இந்த 10 சட்டம் பொண்ணுங்க தெரிஞ்சுக்கிட்டா, இனிமேல் ஒருத்தனும் வாலாட்ட முடியாது!

Posted By:
Subscribe to Boldsky

எந்த வயதாக இருந்தாலும் நாங்கள் விட்டுவைக்க தயாராக இல்லை. பச்சிளம் சிசு, ஓரிரு வயது குழந்தை, பதின் வயது சிறுமி, கல்லூரி பயிலும் பெண், வேலைக்கு செல்லும் மகளீர், நாளை இறக்கும் நிலையில் கிழவியாக இருந்தாலும் கற்பழிக்க அச்சம் இல்லை.

எனக்கொரு மகள் இருக்கிறாள், அவள் புகுந்த வீட்டில் நிம்மதியாக சந்தோசமாக இருக்க வேண்டும் என மனம் நிறைய ஆசை இருக்கிறது. ஆனால், என் மகனை திருமணம் செய்துக் கொண்ட பாவத்திற்காக என் மருமகளை வன்கொடுமை செய்வேன். வாட்டி வதக்குவேன்.

காதலை ஏற்கவில்லை எனில் ஆசிட் வீசுவேன். அவளை எனக்கு பிடித்திருந்தால் அவள் கண்முன்னே கவர்ச்சி சைகை செய்வேன். யாருமில்லை என்றால் சாலையில் சென்றாலும் அவள் அந்தரங்க உறுப்பை தட்டிவிட்டு ஓடுவேன். (அங்கேயே நிற்க துணிவில்லாத பேடி அல்லவா நான்)

இன்னும் எத்தனை கொடுமைகள்... எல்லா ஆண்களும் அரக்கர்கள் அல்ல. ஆனால், கண்முன்னே ஓர் அரக்கன் ஒரு தேவதையை சீண்டுகிறான் என தெரிந்தும் எத்தனையோ ராமனும், ஜானும், முகமதும் தட்டிக் கேட்காமல் வாய்பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றுள்ளோம்.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு பெண்கள் அனுதினம் கடந்து வரும் பேருந்து வன்கொடுமைகள். இனிமேலும் தேவதைகள் மற்றவர் உதவிக்கு காத்திருக்க தேவையில்லை. இந்த சட்டங்கள் அறிந்துக் கொண்டால் போதும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆன்லைன்!

ஆன்லைன்!

ஆன்லைனின் பெண்களை பற்றி தரக்குறைவாக, அசிங்கமாக பதிவு செய்வது குற்றம் (Section 67 of IT). இதற்கான தனி தண்டனை பிரிவுகளும் இருக்கின்றன.

IPC Section 509 செக்சுவலாக ஒரு பெண்ணை பற்றி சமூக தளங்களில் தவறாக கூறுதல் குற்றம்.

பாலியல்!

பாலியல்!

விபச்சாரம் பிரைவேட் இடங்களில் நடக்க மட்டுமே அனுமதி உண்டு. பொது இடத்தில் விபச்சாரத்தில் ஈடுபடுதல் சட்டப்படி குற்றம்.

பொது இடத்தில் இருந்து 200 அடிக்கு குறைவான இடத்தில் பாலியல் தொழிலாளியுடன் உடலுறவில் ஈடுபடுவதும் குற்றம்.

பாலியல் வன்கொடுமை நடந்திருந்தால் உடனடியாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட நபர் அவருக்கு எந்த மொழி எளிமையாக இருக்கிறதோ, அந்த மொழியில் புகார் அளிக்கலாம்.

திருமணம்!

திருமணம்!

18 வயதுக்கு கீழான பெண் அல்லது 21 வயதுக்குட்பட்ட ஆண் திருமணம் செய்துக் கொள்வது இந்தியரா சட்டத்தின் படி குழந்தை திருமணமாக எடுத்துக் கொள்ளப்படும்.

கணவன் - மனைவி உறவில் இருப்பினும், கணவன் வேறு பெண்ணுடனோ, மனைவி வேறு ஆணுடனோ உறவு வைத்துக் கொள்வது சட்டப்படி குற்றம் கிடையாது.

வலுக்கட்டாயம்!

வலுக்கட்டாயம்!

ஒரு பெண்ணின் விருப்பமின்றி அவரை வலுக்கட்டாயமாக பார்ன் வீடியோக்கள் பார்க்க வைப்பது, காண்பிப்பதும் குற்றம் (IPC Section 354 (A)) தான்.

பெண்களை தரக்குறைவாக பொது இடங்களில், புத்தகங்களில், எழுத்து வடிவில்ம், ஓவியமாக, படமாக (எந்த வகையில் இருந்தாலும்) சித்தரிப்பது குற்றம்.

பெண் கொடுமைப்படுத்தப்படுகிறார், தாக்கப்படுகிறார் என்பதை (IPC Section 498A) சட்டத்தின் படி யார் வேண்டுமானால் போய் புகார் அளிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Law's That Indian Women Should Know!

Law's That Indian Women Should Know!
Story first published: Thursday, October 12, 2017, 16:28 [IST]