வெற்றியை தன்வசம்படுத்த நீங்கள் செய்ய வேண்டிய 3 - கருட புராணம்!

Posted By:
Subscribe to Boldsky

எப்படி காமசூத்திரா என்பது வெறும் செக்ஸ் புத்தகம் என்பது போன்ற கண்ணோட்டம் இருக்கிறதோ, அதேபோல தான் கருட புராணம் என்பது நரகத்தில் தரப்படும் தண்டனைகளை குறிக்கும் புத்தகமாக மட்டும் காணப்படுகிறது.

காமசூத்திரா என்பது தாம்பத்தியம் என்பது மட்டுமின்றி, உறவில் அன்பு அதிகரிக்கவும் குறிப்புகள் கூறப்பட்டுள்ள புத்தகமாகும். அதே போல தான் கருட புராணத்திலும் ஒருவர் நன்றாக வாழ்வதற்கு, வெற்றியை தன்வசப்படுத்திக் கொல்வதற்கு என பல குறிப்புகள் கூறப்பட்டுள்ளன.

எதிர்மறை தகவல்களை மட்டுமே காணும் நாம் இது போன்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ள நேர்மறை எண்ணங்களையும் அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

கருட புராணம் என்பது இந்து மதத்தை சேர்ந்த புத்தகம் என்பதால், இதில் கூறப்பட்டுள்ள விஷ்யங்களும் கூட இந்து மதம் சார்ந்தே கூறப்பட்டுள்ளது. ஒரு மனிதன் வெற்றியை தன்வசம் படுத்திக் கொள்ள வேண்டும் எனில், கருட புராணம் என்னென்ன எல்லாம் செய்ய கூறுகிறது என இதில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விஷ்ணு!

விஷ்ணு!

நீங்கள் செய்துக் கொண்டிருந்த வேலை ஏதேனும் தடைப்பட்டு நின்றுவிட்டால். அதன் பிறகு நீங்கள் நீண்டநாள் பல முறை முயற்சி செய்தும் எந்த பலனும் அளிக்கவில்லை என்ற பட்சத்தில் கடவுள் விஷ்ணுவை வணங்கி வாருங்கள். தினமும் காலை எழுந்தவுடன், குளித்து முடித்த பிறகு அருகில் இருக்கும் ஸ்ரீ விஷ்ணு பகவான் திரு ஆலயத்திற்கு சென்று அவரை மனதார வணங்கி வந்தால், உங்கள் தொழில் இடையூறாக இருக்கும் தடைகள், உங்கள் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக அமையும் விஷயங்கள் விலகி உங்கள் வெற்றி மீண்டும் சரியான வழியில் பயணிக்கும்.

விரதம்!

விரதம்!

மாதம் ஒருமுறையாவது விரதம் இருக்க வேண்டும். இது மனதிற்கும், உடலுக்கும் நல்லது. சில அறிவியல் ஆய்வுகளில் கூட, வாரம் ஒருமுறை அல்லது குறைந்தபட்சம் மாதம் ஒருமுறை நீர் ஆகாரம் மட்டும் எடுத்துக் கொள்ளுதல் உங்கள் உடல் பாகங்களின் செயற்திறன் அதிகரிக்க உதவும் என கூறியுள்ளனர்.

இதற்கான காரணம் மிகவும் எளிது, எப்படி உங்கள் மொபைல் அல்லது லேப்டாப் இயங்கிக் கொண்டே இருந்தால் செய்திறன் குறைந்து ஹேங் ஆகுமோ, அதே போல தான் உடலும். கடினமான உணவே அதிகம் உட்கொண்டு வந்தால் உங்கள் உடல் ஆரோக்கியம் தடைப்படும். ஆகயால் தான் விரதம் என்ற பெயரில் மாதம் ஒருமுறையாவது நீராகாரம் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என கூறப்படுகிறது.

கங்கை!

கங்கை!

மூன்று மாதத்திற்கு ஒருமுறை கங்கை நீரில் நீராடி வந்தால் கெட்டது கழியும் என கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இல்லையல், கங்கை நீரை எடுத்து வந்து அந்த நீரை தெளித்தாவது மூன்று மாதத்திற்கு ஒருமுறை குளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

துளசி!

துளசி!

கருட புராணத்தில் துளசி செடியை வீட்டில் வைத்திருந்தால் நன்மை விளையும் என கூறப்பட்டுள்ளது. உங்களுக்கு தெரியுமா? துளசியை வாயில் போட்டு மென்றால் மட்டுமல்ல, அதன் வாசத்தை சுவாசித்துக் கொண்டிருந்தாலும் உங்கள உடலுக்கும், மனதிற்கும் ஆரோக்கியத்தை அளிக்கவல்லது துளசி.

ஒருசில செடிகளை வீட்டில் வைத்தால் அது காற்றில் இருக்கும் அசுத்தத்தை போக்கும் என்பார்களே, அது போல துளசியும், இது உங்கள் உடலுக்குள் அசுத்தத்தை போக்கி நன்மை விளைவிக்கும்.

மேலும், காலையும், மாலையும் துளசிசெடியை சுற்றி வந்தால் வெற்றி தன்வசப்படும் என கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

பசு!

பசு!

பசுவை தொழுவது, பசுவிற்கு உணவளிப்பது உங்கள் வேலையிலும், வாழ்விலும் நல்ல முன்னேற்றம் காண உதவும் என கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Garuda Purana Tips To Achieve Success!

Garuda Purana Tips To Achieve Success!
Story first published: Friday, October 13, 2017, 16:55 [IST]