தீபாவளியன்று உப்பு வாங்கினால் மிகவும் நல்லது!! ஏன் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

இன்னும் இரண்டு நாட்களில் தீபாவளி. தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். தீபாவளி என்று சொன்னதுமே பட்டாசு,புத்தாடை,பலகாரங்கள் என்பது தான் நினைவுக்கு வரும். தீபாவளி கொண்டாட்டத்தின் இரு பகுதியாக தீபாவளியன்று வருடாவருடம் நீங்கள் செய்யும் ஒரு விஷயம் நினைவிருக்கிறதா?

Did you know why we take oil bath before sun rise on Diwali?

கொண்டாட்டத்தின் ஒரு பகுதி அதுவும் வருடா வருடம் செய்கிறோம் என்றால்... அதுவும் எல்லார் வீடுகளிலும் கடமை தவறாது செய்து கொண்டிருக்கிறோம். அது தான் எண்ணெய் குளியல். எண்ணெய் குளியல் மேற்கொள்வதால் ஏராளமான நன்மைகள் ஏற்படுகிறது. உடலுக்கு பல நன்மைகள் பயக்கும் எண்ணெய் குளியலை அவசியம் அனைவரும் செய்திட வேண்டும்.

பொதுவாக எண்ணெய் அபசகுணமாக பார்க்கப்படும். அதுவும் கொண்டாட்டம் நிறைந்த நன்னாளில் கண்டிப்பாக தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று சொல்வதன் காரணம் தெரியுமா? அப்படி எண்ணெய்த் தேய்த்து குளிப்பதனால் என்னென்ன பயன்கள் உங்களுக்கு கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதன் செல்வம்! :

புதன் செல்வம்! :

தலைக்கு எண்ணெய் தேய்ப்பதில் கூட சாஸ்திரங்கள் உண்டு. ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் தேய்த்து நீராடினால் மனவருத்தத்தையும், திங்கட்கிழமை உடலுக்கு புத்துணர்ச்சியையும், செவ்வாய்க்கிழமை உடல் நலக்குறைவையும், புதன்கிழமை செல்வத்தையும், வியாழக்கிழமை உடல் நலத்தையும், வெள்ளிக்கிழமை அதிக செலவையும், சனிக்கிழமை விரும்பியவற்றை அடைதலையும் அளிக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு புதன்கிழமை தீபாவளி வருவதால் அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கும் பட்சத்தில் செல்வம் சேரும் என்பது ஐதீகமாகும்.

எண்ணெயில் மகாலட்சுமி :

எண்ணெயில் மகாலட்சுமி :

தீபாவளியன்று எண்ணெயில் லட்சுமி தேவியும் தண்ணீரில் கங்கா தேவியும் உறைகின்றனர். இதற்கு விஷ்ணு புராணத்தில் ஒரு வரலாறும் உண்டு. நரகாசுரனுடன் விஷ்ணு போரில் இருந்தசமயம் அரக்கர்கள் லட்சுமி தேவியைக் கவர்ந்து செல்ல முயன்றனர்.

உடனே தேவி பகவான் போர் முடிந்து திரும்பும் வரை எரிந்து கொண்டிருந்த ஒரு தீபத்தில் மறைந்து விட்டதாக விஷ்ணு புராணம் கூறுகிறது.

இந்தப் புண்ணிய தினத்தில் தான் பாற்கடலில் தோன்றிய திருமகளை நாராயணன் திருமணம் செய்து கொண்டார். அப்போது தேவர்களுடன் யமதர்மராஜனும் பணிந்து போற்றினார்.

இதை கண்ட லட்சுமி, யமனிடம் இப்பண்டிகையை முறையாக கடைப் பிடிப்பவர்களது வீட்டில் என் உத்தரவு இன்றி நீ பிரவேசிக்கக்கூடாது என்று உத்தரவிட்டாள். லட்சுமி தேவியின் அந்த உத்தரவை யமதர்மராஜனும் ஏற்றுக்கொண்டார்.

எண்ணெய் தயாரிப்பு முறை :

எண்ணெய் தயாரிப்பு முறை :

தீபாவளிக்கு முதல் நாள் இரவு நல்லெண்ணெயில் மிளகாய், மிளகு, சீரகம், இஞ்சி, மஞ்சள் தட்டிப்போட்டு காய்ச்சி தயார் செய்து கொள்ள வேண்டும். மறுநாள் அதிகாலை தலை உடல் எல்லாம் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

மிளகாய் வாயுவை அடக்கும். மிளகு, சீரகம் ஜீரணத்துக்கு உதவும் இஞ்சி பித்தத்தை தணிக்கும். மஞ்சள் குளிர்ச்சியை தரும். தலையில் எண்ணெய்யை அழுந்த தேய்த்து சீயக்காய் தேய்த்து குளிப்பது உஷ்ணத்தை நீக்கி குளிர்ச்சி தரும்.

அதிகாலை நீராட வேண்டும் என்பதால் அன்று வெந்நீரில் நீராட வேண்டும். ஆல், அரசு, அத்தி, மாவிலங்கை ஆகிய மரங்களின் பட்டைகள் போட்டுக் காய்ச்சிய நீரில் நீராடினால் கூடுதல் சிறப்பு.

எண்ணெய் தேய்த்து குளித்த பின்பு செய்யக்கூடாதவை :

எண்ணெய் தேய்த்து குளித்த பின்பு செய்யக்கூடாதவை :

5 மணி முதல் 7 மணி வரை எண்ணெய் தேய்த்து குளிக்க நல்ல நேரம். மதியம் 12 மணிக்கு பிறகு எண்ணெய் தேய்த்து குளித்தால் பலன் இருக்காது.

தூங்ககூடாது. தூங்கினால் பலன் இருக்காது. இரவு வரை தூங்க கூடாது. ஏன் என்றால் உங்கள் கண்களில் இருந்து வெப்பம் வெளியேறி கொண்டிருக்கும். அப்போது தூங்கினால் உடல் பாதிக்கும்.

கங்கா ஸ்நானம் :

கங்கா ஸ்நானம் :

தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு கங்கா ஸ்நானம் என்றும் சொல்வார்கள். இதற்கு கங்கா ஸ்நானம் என்று எப்படி பெயர் வந்தது தெரியுமா?

அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து தலைமுழுகினால், நம் பாவம் எல்லாம் போய்விடும் என்பது நம்பிக்கை. கிருஷ்ணன், நரகாசுரனை அழித்த நாளே தீபாவளி. அன்று, சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை அனைத்துக்கும், கங்கையின் புனிதத்தை வழங்குகிறார் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தின் படி, அன்று நம் வீட்டில் உள்ள கிணறு, குழாய் ஆகியவற்றில் வரும் தண்ணீர் அனைத்தும், கங்கை நீராகவே பாவிக்கப்படும்.

இதனால் தான், தீபாவளி அன்று காலையில் நீராடுவதை கங்காஸ்நானம் என்று சொல்கிறார்கள்.

Image Courtesy

ஏன் அதிகாலை ?

ஏன் அதிகாலை ?

எப்போதும் சூரிய உதயத்திற்கு பின்னர் தான் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று சொல்வார்கள் ஆனால் தீபாவளியன்று மட்டும் சூரிய உதயத்திற்கு முன்னரே எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது ஏன் தெரியுமா?

பூமாதேவி தனது மகனான நரகாசுரனைக் கண்டு கொள்ளாமல், அவன் போக்கில் விட்டதால்தான், அவன் கொடுமைக்காரனாக மாறி, பலரையும் துன்புறுத்தி அதில் இன்பம் கொண்டு மகிழ்ந்தான் என்று நினைத்தார். இனிமேல் தங்கள் பிள்ளைகளை அவர்கள் விருப்பம் போல் நடக்கவிட்டு, தவறு செய்வதற்கு யாரும் காரணமாகி விடக்கூடாது என்று கருதினார்.

எனவே, ஏதாவது வித்தியாசமாகச் செய்தால்தான், நரகாசுரனைப் பற்றி மக்கள் நினைப்பார்கள். அவனைப் போல நம் பிள்ளைகளையும் அதிகமாகச் செல்லம் கொடுத்து கெடுத்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார்கள் என நினைத்தார்.

எனவே, சூரியன் உதயமாவதற்கு ஒரு முகூர்த்த நேரத்தில் கங்கா குளியல் செய்திட வேண்டும் என்று ஒரு விதிவிலக்கான வரத்தைப் பெற்றார். இதனால், தீபாவளியன்று கங்கா குளியலுக்கான நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ குளிப்பது தவறானதாகக் கருதப்படுகிறது.

இதோடு நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா அழித்த நேரம் அதிகாலை என்பதால் தீபாவளி திருநாளன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கிறோம் என்றும் சொல்லப்படுவதுண்டு.

உப்பில் ஒளிந்திருகிறது அதிர்ஷ்டம் :

உப்பில் ஒளிந்திருகிறது அதிர்ஷ்டம் :

தீபாவளியன்று பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு தெய்வத்தின் கடாட்சம் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. எண்ணெய்-லட்சுமி; சிகைக்காய் - சரஸ்வதி; சந்தனம் - பூமாதேவி; குங்குமம் - கௌரி; தண்ணீர் - கங்கை; இனிப்புப் பலகாரம் - அமிர்தம்; நெருப்புப் பொறி - ஜீவாத்மா; புத்தாடை - மகாவிஷ்ணு

தீபாவளியன்று உப்பு வாங்குவது அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதிகம்.

பசுவும் கன்றும் :

பசுவும் கன்றும் :

காலை 08-00 மணி முதல் 09-00 மணிக்குள் புத்தாடைகள் அணிந்து கிருஷ்ணரையும் லட்சுமியையும் வழிபட வேண்டும். தீபாவளித் திருநாள் என்பது பூமாதேவியின் அம்சமான சத்யபாமா தன் மகன் நரகாசுரனை கொன்ற தினமாக கொண்டாடப்படுகிறது.

தன் மகனைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக பசுவையும் கன்றையும் சேர்த்து சத்யபாமா பூஜித்தாக வரலாறு. நாமும் அவ்வாறு பசுவையும் கன்றையும் பூஜித்தால் நம் குழந்தைகள் நற்குணம் கொண்டவர்களாக வளர்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Did you know why we take oil bath before sun rise on Diwali?

Did you know why we take oil bath before sun rise on Diwali?
Story first published: Monday, October 16, 2017, 12:35 [IST]