கலிங்கப்பட்டி சிங்கம் வையாபுரி கோபால்சாமி (வைகோ) பற்றி பலரும் அறியாத 9 உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

வையாபுரி கோபால்சாமி என்றால் அரசியல் பெருந்தலைவர்கள் சிலருக்கு தான் தெரியும். வைகோ என்றால் தமிழர்கள் அனைவருக்கும் தெரியும்.

எம்.ஜி.ஆர்-ன் பிரபல வெள்ளை தொப்பி பற்றிய இரகசியங்களும் உண்மைகளும்!

மக்கள் தேவைக்கான எல்லா போராட்டங்களிலும் ஈடுப்பட்ட தலைவர். பலமுறை போராட்டங்களில் ஈடுப்பட்டு சிறை சென்றார். மூன்றாம் அணியை தமிழகத்தில் உருவாக்கியவர்.

படிக்காமலேயே அரசியலில் கலக்கிய அரசியல்வாதிகள்!!!

ஆனால், ஏனோ பெரிய அரசியலில் நிலை எட்ட முடியாமல் போனது. படிப்பறிவும், செயலறிவும் ஒருசேர பெற்ற வைகோ பற்றி பலரும் அறியாத சில அடிப்படை உண்மைகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோபால்சாமி!

கோபால்சாமி!

இந்தியா சுதந்திரம் பெறும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 1944-ல் வையாபுரி - மாரியம்மாள் எனும் தம்பதிக்கு மகனாக பிறந்தவர்.

வை. கோபால்சாமி என பெயர் சூட்டப்பட்ட இவருக்கு மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு இளைய சகோதரர் என உடன் பிறந்தோர் நால்வர்.

திருமணம்!

திருமணம்!

வை.கோபல்சாமி 1971-ல் ரேணுகாதேவி எனும் பெண்ணை ஜூன் 14-ம் நாள் திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு துறை வையாபுரி என்ற மகனும், ராஜலக்ஷ்மி, கண்ணகி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

அரசியல்!

அரசியல்!

திமுக-வில் உறுப்பினராக சேர்ந்து தனது அரசியல் பயணத்தை துவக்கியவர் வைகோ. பிறகு 1992-ல் திமுக தலைவரை கொலை செய்ய முயற்சி செய்தார் என பழிச்சொல் வரவே அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு தான் தனது சொந்த கட்சியான மதிமுக-வை நிறுவினார் வைகோ.

பதவிகள்!

பதவிகள்!

 • நாடாளுமன்ற உறுப்பினர் - 3 முறை
 • நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் - 2முறை
 • திமுக மாநில மாணவரணித் துணைத்தலைவர்
 • திமுக தேர்தல் பணிக்குழு தலைவர்
 • திமுக தொண்டர் அணித் தலைவர்
ஆண்டு வாரியாக...

ஆண்டு வாரியாக...

 • 1970 - கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவர் தனது 25வது அகவையில்
 • குருவிகுளம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர்
 • திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர்
 • 1978 - முதன்முதலாக மாநிலங்களவை உறுப்பினர்
 • 1984 -இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினர்
 • 1990 - மூன்றாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினர் என 18 ஆண்டுகள்
 • 1994 - ம.தி.மு.க பொதுச்செயலாளர் மற்றும் நிறுவனர்
 • 1998 - பிப்ரவரி மாதம் சிவகாசி தொகுதியில் மக்களவை உறுப்பினர்
 • 1999 - அக்டோபர் மாதம் இரண்டாவது முறையாக சிவகாசி தொகுதியில் மக்களவை உறுப்பினர்
50 ஆண்டுகள்!

50 ஆண்டுகள்!

1964-ல் முன்னாள் முதல்வர் அண்ணா முன்னணியில் சென்னையில் இந்தி எதிர்ப்பு போராட்ட அரங்கில் முதன் முதலாக பேசி அரசியலில் காலடி எடுத்து வைத்த வைகோ ஐம்பது ஆண்டுகள் அரசியல் பயணம் செய்த இந்தியாவின் பெரும் அரசியல் தலைவர்களுள் ஒருவர்.

போராட்டங்கள்!

போராட்டங்கள்!

மக்கள் நலன் கருதி, மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் திட்டங்கள் எதிர்த்தும் மத்திய, மாநில அரசுகளை எதிர்ப்பும் பெரும்பாலான போராட்டங்களை நடத்தியவர், போராட்டங்களில் பங்கு பெற்றவே என்ற பெருமை வைகோஅவர்களையே சேரும்.

இவர் நடத்திய / பங்குபெற்ற போராட்டங்கள்..

இவர் நடத்திய / பங்குபெற்ற போராட்டங்கள்..

 • மதுவிலக்கு போராட்டம்
 • சுற்றுசூழல் பாதுகாப்பு
 • சீமை கருவேல மரங்கள் ஒழிப்பு
 • முல்லை பெரியாறு பிரச்சனை
 • மீத்தேன் எதிர்ப்பு போராட்டம்
 • காவேரி பிரச்சனை
 • தனித்தமிழ் ஈழம் மற்றும் பல...
புத்தகங்கள்!

புத்தகங்கள்!

மேடை பேச்சில் மட்டுமின்றி பேனாவை வாள்போல கையாண்டு ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்களும் இவர் எழுதியுள்ளார்.

 1. கனவு நனவாகியது,
 2. இதயச் சிறகுகள்,
 3. வீரத்தின் புன்னகை பரவட்டும்,
 4. தமிழிசை வெல்வோம்,
 5. நாதியற்றவனா தமிழன்?,
 6. குற்றம் சாட்டுகிறேன்,
 7. இரத்தம் கசியும் இதயத்தின் ,
 8. குரல்,
 9. சிறையில் விரிந்த மடல்கள்,
 10. இந்தியை எதிர்க்கிறோமே ஏன்?,
 11. தமிழ் ஈழம் ஏன்?
என பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lesser Known Basic Facts About Tamil Politician Vaiko Aka Vaiyapuri Gopalsamy!

Lesser Known Basic Facts About Tamil Politician Vaiko Aka Vaiyapuri Gopalsamy!