தங்கத்துல கேக் சாப்பிட்டிருக்கீங்களா?

Posted By:
Subscribe to Boldsky

ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா தன்னுடைய சுதந்திரதினத்தை கொண்டாட இருக்கிறது. இந்த தினத்தை சிறப்புபடுத்தும் விதமாக தங்க கேக் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தேசியக் கொடி மற்றும் நடிகர் அமிர்கான் உருவத்துடன் உருவாக்கியுள்ள இந்த கேக் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுதந்திர தினம் :

சுதந்திர தினம் :

இந்தியாவின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு துபாயில் உள்ள தனியார் பேக்கரி ஒன்று இந்திய தேசியகொடி மற்றும் நடிகர் அமீர்கான் உருவத்துடன் ‘தங்க கேக்' ஒன்றை தயாரித்துள்ளது.

தங்கமே தங்கம் :

தங்கமே தங்கம் :

எப்போதும் கேக் தயாரிக்கப்பயன்படும் சாதாரண மாவில் தயாரிக்கப்பட்ட இந்த கேக்கின் வெளிப்புறம் முழுவதும் தங்கத்துகள்களால் பூசப்பட்டு உள்ளது.

தங்கல் கேக் :

தங்கல் கேக் :

இந்த கேக்கில், ‘தங்கல்' இந்தி திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியான மல்யுத்த போட்டியில் பயிற்சி பெறும் சிறுமிகள், மற்றும் புல், கொட்டகை, மணல் தளம், தங்க பதக்கங்கள் மற்றும் நடிகர் அமீர்கான் உருவம் ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன.

Image Courtesy

அமிர்கான் 30 கிலோ :

அமிர்கான் 30 கிலோ :

4 அடி உயரத்தில், 54 கிலோ எடையில் உள்ள இந்த கேக்கை தயாரிக்க நான்கு வாரங்கள் ஆனதாம். இதில் இருக்கும் அமிர்கான் உருவம் மட்டும் 30 கிலோ எடை கொண்டது. இந்த கேக் தயாரிக்க சாக்லெட் ஸ்பான்ஞ்ச், கனாச், பெல்கியன் சாக்லெட், சர்க்கரை, மாவுப்பொருட்கள் மற்றும் தங்க துகள்கள் போன்றவற்றை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

Image Courtesy

சாப்பிடலாம் :

சாப்பிடலாம் :

இந்த கேக்கை தயாரிக்க மொத்தம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.26 லட்சம் வரை செலவழிக்கப்பட்டிருக்கிறது.

இதனை 240 பேர் பகிர்ந்து சாப்பிடலாம். இந்திய சுதந்திர தினத்திற்காக இதை அர்ப்பணித்துள்ளதாக அந்த கேக்கை தயாரித்த பேக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: கேக், உணவு, insync, pulse, india
English summary

Cake made in gold

Cake made in gold
Story first published: Saturday, August 12, 2017, 11:30 [IST]
Subscribe Newsletter