நடிகர் ஆர்யாவின் Soul Mate தேடுதலுக்கு பின்னால் இருக்கும் கார்ப்ரேட் சூழ்ச்சி!

Posted By:
Subscribe to Boldsky

எல்லாருக்கும் தனக்கான வாழ்க்கைத் துணை குறித்த நிறைய எதிர்ப்பார்புகள் இருக்கும். எல்லாமே நினைப்பது போலவே நடந்து விட்டால் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்குரிய சுவாரஸ்யம் இல்லாமல் விரைவிலேயே அழுத்து விடும்.

வாழ்க்கையில் எல்லாமே நீங்கள் திட்டமிடும்படி தான் நடக்க வேண்டும் என்றால் எதுவுமே நடக்காது.

திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பெரும் எதிர்ப்பார்புகளை கொண்டிருக்கும் விஷயம் தான். புதிதாக வரவிருக்கும் தனக்கான துணையைப் பற்றியும் அந்த நபருடனான வாழ்க்கைப் பயணம் எப்படியிருக்கும் என்ற கேள்விகள் பல யோசனைகளை முன்னெடுக்க வைக்கும்.

இன்றைக்கு நம்மூரில் இன்னும் பாரம்பரியமாக செய்யப்படும் கடைபிடிக்கப்படும் விஷயங்களில் திருமணமும் ஒன்று. அதையும் இன்றைக்கு நவீனம் என்ற பெயரில் பல மாறுதல்களை செய்திருக்கிறோம். இதோ நடிகர் ஆர்யா புதிதாக ஒரு திட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்.

ஆர்யா முன்னெடுத்திருக்கும் திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால் 1930களில் நடைப்பெற்ற ஓர் சம்பவத்தை தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சந்தை :

சந்தை :

அது ஒரு நீண்ட சந்தை வெயில் மழை பாராது வரிசையாக கறுப்பின பெண்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். வறுமையினாலும், வயிற்றுப் பிழைப்புக்காக வேறு வழியின்று குறைந்த கூலியானாலும் அதாவது கிடைத்ததே என்று காத்திருந்தார்கள்.

அவர்கள் என்ன பொருளை விற்றுக் கொண்டிருந்தார்கள் தெரியுமா? தங்களையே விற்க நின்றிருந்தார்கள்.

ஆம், அடிமைகளாக தன்னை யாராவது தேர்ந்தெடுத்துச் செல்ல மாட்டார்களா என்று அந்தப் பெண்கள் காத்திருந்தார்கள்.

Image Courtesy

Bronx Slave Market :

Bronx Slave Market :

ப்ரோன்க்ஸ் ஸ்லேவ் மார்க்கெட்டில் தனக்கான பணிப்பெண்ணை / அடிமையை தேர்ந்தெடுக்க வெள்ளைக்காரச் சீமாட்டிகள் வரிசையாக வருவர்கள். நின்றுக் கொண்டிருக்கும் பெண்ணைப் பார்த்து தனக்கான தேவைகளுக்கு ஏற்றபடி மிகவும் சொற்பமான கூலிக்கு பெண்களை அடிமைகளாக அழைத்துச் செல்வார்கள்.

Image Courtesy

நூற்றாண்டுச் சோகம் :

நூற்றாண்டுச் சோகம் :

இது பல ஆண்டுகளாக தொடர்ந்திருக்கிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்த பத்திரிகையாளர் மார்வெல் குக் அடிமைகளோடு அடிமையாய் தானும் சேர்ந்து நின்று கொண்டார்.

வெள்ளைக்காரர்கள் எப்படி இந்த அடிமைகளை தேர்ந்தெடுக்கிறார்கள் அவர்களுக்கு அங்கே என்ன மாதிரியான வேலை வழங்கப்படுகிறது? என்ன உணவு கொடுக்கிறீகள்? சொன்னபடி கூலி கொடுக்கிறார்களா என்று அண்டர் கவர் ஜர்னலிசம் மூலமாக செய்து முடித்தார்.

அதனை நான் ஒரு அடிமை என்ற தலைப்பில் ஐந்து பாகங்களாக அவர் பணியாற்றிக்கொண்டிருந்த பத்திரிக்கையில் வெளியானது. வெள்ளைக்காரர்களின் மனதையே உலுக்கும் கட்டுரைகளாக அது இருந்தது.

Image Courtesy

2017 :

2017 :

இதே போன்றதொரு சம்பவம் தான் தற்போது நடக்கவிருக்கிறது. அடிமைக்கு பதிலாக வாழ்க்கைத் துணை என்று பெயர் மாற்றிக் கொள்ளலாம்.

கார்ப்ரேட் உலகம் அல்லவா? இந்த சம்பவத்தை பிரபலப்படுத்தி, விளம்பரப்படுத்தி மக்களை பார்க்கவைக்கலாம் என்று களத்தில் இறங்கியிருக்கிறது ஒரு கூட்டம்.

இன்றைக்கு பெண் பார்க்கும் படலத்தை நவீனம் என்றும் புதுமை என்றும் மேற்பூச்சு பூசி ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்கள்.

உண்மையில் இதில் புதுமை என்று ஒன்றுமில்லை, நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் அடிமைத்தனத்தை ஒழித்துக் கட்டியதை இன்றைக்கு தொழில்நுட்பம் உதவியுடன் மீண்டும் உயிர்பிக்கிறார்கள் அவ்வளவு தான்.

வீடியோ :

வீடியோ :

இன்றைக்கு மிகப்பெரிய வணிகமாக மாறிவிட்ட திருமணத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார் நடிகர் ஆர்யா. நேற்று அவர் ட்விட்டரில் வெளியிட்ட ஓரு வீடியோவில் நான் கல்யாணத்துக்காகப் பொண்ணு தேடிட்டிருக்கேன்.

பொதுவா, எல்லோரும் அவங்க லைஃப் பார்ட்னரை அவங்க வொர்க் ப்ளேஸ், ஃப்ரெண்ட்ஸ், ஃபேமிலி, ரிலேட்டிவ்ஸ் மூலமா தேடிப்பாங்க அல்லது மேட்ரிமோனியல் சைட்ஸ்ல பார்ப்பாங்க.

ஆனா, நான் அப்படியில்லைங்க. எனக்குப் பெரிய டிமாண்ட்ஸோ, கண்டிஷன்ஸோ எதுவும் கிடையாது. உங்களுக்கு என்னைப் பிடிச்சிருந்தா, நான் உங்களுக்கு நல்ல லைஃப் பார்ட்னரா இருப்பேன்னு நீங்க நினைச்சீங்கன்னா... ப்ளீஸ் கால் என்று சொல்லி ஒரு எண்ணை கொடுத்திருந்தார்.

ப்ராங் :

ப்ராங் :

இப்படி சொன்னதுமே பலரும் எதோ ப்ராங் என்றே நினைத்துவிடுவார்கள் என்று அவர்களாக்கவும் அதே வீடியோவில், இதை ஃப்ராங் என்றோ, விளம்பரம் என்றோ நினைத்து விடாதீர்கள் என்றும் சொல்லியிருக்கிறார்.

இதில் எதோ விஷயம் இருக்கிறது என்று சொல்லி பலரும் பகிர இணையத்தில் பயங்கர வைரலானது.

மாப்பிள்ளை ஆர்யா :

மாப்பிள்ளை ஆர்யா :

மாப்பிள்ளை ஆர்யா என்ற வெப்சைட் தளம் புதிதாக துவங்கப்பட்டிருக்கிறது. இதில் ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அதில் அவர்களுடைய முழுத் தகவலையும், பத்தாம் வகுப்பு சான்றிதழிலிருந்து பாஸ்போர்ட் தகவல் வரை எல்லாமே கேட்டிருக்கிறார்கள்.

இதில் அப்ளை செய்ய, தேர்வு செய்யும் முறை என்று மிகப்பெரிய பட்டியலையே இணைத்திருக்கிறார்கள்.

ஐ அக்ரீட் :

ஐ அக்ரீட் :

ஏதோ அவசரத்தில் ஐ அக்ரீட் என்ற பாக்ஸை தெரியாத்தனமாக க்ளிக் செய்து விட்டால் மிகப்பெரிய கார்ப்ரேட் சுழலில் சிக்குவது உறுதி.

கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட திட்டம் இது. இதன் பின்னால் மிகப்பெரிய டீம் செயல்படுகிறது.

அப்ளை செய்கிறவர்கள் அவர்களுடைய போட்டோ மற்றும் அறுபது வினாடிகளுக்குள்ளாக பேசிய வீடியோவையும் இத்தகவல்களுடன் சேர்ந்து இணைக்க வேண்டும் அப்போது தான் இந்தப் போட்டியில் நுழையவே முடியும்.

ஆடிஷன் :

ஆடிஷன் :

இதில் ரிஜிஸ்டர் செய்தவர்களை கிரவுண்ட் லெவல் ஆடிஷனுக்கு அழைக்கப்பார்கள். இது பல்வேறு ஊர்களில் நடக்கும். அதன் பின்னர் படிப்படியாக எலிமினேட் செய்யப்படுவார்கள்.

நீங்கள் பகிர்ந்திருக்கும் தகவல்கள் எல்லாம் உண்மையானது தானா என்று சொல்லி ஒரு டீம் விசாரிக்கும் அவர்களுக்கு நீங்கள் அதவாது அப்ளை செய்திருப்பவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

அதன் பிறகு சுமார் 30 நிமிடங்கள் வரை போன் இண்டர்வியூ இருக்கும். அதிலும் நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். நடுவில் போன் நெட்வொர்க் பிரச்சனை செய்து கட் ஆகக்கூடது.

அப்படியானால் நீங்கள் டிஸ்க்வாலிஃபை

இப்படியாக ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டவர்கள் அடுத்தக்கட்டமாக இன்னொரு ஊரில் நடைபெறும் ஆடிஷனுக்கு அழைக்கப்படுவார்கள்.

 பரிசோதனை :

பரிசோதனை :

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முன் கூட்டியே ஆடிஷன் நடக்கும் இடம் மற்றும் ஷூட் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும்.அதில் நீங்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும்.

அங்கே இதில் தொடர்கிறீர்களா என்று மீண்டும் உங்களிடம் உறுதி செய்யப்படும். ஆடிஷன் நடைபெறும் ஊருக்குச் செல்வது, அங்கே தங்குவது உட்பட எல்லா செலவுகளையும் நீங்களே ஏற்க வேண்டும்.

ஆடிசன் டீம் மூலமாக உங்களுடைய அனைத்து டாக்குமெண்ட்கள் சரி பார்க்கப்படும். உங்களுடைய பெயர், வயது, முகவரி,பாலினம், திருமண விவரங்கள், நீங்கள் எந்த தேசத்தை சேர்ந்தவர்கள், பாஸ்போர்ட் விவரங்கள் போன்றவை பரிசோதிக்கப்படும்.

பேனல் ஆஃப் ஜூரி :

பேனல் ஆஃப் ஜூரி :

அப்போது நீங்கள் ஒரிஜினல் டக்குமெண்ட்களை சமர்பிக்க வேண்டும்.அப்போது நீங்கள் போட்டோகாப்பி கொடுத்தால் டிஸ்க்வாலிஃபை செய்யப்படுவீர்கள்.

அவர்கள் கேட்கிற எல்லா தேவைகளும் பூர்த்தியானால் அடுத்த கட்டமாக வீடியோ ஆடிஷன் செய்யப்படும். அவை பதிவு செய்யப்பட்டு ‘பேனல் ஆஃப் ஜூரி 'அதனைத் தேர்ந்தெடுப்பார்கள்.இவற்றில் யார் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கொடுக்கிறார்களோ அவர்களை ஜூரிக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

ஒரு வேலை நீங்கள் தேர்வாகவில்லை என்றால் ஜூரிக்களை எந்த கேள்வியும் கேட்க முடியாது.

ஆக்டிவிட்டி :

ஆக்டிவிட்டி :

தொடர்ந்து பல்வேறு ஆக்டிவிட்டிக்கள் கொடுக்கப்படும் அவற்றில் எல்லாம் நீங்கள் பங்கேற்று முன்னேற வேண்டும். ஒரு வேலை அதில் உங்களால் பங்கேற்க முடியவில்லை என்றால் இந்தப் போட்டியில் தொடர முடியாது.

இதுப்போன்ற தகவல்களுடன் கூடுதலாக இருக்கக்கூடிய ஜெனரல் ரூல் என்ன தெரியுமா? இதில் ரிஜிஸ்டர் செய்திருக்கும் பெண் மூலமாகவோ அல்லது அவரது குடும்பத்தினர் அல்லது அவரது அவரது நண்பர்கள் மூலமாக ஆர்யா ,அவரது உதவியாளர்கள், ஆபிசர்கள் யாராவது மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும்.

யாரெல்லாம் பங்கேற்கலாம் :

யாரெல்லாம் பங்கேற்கலாம் :

பதினெட்டு வயதிற்கு மேற்ப்பட்ட இந்தியாவில் வசிக்கக்கூடிய எல்லாப் பெண்களும் இதில் பங்கேற்க முடியும் சிலரைத் தவிர அவர்கள் யார் தெரியுமா? இதன் பின்னணியில் இயங்கக்கூடிய டீம், கிரிமினல் குற்றங்களில் ஈடுப்பட்டவர்களின் குடும்பத்தினர், வெளிநாட்டினர் பங்கேற்க முடியாது.

மிக முக்கியமாக இவர்கள் நடத்தப்படும் ஆடிஷன் ஆக்டிவிட்டியின் ஸ்பான்சர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் இதில் பங்கேற்க முடியாது.

இது புரட்சியா? :

இது புரட்சியா? :

ஆர்யா தனக்கான வாழ்க்கைத் துணையை தேடுவதில் புதிய புரட்சி செய்கிறார் என்றெல்லாம் யாரும் நினைத்து விடாதீர்கள். இது ஒரு பக்கா ரியாலிட்டி ஷோவாக உருவாகப்போகிறது.

இதனை அமெரிக்காவில் முதன் முதலாக 2003 ஆம் ஆண்டு நடத்தியிருக்கிறார்கள். ட்ரிஸ்டா சுட்டர் என்பவர் இதில் பங்கேற்ற 25 ஆண்களில் தனக்கான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்தார்.

பதிமூன்று சீசன்கள் :

பதிமூன்று சீசன்கள் :

இதுவரை பதிமூன்று சீசன்கள் வரை நடந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் யாராவது ஒரு பிரபலம தனக்கான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பார். இந்த ஆண்டு மே மாதம் நடைப்பெற்ற பதிமூன்றாவது சீசனில் தான் முதன் முறையாக ஆப்ரிக்க அமெரிக்க போட்டியாளர் பங்கேற்றுயிருக்கிறார்.

Image Courtesy

இந்தியாவில் :

இந்தியாவில் :

இந்தியாவில் ‘சுயம்வர்' என்ற பெயரில் 2009 ஆம் ஆண்டு ரியாலிட்டி ஷோவாக வெளியானது. இதுவும் பல சீசன்களை கடந்து பயனித்திருக்கிறது. இதன் முதல் சீசனில் ராக்கி சவண்ட் என்ற பாலிவுட் நடிகை தனக்கான வாழ்க்கைத் துணையைத் தேடினார்.

இவர் 2014 ஆம் ஆண்டு ராஷ்ட்ரிய ஆம் கட்சி என்ற கட்சியைத் துவக்கி லோக் சபா தேர்தலிலும் போட்டியிட்டார்.

மல்லிகா செராவத் :

மல்லிகா செராவத் :

இதனையெடுத்து ‘பேச்சிலரேட் இந்தியா' என்ற பெயரில் மேரே கல்யாண் கி மல்லிகா என்ற டேக் லைனுடன் இதே போன்றதொரு சுயம்வர நிகழ்ச்சி 2013 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது.

இதில் பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா செராவத் தனக்கான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் விஜய் சிங் என்பவர் வென்றார். அவர் பகிர்ந்த தகவல் அப்போது கொஞ்சம் பரபரபப்பாக பேசப்பட்டது.

விஜய் சிங் :

விஜய் சிங் :

இது ஒரு வருட காண்ட்ராக்ட். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றிப்பெற்றேன். ஒரு வருடத்திற்குள் மல்லிகா செராவத் என்னை திருமணம் செய்து கொள்வார் என்னோடு இருப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் மல்லிகா அதனை விரும்பவில்லை.

மல்லிகா தான் வசித்துக் கொண்டிருந்த லாஸ் ஏஞ்சல்ஸுக்கு தன்னை சந்திக்க அழைத்தார். நான் அங்கே செல்லவில்லை. அதன் பிறகு நீ என்னை விட மிகவும் இளையவனாக இருக்கிறாய், லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப் எல்லாம் ஒத்து வராது என்று சொல்ல ஆரம்பித்தார்.

காலப்போக்கில் என்னுடைய போன் கால் அட்டண்ட் செய்வதை தவிர்த்தார். நானும் அவருக்கு போன் செய்வதை தவிர்த்தேன் எனக்கும் கொஞ்சம் சுயமரியாதை இருக்குமல்லவா? எவ்வளவு தூரம் தான் அவரை நான் வர்புறுத்த முடியும்.

போலியானது :

போலியானது :

இது எல்லாம் நடந்த பிறகு தான். இது திட்டமிடப்பட்ட ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி முற்றிலும் போலியானது என்பதை உணர்கிறேன். இரண்டாவது சீசனில் பங்கேற்ற ராகுல் மஹாஜன் உட்பட யாருமே திருமண வாழ்கையில் இணையவில்லை.

இது எல்லாமே காண்ட்ராக்ட் அடிப்படையில் தான் நடக்கிறது என்றிருக்கிறார் விஜய்.

விலை பேச முடியாத ஒர் இடத்தில் அன்பினை வைத்திருக்கும் போது, அதனையும் சந்தையாக்கி ஒரு ரியாலிட்டி ஷோவாக கட்டமைத்து பெரும் பணம் சம்பாதிக்க நினைத்துக் கொண்டிருக்கும் பண முதலைகளிடமிருந்து நம்மை தற்காத்துக் கொள்வது அவசியம்.

வாழ்க்கைத் துணை :

வாழ்க்கைத் துணை :

ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள தேர்ந்தெடுக்கப் போகிறீகள் அதற்காக எதோ சந்தையில் விற்கக்கூடிய பொம்மையை வாங்குவது போல

நிறம், எடை, உயரம்,கேமராவுக்கு எப்படியிருக்கிறாள் என்று பரிசோதிக்க உங்களை திருமணம் செய்து கொள்ளும் பெண் ஒன்றும் பண்டமில்லையே ஆர்யா.

நீங்கள் உங்களுக்கான சோல் மேட்டை தேர்ந்தெடுக்கிறீகளா? அல்லது அடிமையை தேர்ந்தெடுக்கிறீர்களா? என்று ஒருமுறை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

மனைவி :

மனைவி :

குடும்பத்தில் உங்களுக்கு இருக்கும் அதே முக்கியத்துவம் தான் உங்களுடைய மனைவிக்கும் இருக்கிறது. அவளுக்கான கனவுகள், நண்பர்கள்,வேலை என்று உங்களைப் போன்றே அவளுக்கும் விருப்பு வெறுப்புகள் இருக்கும்.

ஆனால் நீங்கள் செய்யப்போகும் இந்த தேர்வு முறையில் யாருக்கு எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

முக்கியத்துவம் கொடுப்பீர்களா அல்லது என்னை அட்ஜெஸ்ட் செய்து கொண்டு வாழ வேண்டும் என்று சொல்வீர்களா?

 ஒருவரைத் தேர்ந்தெடுத்தால் ? :

ஒருவரைத் தேர்ந்தெடுத்தால் ? :

அப்படியே கோடிக்கணக்கான பேர் போட்டியிட்டு வரிசையில் வந்து நின்று அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக ஷார்ட் லிஸ்ட் செய்து கடைசியில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்வீர்களானால் பிறரது எண்ணம் எப்படியிருக்கும் என்று யோசித்தீர்களா?

தேவையின்றி ஒருவரது மனதில் ஆசையை வளர்ப்பதும்.பின்னர் நீ எனக்கு வேண்டாம் என்று சொல்வதும் தனிப்பட்ட நபரை மனதளவில் எந்த அளவுக்கு பாதிக்கும் என்று தெரியுமா? அல்லது இதையும் ஒவியா-ஆரவ் ரிலேஷன்ஷிப்பை வைத்து பிக் பாஸின் டி ஆர் பியை ஏற்றியது போல இதையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்து வீட்டீர்களா?

விரைவில் வரும் :

விரைவில் வரும் :

இன்றைக்கு வர்த்தக சந்தை என்ற பெயரில் இயல்பு வாழ்க்கையில் நடந்து கொண்டிருப்பது ஒவ்வொன்றும் ரியாலிட்டி ஷோவாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது.

இந்த வரிசையில் தற்போது திருமணத்தை சேர்த்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் இதனை ‘டேட்டிங் ரியாலிட்டி ஷோ' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அடுத்தப்படியாக கணவன் மனைவிக்கு இடையிலான உறவுமுறையையும் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் வரப்போகிறது.

அதையும் நம் வீட்டு வரவேற்பறையில் உட்கார்ந்து குடும்பத்துடன் ரசிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Realized that actor arya soulmate campaign is not modern

Realized that actor arya soulmate campaign is not modern