யாரும் அறிந்திராத பண்டைய எகிப்து பற்றிய மர்மங்களும், இரகசியங்களும்!

Posted By:
Subscribe to Boldsky

எகிப்து என்றாலே பிரமிடு, மம்மிக்கள், கிளியோபாட்ரா, பூனை, அவர்களது விசித்திரமான சித்திர எழுத்துக்கள் மற்றும் அலங்காரங்கள் தான் நமது நினைவிற்கு வரும்.

உலகின் ஆரம்பக் காலக்கட்ட கலாச்சாரம், நாகரீகம், மொழி என பலவற்றின் முதன்மை இடத்தில் பங்கு கொண்டிருந்து சிறப்பு எகிப்தியர்களுக்கு உண்டு. ஆனால், இவர்களது வாழ்வியல், மொழி, சமூக கட்டமைப்பு, இவர்களை ஆட்சி செய்த அரசர், அரசிகள் குறித்த பல உண்மைகள் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.

உண்மையில் சிறந்த எகிப்து அரசியாக திகழ்ந்த கிளியோபாட்ரா ஒரு எகிப்தியரே கிடையாது. இப்படி நம்மை ஆச்சரியப்படுத்தும் உண்மைகள் பலவன இருக்கின்றன....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சகோதர - சகோதரி

சகோதர - சகோதரி

கிளியோபாட்ரா அவரது இரண்டு சகோதரர்களை வெவ்வேறு காலக்கட்டத்தில் திருமணம் செய்துக் கொண்டார் என நாம் அறிந்துள்ளோம். ஆனால், அவரது தாய் - தந்தை இருவரும் கூட சகோதர, சகோதரி தான் கூறப்படுகிறது.

பிரமிடு!

பிரமிடு!

தி கிரேட் பிரமிடு ஒரு இலட்சம் அடிமைகளை கொண்டு கட்டப்பட்டது என ஒரு புரளி கருத்து நிலவு வருகிறது. ஆனால், அகழ்வாராய்ச்சியாளர்களின் கருத்தின் படி, தி கிரேட் பிரமிடு 5000 நேரடி ஊழியர்கள் மற்றும் 2,000 தற்காலிக தின கூலி ஊழியர்களை கொண்டு கட்டப்பட்டது என கூறப்பட்டுள்ளது.

குறும்பு!

குறும்பு!

மார்க் ஆண்டனி மற்றும் கிளியோபாட்ரா குறும்பு சேட்டைகளில் விரும்பி செயல்படுவார்களாம். அதில் பரவலாக அறியப்பட்ட ஒன்று, இருவரும் மதுபானம் அறிந்துவிட்டு, தெருவில் செல்லும் பொதுமக்களிடம் பிராக்டிகலாக ஏதேனும் செய்ய சொல்லி, பிறகு அதை ஜோக்குகாக செய்தோம் என நகைப்பார்கள் என சில தகவல்களில் கூறப்பட்டுள்ளது.

மேக்கப்!

மேக்கப்!

பொதுவாகவே மேக்கப் என்றால் பெண்களுக்கானது என்று தான் நாம் கருதுகிறோம். ஆனால், எகிப்தியர்களில் ஆண், பெண் இருவருமே மேக்கப் செய்துக் கொள்வார்களாம். இவர்கள் செய்யும் இயற்கை மேக்கப் சூரிய கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக இருந்தது என்றும் கூறப்படுகிறது.

செல்ல பிராணிகள்

செல்ல பிராணிகள்

பெரும்பாலும் எகிப்தியர்கள் பூனைகளை தங்கள் செல்ல பிராணிகளாக வளர்த்தனர் என்று அறியப்படுகிறது. ஆனால், பூனையை தவிர, நாய், சிங்கம், குரங்கு, பருந்து, பபூன் எனும் குரங்கு வகை விலங்கு என பல விலங்குகளை இவர்கள் செல்ல பிராணிகளாக வளர்த்துள்ளனர்.

எகிப்தியர்கள் அரசர்கள், அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள், முக்கிய மனிதர்களை மட்டும் மம்மிஃபைட் செய்து வைக்கவில்லை. தாங்கள் அன்பாக வளர்த்த பூனை, முதலை போன்றவற்றை கூட மம்மிஃபைடுசெய்து வைத்துள்ளனர்.

கிரேக்க வம்சாவளி!

கிரேக்க வம்சாவளி!

கிளியோபாட்ரா பண்டைய காலத்து எகிப்தின் பேரழகி, அரசி என நாம் அனைவரும் அறிவோம். ஆனால், கிளியோபாட்ரா ஒரு எகிப்தியரே கிடையாது. ஆம், இவர் கிரேக்க வம்சாவளியை சேர்ந்தவர் என்றும், அலெக்ஸ்சாண்டர் தி கிரேட்டின் தளபதிகளில் ஒருவரின் வம்சாவளி என்றும் கூறப்படுகிறது.

கிங் துத்

கிங் துத்

எகிப்து அரசர்களில் வரலாற்றில் பெரும் பெயர் பெற்று திகழந்தவர் கிங் துத். இவர் நீர்யானையால் மிதிக்கப்பட்டு இறந்திருக்க கூடும் என அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இவரது இதயம் / செஞ்சு பகுதி இல்லாமலேயே உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மிதிப்பட்டு அல்லது நீரியானையை வேட்டையாடும் போது அதனால் கடிக்கப்பட்டு இவர் இறந்திருக்கலாம் என்றும் சிலர் கருத்து பகிர்ந்துள்ளனர்.

ஆண், பெண் சமநிலை!

ஆண், பெண் சமநிலை!

எகிப்தில் ஆண், பெண் ஏற்றத்தாழ்வு கிடையாது. அவர்கள் ஆண், பெண் இருவரையும் ஒரே மதிப்புடன் நடத்தியுள்ளனர். சமூகத்தில் இருவருக்கும் சம அளவு பங்களித்து பாராட்டியுள்ளனர். அவர்களது சட்டதிட்டங்களும் அப்படி தான் இருந்துள்ளது. இது சொத்து, பணம், பொருள் வாங்குதல், வேலை, விவாகரத்து, மறுமணம் என அனைத்திற்கும் பொருந்தியுள்ளது.

பீர், ஒயின்!

பீர், ஒயின்!

பண்டையக் காலத்து எகிப்தியர்களின் ஊட்டச்சத்துக்கு ஆதாரமாக பீர் இருந்ததாக கூறப்படுகிறது. தங்களது அன்றாட உணவில் பீருக்கு ஒரு பங்களித்துள்ளனர் எகிப்தியர்கள். மேலும், அந்த காலத்தில் பீரை பணம் போலவும் செலவு செய்துள்ளனர் எகிப்தியர்கள். அதாவது தங்களிடம் இருக்கும் பீரை கொடுத்து வேறு பொருட்களை வாங்கியுள்ளனர்.

எகிப்தை ஆண்ட மன்னர்கள் அதிக உடல் எடையுடன், ஆரோக்கியமற்று இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அவர்களது டயட்டானது இறைச்சி, பீர், ஒயின், பிரெட், தேன் போன்றவற்றை மிகுதியாக உட்கொண்டுள்ளனர். இவர்களுக்கு அந்த காலத்திலேயே நீரிழிவு பாதிப்பு இருந்திருக்கலாம் என்றும் சில ஆய்வாளர்கள் சந்தேக்கின்றனர்.

கிளியோபாட்ரா திறமை!

கிளியோபாட்ரா திறமை!

கிளியோபாட்ராவை வெறும் அழகு கொண்டு மட்டுமே பெரும்பாலான வரலாற்று சான்றுகள் பதியப்பட்டுள்ளன. ஆனால், கிளியோபாட்ரா கணிதம், தத்துவம், வானியல் மற்றும் 12 மொழிகள் பேசுவதில் திறமைசாலி.

புதிய உலகம்!

புதிய உலகம்!

எகிப்திலேயே கொகைன், ஹாஷிஷ் மற்றும் நிகோடின் போன்றவை உபயோகப்படுத்தியதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. ஆனால், இவை எல்லாம் அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கும் என கருதப்பட்ட பொருட்களாக இருந்தன. இதை வைத்து ஒரு சில ஆய்வாளர்கள், புதிய உலகம் என அழைக்கப்பட்ட அப்பகுதியை ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே எகிப்தியர்கள் அடைந்திருக்க கூடும் என சந்தேகிக்கிறார்கள்.

பண்டையக் காலத்து எகிப்தியர்கள் தான் உடலை பதப்படுத்தும் மம்மிஃபைடு செய்து வந்தார்கள் என கூறப்படுகிறது. ஆனால், தென் அமெரிக்கர்களும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த இந்த முறையை கடைபிடித்து வந்துள்ளனர்.

உடல் உறுப்புகள்

உடல் உறுப்புகள்

ஓர் உடலை மம்மியாக பதப்படுத்தும் போது, அந்த உடலில் இருந்து மூளையை அகற்றிவிடுவார்கள். மேலும், குடலையும் அகற்றிவிடுகிரார்கள். உடலில் இருந்து நீக்கப்படமால் இருந்த ஒரே பொருள் இதயமாக மட்டுமே இருந்துள்ளது. ஏனெனில், இதயத்தை உயிரின் ஆசனமாக கருதியுள்ளனர் எகிப்தியர்கள்.

கண்டுபிடிப்புகள்...

கண்டுபிடிப்புகள்...

நாம் இன்று அன்றாடம் பயன்படுத்தும் பேப்பர், சாவி, பூட்டு போன்றவை பண்டையக் காலத்து எகிப்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை என கருதப்படுகிறது. மேலும், இவர்கள் டூத்பேஸ்ட்-ம் உருவாக்கியுள்ளனர். பேப்பர், ஐரிஸ் மலர்கள் மற்றும் ராக் சால்ட் கொண்டு இதை அவர்கள் தயாரித்துள்ளனர்.

ஆணுறை

ஆணுறை

அரைக்கச்சைகளை (loincloths) பண்டையக் காலத்து எகிப்தியர்கள் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க ஆணுறையாக பயன்படுத்தி வந்திருக்கலாம் என சில வரலாற்று ஆய்வாளர்கள், ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிறந்த பெண் ஆட்சியர்

சிறந்த பெண் ஆட்சியர்

வரலாற்று கூற்றின் படி, எகிப்தை மூன்று பெண்கள் ஆட்சி செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. அதில் சிறப்பாக ஆட்சி செய்தவர் கிளியோபாட்ரா (Hatshepsut) என்று கருதுகிறார்கள். கிளியோபாட்ரா என்பவர் ஒருவர் இல்லை என்றும், பலர் இப்பெயரில் வாழ்ந்துள்ளனர் என்றும் அறியப்படுகிறது.

தி கிரேட் பிரமிடு ஆப் கிஸா

தி கிரேட் பிரமிடு ஆப் கிஸா

நான்காயிரம் ஆண்டுகளாக மனிதர்களால் கட்டப்பட்ட பெரிய வடிவமாக திகழ்ந்து வருகிறது தி கிரேட் பிரமிடு ஆப் கிஸா. ஏறத்தாழ தி கிரேட் பிரமிடு ஆப் கிஸா கட்ட 23 இலட்சம் தனித்தனி பிளாக் கற்கள் பயன்படுத்தி இருக்கலாம் என்று கணக்கிட்டுள்ளனர்.

பண்டையக் காலத்தில் ஆட்சி செய்த மன்னர் இறந்தால், அவருக்கு பணிவிடை செய்து வந்த சேவகர்களும் அவருடன் புதைக்கப்படுவார்களாம்.

ராம்செஸ் தி கிரேட்

ராம்செஸ் தி கிரேட்

ராம்செஸ் (Ramses) தி கிரேட் எனும் எகிப்து ஆட்சியாளர் எட்டு மனைவிகள் மற்றும் நூற்றுக்கும் மேலான காமக்கிழத்திகள் வைத்து 90 ஆண்டுகள் உயிர் வாழ்ந்துள்ளார். இவர் 1213 பி.சி-யில் மரணம் அடைந்தார்.

எழுத்துக்கள்

எழுத்துக்கள்

பழங்கால எகிப்தியரின் சித்திர வடிவ எழுத்துக்கள் ஆகிய Hieroglyphics உயிரெழுத்து இல்லை என்பதால், பண்டைய காலத்து எகிப்தியர்கள் எப்படி அந்த சித்திர எழுத்துகளை உச்சரித்தனர் என்பதை அறிய முடியாமல் போனது. மனித நாகரீக தோற்றத்தில் பழைமையான மொழிகளில் ஒன்றாக கருதப்படுவது எகிப்தின் சித்திர வடிவங்கள். ஏறத்தாழ 2000 எழுத்துக்கள் கொண்டுள்ள இதை பண்டைய எகிப்தியர்கள் எழுத பயன்படுத்தி வந்துள்ளனர்.

வண்டுகள்!

வண்டுகள்!

பெரும்பாலான பிரமிடுகள் ஆட்சி செய்த அரசர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்காக மட்டுமே கட்டப்பட்டுள்ளன. இதுவரை எகிப்தில் 130 பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பண்டைய கால எகிப்தியர்கள் வண்டி இறப்பிற்கு அடுத்த வாழ்கையை உணர்த்தும் இலட்சினையாக / உயிர்தெழுதல் அடையாளமாக கருதியுள்ளனர்.

காலண்டர்!

காலண்டர்!

பண்டையக் காலத்து எகிப்தியர்கள் மூன்று வித்தியாசாமான காலண்டர்களை பயன்படுத்தி வந்துள்ளனர். ஒன்று வானியல் காலண்டர், மற்றொன்று தினம் பயன்படும் காலண்டர். மற்றொன்று சந்திர காலண்டர்.

சிறப்பு!

சிறப்பு!

பண்டையக் காலத்து எகிப்தியர்கள் தான் உலகின் முதல் மருத்துவர்கள், முதல் பொறியாளர்கள் மற்றும் முதல் கட்டிட கலைஞர்கள் என உலக அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

மற்றும் சில...

மற்றும் சில...

ஒரு மம்மியின் உடலில் கட்டப்பட்டிருக்கும் பேண்டேஜ் அவிழ்த்து கணக்கிட்டு பார்த்த போது அதன் நீளம் ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) தூரம் அளவு இருந்ததாம்.

பண்டையக் காலத்து எகிப்தில், ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு தெய்வங்களை எகிப்தியர்கள் வணங்கி வந்துள்ளனர்.

பண்டைய காலத்து எகிப்து கல்லறைகளில் / சமாதிகளில் கழிவறை கட்டி வைத்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ancient Egypt Facts and Myths

Ancient Egypt Facts and Myths
Story first published: Thursday, November 16, 2017, 10:09 [IST]