For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவைத் தவிர வேறு எங்கெல்லாம் தீபாவளி கொண்டாடப்படுகிறது தெரியுமா?

இந்தியாவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

|

இந்தியாவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. எல்லாருமே ஏதேனும் ஒரு வகையில் உற்சாகமாக தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும்வோம். இதே போல இந்தியாவைத் தவிரவும் பல்வேறு நாட்டினர் தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.

தீபாவளிப் பண்டிகை இந்தியாவைத் தவிர வேறு எங்கெல்லாம் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 இந்தோனேசியா :

இந்தோனேசியா :

இந்தோனேசியாவில் இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆனால் இங்கே தீபாவளி மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இங்கே இந்தியாவில் கொண்டாடுவது போலவே பட்டாசு வெடிப்பது, புத்தாடை அணிவது போன்றவை செய்கிறார்கள்.

Image Courtesy

மலேசியா :

மலேசியா :

இங்கே ஹரி தீபாவளி என்று அழைக்கிறார்கள். நாடு முழுவதுமே தீபாவளி கொண்டாடப்படுகிறது. எண்ணெய்த் தேய்த்து குளிப்பது, கோவிலுக்குச் செல்வது என எல்லா நடைமுறைகளையும் கடைபிடிக்கிறார்கள். இங்கே பட்டாசு வெடிப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. தீபாவளியன்று அரசாங்க விடுமுறையும் உண்டு.

Image Courtesy

ஃபிஜி :

ஃபிஜி :

இந்த நாட்டில் தீபாவளியன்று புத்தாடை அணிந்து பரிசுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். வீடுகளையும் அலங்கரிக்கிறார்கள். பல்வேறு இடங்களில் தீபாவளி பார்ட்டி நடைபெறுகிறது.

Image Courtesy

நேபாள் :

நேபாள் :

நேபாளத்தில் தீபாவளிப்பண்டிகையை திஹார் என்று அழைக்கிறார்கள். லட்சுமி தேவியை வணங்குகிறார்கள். புதிய செயல்களை துவங்குகிறார்கள். இவர்கள் தீபாவளியை ஐந்து நாட்கள் வரை கொண்டாடுகிறார்கள்.

முதல் நாள் மாடு. அப்போது அதற்கு பூஜை செய்து வணங்குகிறார்கள். இரண்டாம் நாள் நாய்,மூன்றாம் நாள் ராமரின் வெற்றியை போற்றும் வகையில் கொண்டாடுகிறார்கள். நான்காம் நாள் இறப்பின் கடவுளான எமதர்மனை வணங்குகிறார்கள். ஐந்தாம் நாள் அண்னன் தங்கை நாளாக கொண்டாடுகிறார்கள்.

Image Courtesy

இலங்கை :

இலங்கை :

இலங்கையில் இருக்கும் பெரும்பான்மை மக்களால் தீபாவளி கொண்டாடப்படுகிறது. ராமாயணத்தை போற்றும் வகையில், ஐந்து நாட்கள் வரை கொண்டாடுகிறார்கள்.

Image Courtesy

தாய்லாந்து :

தாய்லாந்து :

தாய்லாந்தில் தீபாவளிப் பண்டிகையை லாய் க்ராதொங் (Loi Krathong )என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இவர்கள் தாய்லாந்து கேலண்டர் படி கொண்டாடுகிறார்கள். பல்வேறு புதுமையான பட்டாசுகளை வெடிக்கிறார்கள். அதே போல ஹாட் ஏர் பலூனும் பறக்கவிடப்படுகிறது.

இதைத் தவிர விலக்கேற்றி அதனை வாழை இலையில் வைத்து மிதக்க விடுகிறார்கள். பல்வேறு கலாச்சார விழாக்களும் நடக்கிறது.

Image Courtesy

மொரீசியஸ் :

மொரீசியஸ் :

மொரீசியஸில் இருக்கும் 50 சதவீதத்தினர் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுகிறார்கள். இங்கே ராவணனை வென்றெடுத்ததற்காக மட்டுமல்ல நரகாசுரனை கிருஷ்ணன் வென்றதற்காகவும் கொண்டாடுகிறார்கள்.

வீட்டிற்கு வெளியே கலர் ரங்கோலி போடுவது, விலக்குகளை ஏற்றுவது என தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.

Image Courtesy

சிங்கப்பூர் :

சிங்கப்பூர் :

தீபாவளியன்று சிங்கப்பூரில் விடுமுறை விடப்படுகிறது. விலக்குகளாலும், பூக்களாலும் வீடு,கடை முதலியவற்றை அலங்கரிக்கிறார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

Image Courtesy

அமெரிக்கா :

அமெரிக்கா :

அமெரிக்காவில் நிறைய இந்தியர்கள் வசிக்கிறார்கள். நியூ ஜெர்ஸி, டெக்சாஸ், கலிஃபோர்னியா போன்ற இடங்களில் உள்ள கோவில்களில் முதல் நாளிலிருந்தே பூஜைகள் நடக்கத் துவங்கும்.

Image Courtesy

ஆஸ்திரேலியா :

ஆஸ்திரேலியா :

இங்கேயும் இந்தியர்கள் நிறைய பேர் வசிக்கிறார்கள். மெல்போர்னனில் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை தான் ஆஸ்திரேலியாவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகையாகும்.

பட்டாசுகளை வெடிப்பது, இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது போன்ற கொண்டாட்டங்கள் இருக்கும்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Countries of the world celebrating Diwali other than India.

Countries of the world celebrating Diwali other than India.
Story first published: Wednesday, October 11, 2017, 13:12 [IST]
Desktop Bottom Promotion