மருத்துவமனை செல்லும் வழியில் காரிலேயே பனிக்குடத்துடன் பிறந்த சிசு!

Posted By:
Subscribe to Boldsky

சுக பிரசவம் அனைவருக்கும் சுகமாக அமைவதில்லை. இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் காரணமாக, பல பெண்கள் பிள்ளையை புஷ் செய்ய முடியாமல், அல்லது சரியான ஆரோக்கியம் இல்லாத காரணத்தால் அறுவை சிகிச்சை செய்து தான் பிள்ளை பெறுகிறார்கள்.

சிலருக்கு ஓரிரு வாரங்களுக்கு முன்னரே குழந்தை பிறந்துவிடும். அப்படி பிறந்தாலும் எந்தவிதமான மருத்துவ உதவியும் இல்லாது குழந்தையை பார்த்துக் கொள்ள முடியும்.

ஆனால், இங்கு விசித்திரமாக ஒரு தாய்க்கு குழந்தை பனிக்குடத்துடன் வெளிவந்த சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரெய்லின் ஸ்கர்ரி!

ரெய்லின் ஸ்கர்ரி!

ரெய்லின் ஸ்கர்ரி எனும் பெண் பிரசவத்திற்காக காரில் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவர் அப்போது குழந்தையை பிரசவிக்க புஷ் செய்த போது குழந்தை பனிக்குடத்துடன் வெளிவந்தது. இதை கண்டு வியந்து போன. ரெய்லின் ஸ்கர்ரி மொத்த நிகழ்வையும் அவரது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Image Credit: Instagram / @raeee_nacoal23

29 வாரத்திலேயே!

29 வாரத்திலேயே!

ரெய்லின் ஸ்கர்ரி-க்கு 29 வாரத்திலேயே வலி ஏற்பட்டுள்ளது. ரெய்லின் ஸ்கர்ரி இது சாதாரண வலிதான், கொஞ்சம் நேரத்தில் சரியாகிவிடும் என எண்ணி இருந்துள்ளார். ஆனால், வலி மிகவும் அதிகமாக மோசமாக ஏற்பட காரில் மருத்துவமனைக்கு விரைய முடிவு செய்தார். ஆனால், எதிர்பாராத நேரத்தில் குழந்தை காரிலேயே பிறந்துவிட்டது.

Image Credit: Instagram / @raeee_nacoal23

விசித்திரம்!

விசித்திரம்!

காரில் ரெய்லின் ஸ்கர்ரியும், அவரது துணையும் தான் காரில் சென்றனர். ரெய்லின் ஸ்கர்ரி புஷ் செய்த போது விசித்திரமாக ஏதோ வெளிப்படுதல் கண்டு வினோதமாக உணர்ந்துள்ளனர். ரெய்லின் ஸ்கர்ரி குழந்தையின் தலை சுற்றி இருக்கும் என எண்ணியுள்ளார். ஒரு கட்டத்தில் மிக கடினமாக ரெய்லின் ஸ்கர்ரி புஷ் செய்ய குழந்தை பனிக் குடத்துடன் வெளியே வந்துள்ளது.

Image Credit: Instagram / @raeee_nacoal23

மகன்!

மகன்!

பிறகு மருத்துவமனை விரைந்தனர். அங்கே மருத்துவர்கள் உதவியுடன் குழந்தை பாதுகாக்கப்பட்டது. ஏற்கனவே மகள் இருக்கும் இந்த ஜோடிக்கு இப்போது அழகிய மகன் பிறந்துள்ளான். பிறக்கும் போதே உலகம் மக்களை வியப்பில் ஆழ்த்தும் நிகழ்வோடு பிறந்துள்ளான்.

Image Credit: Instagram / @raeee_nacoal23

பயம்!

பயம்!

முதலில் பனிக் குடத்துடன் குழந்தை பிறந்ததை கண்டு அதிர்ந்தவர்கள் 911 அவசர உதவு எண்ணுக்கு அழைத்துள்ளனர். பிறகு தனது மொபைலில் போட்டோ எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் முகவரியில் பகிர்ந்துள்ளனர். இது போன்ற நிகழ்வு 80,000-த்தில் ஒன்று என மருத்துவர்கள் கூறுகிறார்கள். குழந்தை பிறக்கும் போது 1.36 கிலோ எடை மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Image Credit: Instagram / @raeee_nacoal23

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Baby Born With Amniotic Sac Intact!

Baby Born With Amniotic Sac Intact!
Subscribe Newsletter