Latest Updates
-
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
WWE சூப்பர்ஸ்டார் தி கிரேட் காளி பற்றி பலரும் அறியாத உண்மைகள்!
ஆர்பரித்து கூற பல விஷயங்கள் இருந்தாலும், சொந்த வாழ்க்கையில் பல கஷ்டங்களை எதிர்க் கொண்டு வந்தவர் தான் தி கிரேட் காளி...
தி கிரேட் காளி, முதன் முறையாக WWE ரிங்கில் நுழைந்த போதே வெளிநாட்டவர் மட்டுமல்ல, இந்தியர்களும் கண்டு அதிர்ந்த ஒரு மல்யுத்த வீரர்.
அவர் ஒரு இந்தியர் என்றதும் நம்மாட்களுக்கு குஷி, ஆனால், அண்டர் டேக்கர், ஜான் சீனா, பிக் ஷோ போன்றவர்களுக்கு கலங்க வைக்கும் சம்பவமாக இருந்தது.
அதுவரை அன்டர்டேக்கர், பிக் ஷோ, கேன் போன்றவர்கள் தான் WWE-யின் ஜைஜாண்டிக் பிம்பங்களாக இருந்தனர். அவர்களே, தி கிரேட் காளி முன்னர் ஏதோ ஸ்கூல் பிள்ளைகள் போல தான் தோற்றமளித்தனர்.
அதே போல தனது கையால் ஒரே அடியில் விழ வைப்பது, தலையை பிடித்து நசுக்குவது போன்ற அடிகள் எல்லாம் WWE-ல் புதுவிதமாக இருந்தன.
இப்படி ஆர்பரித்து கூற பல விஷயங்கள் இருந்தாலும், சொந்த வாழ்க்கையில் பல கஷ்டங்களை எதிர்க் கொண்டு வந்தவர் தான் தி கிரேட் காளி...

அங்கப்பாரிப்பு!
அங்கப்பாரிப்பு (Acromegaly) எனும் கூடுதலான அல்லது அதிகப்படியான ஹார்மோன் வளர்ச்சி பாதிப்பு உடையவர் தி கிரேட் காளி. இது ஒரு இலட்சத்தில் ஆறு பேர் மத்தியில் மட்டும் காணப்படும் குறைபாடாக காணப்படுகிறது என தி நியூ இங்கிலாந்து மருத்துவ பத்திரிக்கை கூறியுள்ளது.
இதன் காரணத்தால் தான் தி கிரேட் காளி 7'1 அடி உயரமும், 346 பவுண்ட் உடல் எடையும் கொண்டுள்ளார். மேலும், இந்த அங்கப்பாரிப்பு பாதிப்பு உண்டானால் முகத்தில் தாடை, நெற்றி மற்றும் கை, கால்கள் மிகவும் பெரிதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதை நாம் தி கிரேட் காளி-யிடமும் காண முடிகிறது.

பிக் பாஸ்!
இந்தியின் பிக் பாஸ் சீசன் 4ல் தி கிரேட் காளி ரன்னர் அப்பாக வெளியேறினார். இவர் அந்த சீசனில் இரண்டு முறை வீட்டின் தலைவர் பொறுப்பு ஏற்றிருந்தார். அங்கே இவரது உடலமைப்புக்கு படுக்கை கிடைக்காததால், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் இவருக்கென பிரத்தியேக படுக்கை தயாரித்துக் கொடுத்தனர்.

லாக்கர் ரூம் முத்தங்கள்!
தி கிரேட் காளிக்கு 2002ல் திருமணம் ஆனது. இவரது மனைவியின் பெயர் ஹர்மிந்தர் கவுர். WWEல் காளியை பஞ்சாபி ப்ளேபாய் என டேக் செய்தனர்.
லாக்கர் ரூமில் பல பெண்களுடன் முத்தங்கள் இட்டுக் கொள்வது போன்ற நிகழ்வுகள் நடந்ததால், இவரது மனைவி உடனே வீட்டுக்கு வாங்க WWE எல்லாம் போதுமென கூறினாராம். இதை எக்கனாமிக் டைம்ஸ்-க்கு அளித்த பேட்டியில் தி கிரேட் காளி நகைச்சுவையாக கூறியுள்ளார்.

கட்டி!
தி கிரேட் காளி-க்கு 2012ல் கட்டி ஒன்று நீக்கப்பட்டது. அங்கப்பாரிப்பு பிரச்சனை இருந்தால் கட்டி உண்டாகுமாம். இதற்கு காரணம் கூடுதலாக வளரும் ஹார்மோன் உற்பத்தி தான். இதனால் தி கிரேட் காளி-யின் பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி உருவானது. இதை 2012ல் நீக்கினர்.
இந்த அறுவை சிகிச்சை முடிந்த மூன்று மாதம் கழித்து மீண்டும் WWE-ல் பங்குபெற்றார் தி கிரேட் காளி.

நோய்கள்!
தி கிரேட் காளி பார்க்க ஜைஜாண்டிக் உருவம் கொண்டிருந்தாலும், அவர் பல நோய்களால் அவதிப்பட்டு வருகிறார். அங்கப்பாரிப்பு, கட்டி நீக்கம் மட்டுமின்றி, தி கிரேட் காளிக்கு நீரழிவு, இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தமும் இருக்கிறது.
அன்ட்ரூ தி ஜியன்ட்-ம் தி கிரேட் காளி போல அங்கப்பாரிப்பு பாதிப்பு கொண்டிருந்தார். அன்ட்ரூ தனது 46 வயதில் இதய நோய் காரணமாக மரணமடைந்தார்.
அடுத்ததாக இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நபர் பிக் ஷோ. இவர் 1990-லியே பிட்யூட்டரி சுரப்பி அறுவை சிகிச்சை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

காயங்கள்!
மல்யுத்தம் என்றாலே காயங்கள் இல்லாமல் இருக்காது, தி கிரேட் காளியும் பல காயங்களுக்கு ஆளாகியுள்ளார். அவை அனைத்தையும் கடந்து தான் நன்றாக இருக்கிறேன் என கூறுகிறார் தி கிரேட் காளி.
ஒரு முறை காயம் உண்டாகி வெளியேறினால், மீண்டும் WWE-ல் பங்கேற்க ஃபிட்னஸ் டெஸ்டில் பாஸ் ஆக வேண்டும் என்ற நிபந்தனை இருக்கிறது என்பதையும் தி கிரேட் காளி கூறியுள்ளார்.

நீண்ட இடைவேளை!
WWE யில் இருந்து கொஞ்சம் விலகியிருக்கிறார் தி கிரேட் காளி. நீண்ட இடைவேளை எடுத்து இவர் போட்டிகளில் பங்கேற்காமல் இருக்கிறார். கடைசியாக இவர் பிப்ரவரி, 2017ல் போட்டியில் பங்கேற்றார்.
இந்த போட்டிகளில் இவர் ஜெப் லூயிஸ் நீள் மற்றும் ஜேக் மேன்னிங் உடன் போட்டியிட்டார். இந்த போட்டிகளில் இவர் எப்போதும் போல விரைவில் வெற்றி கண்டுவிட்டார். மீண்டும் இவர் எப்போது WWEல் பங்குபெறுவார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.



Click it and Unblock the Notifications