பாலைவனத்தால் விழுங்கப்பட்ட ஆள் நடமாட்டமற்ற ஒரு பேய் நகரம்!

Posted By:
Subscribe to Boldsky

உலகில் மனித கால்தடம் பதியாக இடங்கள் பலவன இருக்கின்றன. அதே போல, மனித கால்தடம் பதிந்ததால் அழிந்த இடங்களும் பலவன இருக்கின்ற. ஆராய்ச்சி செய்கிறேன் என ஒரு ஊரையே வாழ தகுதியற்ற இடமாக மாற்றி சாதனை படைத்தவன் மனிதன் தான்.

பல இயற்கை சீற்றங்கள் காரணமாக, பேச்சுத்துணை, மனித வாசம், இயற்கை எழில் இன்றி, தனிமையில் கல்லூன்றி நிற்கும் பகுதிகள் ஏராளாமாக நாம் இந்த உலகத்தில் காணலாம்.

ஒரு காலத்தில் வைரம் கிடைக்கும் அற்புத பூமியாக இருந்த ஒரு நகரம் இன்று பாலை வனத்தால் விழுங்கப்பட்ட ஒரு பேய் நகராக மாறி இருக்கிறது. அதை பற்றி தான் இந்த தொகுப்பில் நாம் காணவிருக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1900!

1900!

நமீபியாவில் இருக்கிறத் கோல்மன்ஸ்கோப் (Kolmanskop ) எனும் இந்நகரம் 1900-ல் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கே வைரங்கள் அதிகம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், கடந்த 40 வருடங்களாக கேட்பாரற்று பாலைவனத்திற்கு இரையாகி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கிறது இந்நகரம்.

Image Credit: Youtube

ஜெர்மானியர்கள்!

ஜெர்மானியர்கள்!

இந்நகரத்தில் ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான ஜெர்மனியர்களின் குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். இந்த பகுதிக்கு அதிர்ஷ்டம் என்ற காரணம் கொண்டே பல குடும்பங்கள் இங்கே குடியேறின என கூறப்படுகிறது.

Image Credit: Youtube

புகைப்பட கலைஞர்கள்!

புகைப்பட கலைஞர்கள்!

ஆனால், இப்போது பேய் நகராக உருமாறி நிற்கும் இந்த கோல்மன்ஸ்கோப் நகரம் சுற்றுலா பயணிகள் வியந்து பார்பதற்காகவும், புகைப்படக் கலைஞர்கள் வந்து புகைப்படம் எடுத்து செல்லும் இடமாகவும் உருமாறி இருக்கிறது.

Image Credit: Youtube

பாலைவனம் விழுங்கியது!

பாலைவனம் விழுங்கியது!

பாலைவனத்தில் உண்டான சூறாவளி காற்றுகளின் காரணத்தால், இந்த பேய் நகரம் மணலால் விழுங்கப்பட்டது போன்ற நிலைக்கு ஆளாகியுள்ளது. ஜெர்மனிய கட்டிட கலையால் கட்டப்பட்ட வீடுகள் இன்று களையிழந்து காணப்படுகின்றன.

Image Credit: Youtube

சிலவன...

சிலவன...

எல்லா கட்டிடங்களும் சேதமடைந்து போன நிலையில், ஒரு பால்-ரூம், மருத்துவமனை, விளையாட்டு அரங்கம் மற்றும் பவர் ஸ்டேஷனுடன் இந்த பேய் நகரம் தனது பிம்பத்தை வெளிக்காட்டி நின்றுக் கொண்டிருக்கிறது.

இந்த பேய் நகரில், பல டிவி சீரியல் இயக்குனர்கள் திகில் காட்சிகள் படம்பிடிக்க வந்து செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

Image Credit: Youtube

வீடியோ!

பாலைவனத்தால் விழுங்கப்பட்ட ஆள் நடமாட்டமற்ற ஒரு பேய் நகரம் - வீடியோ!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Kolmanskop, The Ghost Town has been Swallowed by the Desert!

Kolmanskop, The Ghost Town has been Swallowed by the Desert!
Subscribe Newsletter