For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகத்தை அலங்கரிக்கும் தீபாவளி..! வடநாட்டு பண்டிகையா?

By Lakshmi
|

தீபாவளி என்றாலே அனைவருக்கும் உற்ச்சாகமாக தான் இருக்கும். தீபாவளி போனஸ், புத்தாடைகள், வானை அழங்கரிக்கும் வண்ண வண்ண பட்டாசுகள் என மிகவும் உற்சாகமாக தான் இருக்கும். அனைத்து ஆண்டுகளையும் போல இந்த ஆண்டும் தீபாவளி களைகட்டத் தொடங்கி விட்டது. பெரிய பெரிய கடைகள் முதல், சின்ன சின்ன சாலை ஓரக்கடைகள் வரை தீபாவளியின் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளது.

பண்டிகைகள் என்றால் வெறும் கொண்டாட்டங்கள் மட்டும் தானா? இறை வழிபாடும் தானே... இறை வழிபாடு என்பது பண்டிகைக்கான முழு பலனையும் தரக் கூடியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தீபாவளி வரலாறு

தீபாவளி வரலாறு

நரகாசுர‌ன் எ‌ன்ற அர‌க்க‌ன் ஒருவ‌ன் இரு‌ந்தா‌ன். அவனு‌க்கு இ‌ந்த மூவுலகமு‌ம் த‌ன் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல் கொ‌ண்டு வ‌ந்து த‌ன் ‌விரு‌ப்ப‌த்‌தி‌ற்கு அனுப‌வி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்ற பேராசை இரு‌ந்தது. தேவ‌ர்க‌ள் கூட த‌ன் காலடி‌‌யி‌ல் ‌கிட‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்ற ந‌ப்பாசை இரு‌ந்தது.

இ‌ந்த ஆசைகளை ‌நிறைவே‌ற்ற ‌பிர‌ம்மனை நோ‌க்‌கி கடு‌ம் தவ‌ம் இரு‌ந்தா‌ன் நரகாசுர‌ன்.

இதனை பா‌ர்‌த்த ‌‌பிர‌ம்ம‌ன், தன‌‌க்காக தவ‌ம் இரு‌ந்த நரகாசுரனு‌க்கு அவ‌ன் கே‌‌ட்கு‌ம் வர‌ங்களை அ‌ள்‌ளி அ‌ள்‌ளி கொடு‌த்தா‌ர். ஒரு கெ‌ட்டவ‌னு‌‌க்‌கு ‌ப‌த‌வி கிடை‌‌த்தா‌ல் எ‌ப்படியெ‌ல்லா‌ம் பய‌ன்படு‌த்துவானோ அ‌ப்படியெ‌ல்லா‌ம் பய‌ன்படு‌த்‌தி‌க் கொ‌ண்டா‌ன் நரகாசுர‌ன்.

போர் தொடுத்தான்

போர் தொடுத்தான்

எ‌ல்லோரு‌க்கு‌ம் து‌ன்ப‌ம் ‌விளை‌வி‌த்து வ‌ந்த நரகாசுர‌ன், தே‌வ‌ர்களையு‌ம் மு‌‌னிவ‌ர்களையு‌ம் அவ‌ன் கொடுமை‌ப்படு‌த்‌தினா‌ன். அதும‌ட்டு‌‌ன்‌றி தன‌க்கு வர‌ம் கொடு‌த்த ‌பிர‌ம்மனை எ‌தி‌ர்‌த்தே போ‌ர் தொடு‌த்தா‌ன் நரகாசுர‌ன்.

வர‌த்தை கொடு‌த்து ‌வி‌ட்டு நரக வேதனைகளை அனுப‌வி‌க்க வே‌ண்டி இரு‌க்‌கிறதே எ‌ன்று புல‌ம்‌பினா‌‌ர் பிர‌ம்ம‌ன். கா‌க்கு‌ம் கடவுளான ‌கிரு‌ஷ்ண பகவா‌னிட‌ம் த‌ன் குறைகளை கூ‌றி முறை‌யி‌‌ட்டா‌ர்.

களைக்கட்டும் தீபாவளி

களைக்கட்டும் தீபாவளி

புத்தாடை அணிதல், பட்டாசு வெடித்தல், வீட்டின் வாசற்படியில் விளக்கு ஏற்றுதல், அசைவப் பிரியர்களாக இருக்கும் பட்சத்தில் முதல்நாள் இரவே வெட்டுக் கடையில் முன்பதிவு செய்து ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன் வகைகள் என்று உணவுக்கான முன்னேற்பாட்டைச் செய்தல், அதிகாலையில் தலையில் எண்ணை வைத்து குளித்தல் என்று மப்பும், மந்தாரமுமாக தீபாவளி களை கட்டி விடும்.

சென்னையின் பொழுதுபோக்கு மெரீனா !

சென்னையின் பொழுதுபோக்கு மெரீனா !

தீபாவளி என்று மெரினா கடற்கரையில் கூடும் மக்கள் அதிகம். மெரினா என்பது சென்னை மக்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கு இடமாகிவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. திரும்பும் குறைந்த வருவாய் குடும்பங்கள்தான் சென்னையில் அதிகம். பணத்தை செலவிட்டு சென்னை மெரீனாவைப் பார்த்துச் செல்லும் வெளியூர் மக்களும் உண்டு. கால்களால் கடற்கரை மணலை சிதறியபடி, துள்ளி விளையாடும் சிறுசுகளின் மனங்களில் நிறைந்திருக்கும் மணல் வெளியும், குவிந்திருக்கும் நடைபாதை திண்பண்டக் கடைகளும் மெரீனாவை கூடுதல் அழகாக்கிக் காட்டும்.

புதுப்பட ரீலிஸ்

புதுப்பட ரீலிஸ்

தீபாவளி ரிலீஸ்க்கு புதியதாக ரிலீஸ் ஆகும் புதுப்படங்களை பார்க்கும் ஆர்வம் இன்றைய மக்களிடையே பெருகிவிட்டது. என்றைக்குமே சினிமா, வீட்டுக்குள்ளேயே அடைப்பட்டு கிடைப்பது போன்றவை இந்த நாட்களிலும் அரங்கேறுவது கொடுமை தான் என்றாலும் மக்கள் இந்த மனநிலைக்கே மாறிவிட்டனர் என்பது கொஞ்சம் வருத்தத்திற்கு உரிய விஷயம் தான்.

வடநாட்டு பண்டிகையா?

வடநாட்டு பண்டிகையா?

'வடநாட்டுப் பண்டிகையே தீபாவளி' என்று தன்னுடைய 'மதுரை திருமலை நாயக்கர் வரலாறு' என்ற நூலில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் அ.கி.பரந்தாமனார்.

"தீபாவளி என்பது வடநாட்டு குஜராத்திகளுக்கு புதுக்கணக்கு திறப்பு விழா நாள். விஜய நகரத்திலும் புத்தாண்டுப் புதுக் கணக்கு விழாவாகக் கொண்டாடப்பட்டதை 'நிக்கோலோ டிகாண்டி' என்பவர் குறிப்பிட்டுள்ளார். விஜய நகரத்திலிருந்து வந்து மதுரைக்கு குடியேறிய சவுராஷ்டிரர்களும் இதைக் கொண்டாடி வருகிறார்கள்.

வடநாட்டார் தீபாவளி அன்று விளக்கு அலங்காரம் செய்வதுண்டு. தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை, தீப + ஆவலி = தீபாவலி. அச் சொற்றொடர்தான் பின்பு தீபாவளி என்று திரிந்தது. தீபாவளி, தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வந்த திருநாளன்று. மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை, செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டதால் 16-ஆம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவே இல்லை" என்கிறார் தமிழ்க்கடல் மறைமலைஅடிகளார்.

'தமிழர் மதம்' என்ற நூலில்,"வடநாட்டில் அக்காலத்திலிருந்த தமிழ் மக்கள் ஐப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே தெரிந்த முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டு பண்டிகை!

தமிழ்நாட்டு பண்டிகை!

தமிழர் பண்டிகையாக இல்லாவிட்டாலும் தீபாவளித் தள்ளுபடியில் ஆரம்பித்து, புதுப்படங்களை தீபாவளிக்கு ரிலீஸ் செய்வது வரையில் தீபாவளி தமிழர் பண்டிகையாக ஆக்கமும் ஊக்கமும் பெற்று விட்டது வியப்பினும், வியப்பே !

அவரவர் சொந்த ஊருக்குச் செல்லவும், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரவும் ஏற்றவாறு அரசே சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.

திருநெல்வேலி அல்வாவும் தேவை !

திருநெல்வேலி அல்வாவும் தேவை !

தீபாவளி என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசு மற்றும் இனிப்புகள்தான். திருநெல்வேலி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது அல்வாதான். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் தீபாவளியை தித்திக்கும் அல்வாவுடன் கொண்டாட வேண்டுமானால், திருநெல்வேலிக்கு போக வேண்டும் என்பதில்லை. நவீன தகவல் தொழில்நுட்ப காலத்தில், மொபைலிலோ அல்லது ஆன்லைனிலோ ஆர்டர் செய்தாலே, திருநெல்வேலி அல்வா வீடு தேடி வந்து விடும்.

இறைச்சி

இறைச்சி

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெள்ளாட்டுச் சந்தைக்கு பெயர் பெற்ற மணப்பாறை சந்தையில் ரூ. 2000-க்கு விற்கப்படும் வெள்ளாடுகள் ரூ.2,800 வரை விற்கப்பட்டுள்ளது. 50 லட்சம் ரூபாயைத் தாண்டி ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது. திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து மக்கள் ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

பாதுகாப்புடன் பட்டாசு கொளுத்தலாம்!

பாதுகாப்புடன் பட்டாசு கொளுத்தலாம்!

பண்டிகைகளில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, மற்றவர்களோடு அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவே பட்டாசுகள் வெடிக்கும் பழக்கம் தோன்றியது. இந்த மகிழ்ச்சி சில நேரங்களில் துயரம் தரக் கூடியதாக மாறி விடுவதுதான் பரிதாபம்.

அமெரிக்கா, ஐரோப்பா, துபாய், சவுதி அரேபியா போன்ற வெளிநாடுகளில் பட்டாசுகளை வீட்டிலோ, குடியிருப்புப் பகுதிகளிலோ வெடிக்க முடியாது. வெடிவெடிப்பதற்கென தனி இடம் உண்டு. அங்கு தான் பட்டாசுகளை வெடிக்க முடியும்.

குப்பைக் குவியல்

குப்பைக் குவியல்

நம் நாட்டில் நினைத்த இடங்களில் எல்லாம் பட்டாசுகளை கொளுத்திப் போடும் செயல் சாதாரணமாக நடக்கிறது. வீட்டிலிருந்து வெளியே நடந்து போக முடியாத அளவிற்கு வீதிகளில் பட்டாசு குப்பைகளின் குவியல் குவிந்து விடும்.

பொதுவாக முகம், கை, விரல்கள் ஆகியவற்றில் தான் தீக்காயங்கள் உண்டாக வாய்ப்பு அதிகம். ஆனால், தீக்காயம் பட்ட கையைத் தண்ணீரில் நனைப்பதற்கு பலரும் தயங்குவார்கள். தீக்காயம் பட்ட உடல் பகுதியைத் தண்ணீரில் நனைத்தால், கொப்பளங்கள் ஏற்பட்டுவிடும் என்ற தவறான நம்பிக்கை மக்களிடம் உள்ளது. தீக்காயத்தைத் தண்ணீரில் எவ்வளவு விரைவில் நனைக்கிறோமோ, அந்த அளவுக்கு விரைவாக காயம் ஏற்பட்ட இடத்தில் வெப்பம் குறைந்து, காயத்தின் தீவிரம் குறையும். கொப்பளங்கள் ஏற்படுவதும் தடுக்கப்படும்.

எச்சரிக்கை!

எச்சரிக்கை!

பட்டாசு வெடிக்கும்போது தீப்பொறியோ, பட்டாசு மருந்தோ கண்ணில் பட்டு விட்டால் சுத்தமான குழாய்த் தண்ணீரைத் திறந்து, , கண்களை அகலமாகத் திறந்து 15 நிமிடங்கள் தண்ணீரில் நனைக்க வேண்டும். அல்லது அகன்ற பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை நிரப்பி, கண்களை நனைத்து, இமைகளைத் திறந்து திறந்து மூடவேண்டும்.

தீ விபத்து ஏற்பட்டால், அந்த நபரை போர்வையாலோ, கம்பளியாலோ மூடி, தரையில் சாய்த்து உருட்ட வேண்டும். பின்னர் காற்றோட்டமான இடத்திற்கு அவரை மாற்ற வேண்டும். தீக்காயத்தின் மீது அரிசிமாவு, பேனா மை, சீனிப்பாகு, பச்சிலை மருந்து, தேன், எண்ணெய் போன்றவற்றைப் பூசுவது நல்லதல்ல. இவை காயம் குணப்படுவதைத் தாமதப்படுத்தும்.

மருத்துவம்

மருத்துவம்

தீக்காயம் அடைந்த நபரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

தீபாவளிப் பண்டிகையின்போது அதிக மகிழ்ச்சியுடன் இருக்க நினைப்பது அனைவரின் விருப்பம் என்றபோதிலும், கொண்டாட்டங்களின் போது, பாதுகாப்பு அம்சத்தையும் கவனத்தில் கொண்டால் மகிழ்ச்சி எப்போதும் நீடிக்கும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Diwali and celebration in Tamilnadu

Diwali and celebration in Tamilnadu