்று கேட்டார்.

வருத்தம் :

வருத்தம் :

"எங்களுடைய தயாதிகள் எங்கள் மீது பொறாமைபட்டு எங்களுடன் போர்புரிந்து எங்களை தோற்கடித்துவிட்டார்கள்" என்று வருத்தப்பட்டிருக்கிறாள். உண்மையை அறிந்த முனிவர் ஆறுதல் அளித்ததோடு, அருகில் இருக்கும் பஞ்சவடியில் எழுந்தருளியிருக்கும் அம்பிகையை பூஜை செய்தால் இழந்த ராஜ்ஜியம் மீண்டும் கிடைக்கும் அதோடு வம்சத்தை விரித்தி செய்ய புத்திரனும் பிறப்பான் என்கிறார்.

Image Courtesy

தரிசனம் :

தரிசனம் :

அதைக் கேட்டு மகிழ்ந்த அந்தப் பெண்மணி தன் கணவருடன் பஞ்சாவடிக்கு செல்கிறாள். இவரின் வீட்டிற்கு வந்த அங்கிரஸ முனிவர் அங்கே இருந்தார். அவர் முன்னின்று நடத்திய நவராத்திரி பூஜையை செய்து வைத்தார்.

Image Courtesy

வாழ்க்கைச் சக்கரம் :

வாழ்க்கைச் சக்கரம் :

பூஜையை முறைப்படி முடித்த பின்னர் அங்கிரஸர் முனிவருடன் அவரின் ஆசிரமத்திற்கே சென்றனர். அங்கே அரசர் நோயிலிருந்து மீண்டார். அரசிக்கு சூரியப் பிரதாபன் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

Image Courtesy

திரும்பிய வாழ்க்கை :

திரும்பிய வாழ்க்கை :

அங்கிரஸ முனிவரை குருவாக ஏற்ற சூரியப் பிரதமன் அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தான். தன் பெற்றோர் ஏமாற்றப்பட்ட கதையை கேட்டு , பகைவர்களுடன் போரிட்டு தங்களின் நாட்டை மீட்டு வருகிறான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Story about navratri

Story about navratri
Story first published: Friday, September 15, 2017, 10:46 [IST]
Subscribe Newsletter