இன்று ஸ்ரீராமருக்கு இந்த பொருட்களைப் படைத்தால், கஷ்டங்கள் முற்றிலும் நீங்கும் எனத் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

சிவனிடம் வரத்தைப் பெற்று, தேவர்கள், மனிதர்கள், முனிவர்களை கொடுமைப்படுத்தி வந்த ராவணனை அழிக்க, விஷ்ணு பகவான் எடுத்த ஒரு முக்கிய மற்றும் புகழ் பெற்ற அவதாரம் தான் ராம அவதாரம். ராமர் அவதரித்த நாளைத் தான் ஒவ்வொரு வருடமும் ஸ்ரீராம நவமியாக கொண்டாடுகிறோம்.

Offer These Items On Lord Ram's Idol On Ram Navami & Get Blessed With A Problem Free Life

அந்த வகையில் இன்று தான் ஸ்ரீராம நவமி கொண்டாடப்படுகிறது. இன்று பலரும் விரதம் இருந்து, ராம பிரானுக்கு படையல் படைத்து வணங்குவார்கள். ஆன்மீகவாதிகளுக்கு இன்று மிகவும் முக்கியமான நாள். இந்நாளில் ஒவ்வொரு ராசிக்காரரும் ராம பிரானுக்கு குறிப்பிட்ட பொருட்களைப் படைத்து வணங்கினால், வாழ்வில் உள்ள துன்பங்கள் அகலுமாம்.

இக்கட்டுரையில் எந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களை ராம பிரானுக்கு படைத்து வணங்குவது நல்லது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, ராமருக்கு படைத்து அவரது முழு அருளையும் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் மாதுளை அல்லது லட்டுவை ஸ்ரீராமருக்குப் படைத்து வழிபட்டால், இதுவரை வாழ்வில் நீங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் உடனே விலகும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் ஸ்ரீராம நவமி அன்று ரசகுலாவை ஸ்ரீராமருக்குப் படைத்து வணங்கினால், செல்வ வளம் அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள், ஸ்ரீராம பிரானுக்கு முந்திரி பர்பியைப் படைப்பதுடன், பிரசாதமாக அனைவருக்கும் வழங்குவது மிகவும் நல்லது.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள், தேங்காய் பர்பி அல்லது மேவா பர்பியை ஸ்ரீராமருக்குப் படைத்து வணங்கினால், நீங்கள் இதுவரை உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவை நீங்கும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள், வெல்லத்தை ஸ்ரீராமருக்கு படைத்து வழிபட்டால், இனிமேல் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் பேரிக்காய் அல்லது ஏதாவது பச்சை நிற பழங்களை ஸ்ரீராமருக்கு படைத்து வணங்குவது, தொழிலில் முன்னேற்றத்தைத் தரும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள், கலகந்த் அல்லது ஆப்பிளை ஸ்ரீராம நவமி அன்று ராமருக்கு படைத்தால், ராம பிரானின் முழு அருளையும் பெறலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் எள்ளு உருண்டையை ஸ்ரீராமருக்கு படைத்து வணங்குவதன் மூலம், வாழ்வில் உள்ள பிரச்சனைகள் உருகி அகலும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் கடலை மாவால் ஆன இனிப்பு பலகாரத்தை ஸ்ரீராமருக்கு படைத்து வணங்குவது மிகவும் நல்லது.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் நாவல் பழம் அல்லது கருப்பு திராட்சையை ஸ்ரீராம நவமி அன்று ராமருக்கு படைத்தால், வாழ்வில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் சப்போட்டா அல்லது சாக்லேட் பர்பியை ஸ்ரீராமருக்கு படைத்து வணங்கினால், தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

மீனம்

மீனம்

ஸ்ரீராம நவமி அன்று, மீன ராசிக்காரர்கள் ஜிலேபி அல்லது வாழைப்பழத்தை ஸ்ரீராம பிரானுக்குப் படைத்து வணங்கி, பிரசாதமாக அனைவருக்கும் வழங்குவது மிகவும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Offer These Items On Lord Ram's Idol On Ram Navami & Get Blessed With A Problem Free Life

People belonging to different zodiac sign should offer different sweets on the idol of Lord Ram today during ram navami puja. Read on to know more...
Story first published: Wednesday, April 5, 2017, 12:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter