இதோ சொல்லிட்டாரு அடுத்த விஞ்ஞானி, பூமி வர அக்டோபர் மாசம் அழிய போகுதாம்!

Posted By:
Subscribe to Boldsky

பூமி இதோ அழிந்துவிடும், நாளைக்கு அழிந்துவிடும் என கடந்த பத்து வருடங்களில் பத்தாயிரம் முறைக்கு மேல் கூறிவிட்டார்கள். கடந்த இரண்டு வருடங்களாக சென்னை சந்தித்து வரும் இயற்க்கை சீற்றங்களை பார்க்கும் போது நமக்கே சற்று உள்ளுக்குள் அச்சம் பதைபதைக்க தான் செய்கிறது.

ஆனால், இயற்கை சீற்றங்கள் காரணத்தால் மனிதர்கள் அழிந்து போகலாமே தவிர உலகம் சுழன்று கொண்டே தான் இருக்கும் என பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இப்பொது மீண்டும் ஒரு விஞ்ஞான எழுத்தாளர் ஒருவர் இல்லை இல்லை, பூமி இந்த வருடம் அக்டோபர் மாதமே அழிந்துவிடும் என கூறி அதிர்ச்சி அளிக்கிறார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிளாணட் எக்ஸ்- தி 2017 அரைவல்

பிளாணட் எக்ஸ்- தி 2017 அரைவல்

‘பிளாணட் எக்ஸ்- தி 2017 அரைவல்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் விஞ்ஞான எழுத்தாளர் டேவிட் மேட். இவர் தான் இந்த புத்தகத்தில் பூமி வருகிற அக்டோபர் மாதத்துடன் அழிய போகிறது, பூமியின் ஆயுள் அவ்வளவு தான் என கூறி இருக்கிறார்.

நெருங்கி வரும் நிபிரு!

நெருங்கி வரும் நிபிரு!

சூரியனை போலவே நெருப்பு பிழம்பாக அண்டத்தில் சுழன்று வரும் நிபிரு எனும் கோள் பூமியை நெருங்கி வருகிறதாம். இது வரும் அக்டோபர் மாதத்தில் பூமியின் தென் துருவத்தில் மோதி பூமி முழுமையாக அழியும் என கூறியிருக்கிறார் விஞ்ஞான எழுத்தாளர் டேவிட் மேட்.

அடித்து கூறும் டேவிட் மேட்!

அடித்து கூறும் டேவிட் மேட்!

சூரிய குடும்பத்தின் விளிம்பு பகுதியில் இருக்க கூடும் என விஞ்ஞானிகள் (நம்பப்படும்) கூறி வரும் இந்த நிபிரு எனும் நெருப்பு பிழம்பு கோள் இருப்பது சாத்தியம் என டேவிட் போன்ற ரகசியம் அறிந்த எழுத்தாளர்கள் அடித்து கூறுகிறார்கள்.

பல மடங்கு பெரிது!

பல மடங்கு பெரிது!

பூமியுடன் ஒப்பிடுகையில் நிபிரு பல மடங்கு அளவில் பெரிதாக இருக்கும் என்றும், பூமியை நோக்கி பல ஆண்டுகளாக அது பயணித்து வருகிறது எனும் டேவிட் கூறுகிறார். ஆனால், இதை நாசா முழுமையாக நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் எவ்வளவு?

இன்னும் எவ்வளவு?

2012, 2016, இப்போது 2017 அக்டோபர் என தங்கள் புத்தகங்களும், படங்களும் ஓட வேண்டும் என பலர் பூமி அழிய போகிறது என்ற விஷயத்தை கையாள்கின்றனர். ஆனால், பூமி பாதுகாப்பாக தான் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Here is the another book says Earth Going to be Destroyed on Coming October!

Here is the another book says Earth Going to be Destroyed on Coming October!
Subscribe Newsletter