நவராத்திரியன்று கடைபிடிக்கப்படும் விசித்திரிமான நடைமுறைகள்!!

Posted By:
Subscribe to Boldsky

நவராத்திரி விழா கலை கட்டத்துவங்கியுள்ளது, மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம்,வீரம் போன்றவற்றின் அதிபதிகளான சரஸ்வதி,லக்‌ஷ்மி மற்று துர்க்கையை வழிபடுவதே இந்த விரதத்தின் நோக்கமாகும்.

முதல் மூன்று நாட்கள் வீரத்தையும் தைரியத்தையும் வழங்கிடும் பராசக்தியை வணங்க வேண்டும்.அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தை தந்திடும் மகாலட்சுமியை வணங்க வேண்டும்.கடைசி மூன்று நாட்கள் கல்வியறிவு தந்திடும் சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெய்க்குளத்தில் அம்மன்! :

நெய்க்குளத்தில் அம்மன்! :

திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் தரிசனம் நவராத்திரி காலத்தில் மிகவும் பிரசத்தி பெற்றது. விஜயதசமி அன்று கருவறைக்கு முன்பாக 15 அடி நீளத்திற்கு வாழை இலையை பரப்பி அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர்.

சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம் போல அமைத்து அங்கே தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர். அதன் பின்னர் கருவரையின் திரையை விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவம் நெய் குளத்தில் பிரதிபலிக்கும். இதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது என்று நம்பப்படுகிறது.

Image Courtesy

ஆண்கள் காளி! :

ஆண்கள் காளி! :

தமிழ் நாட்டில் குலசையில் தசரா விழா பன்னிரெண்டு நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இங்கு பக்தர்கள் விரதமிருந்து ஏதேனும் ஒரு சாமி வேடம் அணிந்து கொள்வர். ஊர்வலத்தில் கரகாட்டம், மயிலாட்டம், மேளம்,தாளம்,தாரை தப்பட்டை என அனைத்து கிராமிய கலைகளும் இடம்பெறும்.

இங்கே வேடம் தர்ப்பவர்களில் காளி வேடத்தை ஆண்கள் மட்டுமே அணிகிறார்கள்.

Image Courtesy

75 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி! :

75 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி! :

சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜகதல்பூரில் இருக்கும் தண்டேஸ்வரி அம்மனுக்கு 75 நாட்கள் தசாரா விழா கொண்டாடப்படுகிறது. இப்பகுதியில் இருக்கும் பல்வேறு பழங்குடியினர் தங்கள் பகுதிக்கு உட்ப்பட்ட ஆலயத்தின் தெய்வங்களை அலங்கரித்து ஊர்வலமாக தண்டேஸ்வரி அம்மன் கோவிலுக்கு கொண்டுவருவார்கள்.

75 நாட்கள் தினமும் பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவர். பெரும்பாலானோர் 75 நாட்கள் வீடுகளுக்குச் செல்லாமல் அங்கேயே சமைத்துச் சாப்பிட்டு தங்கியிருப்பர்.

Image Courtesy

மூன்று தெய்வங்கள் ஒரே சன்னதியில்! :

மூன்று தெய்வங்கள் ஒரே சன்னதியில்! :

கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள மகாலட்சுமி ஆலையத்தில் சரஸ்வதி,துர்கா,மகாலட்சுமி ஆகிய மூவரும் ஒரே கருவறைக்குள்ளிருந்து அருள்பாலிப்பர்.

Image Courtesy

வருடம் ஒரு முறை அலங்காரம்! :

வருடம் ஒரு முறை அலங்காரம்! :

திருவரங்கம் கோவிலில் இருக்கும் அரங்க நாயகி அம்மனுக்கு நவராத்திரியின் ஏழாம் நாள் திருவடிகள் தெரியும்படி அலங்காரம் செய்யப்படும். மற்ற நாட்களில் திருவடிகள் தெரியாது.

Image Courtesy

அதிசய தேங்காய்! :

அதிசய தேங்காய்! :

நெமிலி திரிபுரசுந்தரி கோவில் கலசத்தில் நவராத்திரி சமயத்தில் தேங்காய் வைக்கப்படும். இது அடுத்த வருடம் வரை கெடாமல் இருக்கும். முந்தைய வருடம் வைத்த தேங்காயை இந்த வருடம் உடைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர்.

Image Courtesy

புருவத்தில் பூசப்படும் சாம்பல்! :

புருவத்தில் பூசப்படும் சாம்பல்! :

மும்பை மும்பா தேவி ஆலையத்தில் நவராத்திரியன்று ஹோமம் வளர்க்கப்படும் ஹோமம் முடிந்த பிறகு அதன் சாம்பலை பக்தர்களுக்கு கொடுக்கப்படும். பக்தர்கள் அதனை நெற்றியில் பூசிக்கொள்ளாமல் தங்களுடைய புருவத்தில் பூசிக் கொள்கின்றனர்.

Image Courtesy

ஆண்டுக்கு இரண்டு நவராத்திரி ! :

ஆண்டுக்கு இரண்டு நவராத்திரி ! :

கோடை,குளிர் என பருவகாலம் மாறும் போது நோய்கள் பரவும். இதிலிருந்து மக்களை காக்கும் படி தேவியரை பூஜிக்கும் வகையில் சித்திரையில் வசந்த நவராத்திரியும் புரட்டாசியில் சாரதா நவராத்திரியும் கொண்டாடப்பட்டது.

காலப்போக்கில் சித்திரையில் கொண்டாடப்பட்டு வந்த நவராத்திரி விழா மறைந்துவிட்டது.

Image Courtesy

நவராத்தியன்று முருகனுக்கு அலங்காரம்! :

நவராத்தியன்று முருகனுக்கு அலங்காரம்! :

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் பழநியம்பதியில் முருகப்பெருமானும் மலையடிவாரத்தில் ஸ்ரீ பெரிய நாயகி அம்மனும் இருக்கிறார்கள்.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்படுவது போலவே முருகப்பெருமானுக்கு சர்வ அலங்காரங்கள் செய்யப்படும்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Interesting things that happens during navaratri celebration

Interesting things that happens during navaratri celebration
Story first published: Thursday, September 7, 2017, 13:18 [IST]
Subscribe Newsletter