உலக அரசியல் தலைவர்களுள் சகலகலா வல்லவன் இவர் - #LifeOfCelebs

Subscribe to Boldsky

ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கிய முக்கிய தலைவர்களை 'Founding Fathers of United States' என பிரபலமாக அழைப்பதுண்டு. அவர்களுள் ஒருவர் தான் பெஞ்சமின் பிராங்க்ளின். இவர் வெறும் அரசியல் தலைவர் மட்டுமல்ல. இவர் அறிவியலாளர், எழுத்தாளர், கண்டுபிடிப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர். இவரது நிறைய கருத்தாக்கங்கள் உலகில் புகழ்பெற்று விளங்குகின்றன.

பெஞ்சமின் பிராங்க்ளின் இவ்வுலகிற்கு கொடுத்த சிறந்த பரிசாக கருதப்படுவது, இவர் எழுதி வந்த Poor Richard's Almanack எனும் இதழாகும். ஒருபுறம் சிறந்த எழுத்தாளராக திகழ்ந்த இவர். மறுபுறம் இடிதாங்கி, பை-ஃபோக்கல் கிளாஸ் (வெள்ளெழுத்த கண்ணாடி) கண்டுபிடித்த சிறந்த அறிவியல் ஆராய்ச்சியாளராகவும் இருந்துள்ளார்.

அரசியல் சட்டமன்ற உறுப்பினர், அரச தந்திரி, அமெரிக்க அரசுக்கான பிரான்ஸ் தூதர் என பல பணிகளை செய்த இவர், அமெரிக்காவின் சுதந்திர பிரகடணத்தை தயார் செய்து கையெழுத்திட்ட மூவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
17ல், 10வது!

17ல், 10வது!

1706, ஜனவரி 17ம் நாள் பாஸ்டன் நகரில் பிறந்தவர் பெஞ்சமின் பிராங்க்ளின். இவரது பெற்றோருக்கு மொத்தம் 17 பிள்ளைகளில், இதில் 10வதாக பிறந்தவர் பெஞ்சமின் பிராங்க்ளின். இவரது தந்தைக்கு சோப்பு, மெழுகுவர்த்தி தயார் செய்து விற்பனை செய்வது தான் தொழில். எண்ணிக்கையில் பெரிய குடும்பம், ஆகையால் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய குடும்பமாக இருந்தனர்.

Image Credit:wikipedia

கவிஞர்!

கவிஞர்!

தனது ஏழாவது வயதில் இருந்தே கவி எழுதும் திறன் கொண்டிருந்தார் பெஞ்சமின் பிராங்க்ளின். அப்போது அவர் பள்ளிக்கு செல்லவில்லை எனிலும், தனது தந்தைக்கு தொழில் ரீதியாக பெரும் உறுதுணையாக இருந்து வந்தார் பெஞ்சமின் பிராங்க்ளின். ஒருபுறம் தந்தைக்கு உதவி செய்துக் கொண்டே, மறுபுறம் நான்கு மொழிகளை கற்றுத்தேர்ந்தார் இவர்.

Image Credit: commons.wikimedia

நூல் வாசிப்பு!

நூல் வாசிப்பு!

பெஞ்சமின் பிராங்க்ளினுக்கு புத்தகங்கள் எழுதுவதில் மட்டுமல்ல, படிப்பதில் கொள்ளை பிரியம். இதனால் தான் என்னவோ எதிர்காலத்தில் இவர் அமெரிக்காவின் சுதந்திர பிரகடணத்தை எழுதும் வீரியம் பெற்றிருந்தார். தினமும் ஒரு மணி நேரமாவது படிக்கவும், எழுதவும் செலவிடுவார் பெஞ்சமின் பிராங்க்ளின். பெரும்பாலும் தனது வீட்டில் நிர்வாண நிலையில் புத்தகங்கள் படிப்பதையும், எழுதுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார் பெஞ்சமின் பிராங்க்ளின்.

மேலும், அச்சு தொழிலும் செய்து வந்துள்ளார் பெஞ்சமின் பிராங்க்ளின்.

Image Credit: unsplash

சொந்த இதழ்!

சொந்த இதழ்!

1720ல் பென்சில்வேனியா கெசட்' (Pennsylvania Gazette) என்ற நிறுவனத்தை விலைக்கு வாங்கி, பின்னாளில் அதன் பெயரை Poor Richards Almanack என பெயர் மாற்றி ஒரு இதழை துவங்கினார். தனது தனித்துவமான பாணியால் பல வாசகர்களை ஈர்த்தார் பெஞ்சமின் பிராங்க்ளின். இந்த இதழின் மூலமாக இவருக்கு நிறைய செல்வாக்கும், செல்வமும் கிடைத்தது.

1785ல் பெஞ்சமின் பிராங்க்ளின் தான் அமெரிக்காவின் பணக்கார மனிதராக இருந்தார் என்று அறியப்படுகிறது.

Image Credit: commons.wikimedia

அறிவியல்!

அறிவியல்!

அச்சுத்துறையில் புதுமைகள் செய்த சமயம் ஏதாவது புதிதாக தான் கண்டுபிடிக்க வேண்டும் என்ற வீரியத்துடன் செயல்பட்டு வந்தார். அப்போது தான் குறைந்த எரி பொருளுடன் அதிக வெப்பம் தரும் அடுப்பை கண்டுபிடித்தார். அதை தயாரித்து பலருக்கு விற்கவும் செய்தார் பெஞ்சமின் பிராங்க்ளின். இது போக பயிர்களுக்கு செயற்கை உரம் அளித்து எப்படி செழிப்பாக வளர்ப்பது, மின்சக்தி பயன்பாடு என பலவன குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தார்.

மின்னலின் இடியில் இருந்து கட்டிடங்களை காக்க, இடிதாங்கியையும் உருவாக்கினார் பெஞ்சமின் பிராங்க்ளின்.

Image Credit: flickr

கண்டுபிடிப்புகள்!

கண்டுபிடிப்புகள்!

பெஞ்சமின் பிராங்க்ளின் தனது எந்த கண்டுபிடிப்புகளுக்கும் காப்புரிமை வாங்கவில்லை. ஏன் என்று யாரேனும் கேட்டால், நமக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததை கண்டு பெருமை கொள்ள வேண்டும். அதை மக்களுக்கு சிறந்த வகையில் பயன்படும் வகையில் மேம்படுத்தி கொடுத்து சேவை செய்ய வேண்டுமே தவிர, அதற்கு சொந்தம் கொண்டாட கூடாது என கூறுவாராம்.

Image Credit: commons.wikimedia

வேறு துறைகள்!

வேறு துறைகள்!

அச்சு தொழில், அறிவியல் தொழில் என இரண்டிலும் தனது பெரும் பங்களிப்பை கொடுத்து சென்றவர் பெஞ்சமின் பிராங்க்ளின். காகித பணத்தின் இன்றியமையாத சிறப்பை எடுத்துக் கூறி அதன் புழக்கத்தை அதிகரிக்க செய்த சிறப்பும் பெஞ்சமின் பிராங்க்ளினுக்கு உண்டு.

அதே போல சந்தா முறையில் மொத்தமாக பணம் கட்டி புத்தகங்களை வாங்கி படிக்கும் முறையை உலகிற்கு அறிமுகம் செய்தவரும் பெஞ்சமின் பிராங்க்ளின் தான். மேலும், பிலடெல்பியாவின் தபால் துறையில் பல மாற்றங்கள் கொண்டுவந்து, தற்போது பின்பற்றப்படும் பல தபால் துறை கொள்கைகளை அமைத்து உருவாக்கி தந்த பெருமையும் இவருக்கு உண்டு.

சுயசரிதை!

சுயசரிதை!

பெஞ்சமின் பிராங்க்ளின் சுயசரிதை 1771ல் துவங்கப்பட்டது. இது இவர் இறந்த பிறகே வெளியானது. உலகின் சிறந்த சுயசரிதைகளில் பெஞ்சமின் பிராங்க்ளினின் சுயசரிதை முதன்மை இடம் பெற்றுள்ளது. மேலும், பல வல்லுனர்கள் இதுவொரு சிறந்த படைப்பு என போற்றிவருகிறார்கள்.

Image Credit: commons.wikimedia

முறைதவறி!

முறைதவறி!

பெஞ்சமின் பிராங்க்ளினுக்கு தவறான முறையில் பிறந்த மகன் ஒருவர் இருந்தார். அவர் பிரிட்டிஷ் ஆட்சியர்களுக்கு விசுவாசமாக செயல்பட்டு வந்தார் என்றும். போருக்கு பிறகு அவர் லண்டன் சென்று அங்கேயே தனது மீத வாழ்க்கையை வாழ்ந்தார் என கூறப்படுகிறது.

எழுத்துக்கள் நீக்கம்...

எழுத்துக்கள் நீக்கம்...

குரல் ஒலி சார்ந்த எழுத்துக்கள் என C, J, Q, Q, X, Y போன்று எழுத்துக்களை நீக்கி பெஞ்சமின் பிராங்க்ளின் Phonetic Alphabetகள் வரிசை ஒன்றை கூறினார். அனால், இதை அமெரிக்க மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

சிறப்பு!

சிறப்பு!

அமெரிக்கா சதந்திரம் அடைந்த பிறகு முதன் முதலாக இரண்டு அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளது. அதில், முதலாவது, அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டனின் படம். இரண்டாவது பெஞ்சமின் பிராங்கிளினின் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

1790 ஏப்ரில் 17ம் நாள் தனது 84வது அகவையில் இயற்கை எய்தினார் பெஞ்சமின் பிராங்க்ளின். இவரது உடலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தனர். இவரது இறுதி ஊர்வலத்தில் 20,000-திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர் என கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Benjamin Franklin Facts

    Benjamin Franklin Facts
    இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more