உலகின் முதல் ரியலிஸ்டிக் செக்ஸ் பொம்மை கண்டுபிடிப்பு!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய நவநாகரீக உலகில் செக்ஸ் மீதான ஈர்ப்பு, மனிதர்களை ஆட்டிவைக்கிறது என்று தான் கூற வேண்டும். செக்ஸ் இயல்பு, இயற்கையானது என்பதை தாண்டி ஆண், பெண் வேறுபாடு இன்றி பெரும் தேவையாகிவிட்டது.

அதன் வெளிப்பாடாக தான் செக்ஸ் பொம்மைகளின் பிறப்பு காணப்படுகிறது. உலகெங்கிலும் ஆண், பெண்களுக்கு என தனித்தனியாக செக்ஸ் பொம்மைகள் விற்க படுகின்றன. முன்னர் செக்ஸ் பொம்மைகள் என்ற பெயரில் சிறுசிறு கருவிகள் விற்கப்பட்டன.

ஆனால், இன்று அது ஒரு மனிதனை போல பெரும் உருவில் தயாரித்து, விர்சுவல் ரியாலிட்டி, ஆர்ட்டிஃபிசியல் இன்டலிஜென்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் புகுத்தி மனித துணைக்கான ஒரு மாற்றாக தயாரித்து வருகிறார்கள்.

அந்த வகையில், இப்போது உலகின் முதல் ரியலிஸ்டிக் செக்ஸ் பொம்மை வெளியாகவுள்ளது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேற லெவலில்!

வேற லெவலில்!

இதுவரை இருந்து செக்ஸ் பொம்மைகள் வெறும் பொம்மைகளாக மட்டுமே இருந்தன. இதற்கு முன்னர் வெளியான சில செக்ஸ் பொம்மை வகைகள் பார்க்க நிஜமான பெண் போல இருப்பினும் அது பொம்மை தான்.

ஆனால், இப்போது வெளியாகவுள்ள ரியலிஸ்டிக் செக்ஸ் பொம்மை அதற்கும் மேலானது என கூறலாம்.

எக்ஸ் டால்!

எக்ஸ் டால்!

EXdoll என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த செக்ஸ் பொம்மை உணர்ச்சிகளை வெளிப்படுத்தும், பேசினால் பதில் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றுவரை வெளியான செக்ஸ் பொம்மைகளில் இது தான் ரியலிஸ்டிக் செக்ஸ் பொம்மை என கூறலாம்.

சிலிகான்!

சிலிகான்!

இந்த சிலிகான் செக்ஸ் பொம்மைகள் பார்க்க உண்மையான பெண்ணை போலவே இருக்கும். நடக்கும், அதனுடன் பேசினால், மீண்டும் பதிலளிக்கும் வகையில் உருவாக்கியுள்ளனர். இதுவரை முன்மாதிரி வடிவில் இருக்கும் இது, வெளியானால் சந்தையில் பெரும் இடத்தை பிடிக்கும் என இதன் உற்பத்தியாளர்கள் கருதுகின்றனர்.

ஸ்மார்ட் போன்!

ஸ்மார்ட் போன்!

இந்த எக்ஸ் டால் ரியலிஸ்டிக் செக்ஸ் பொம்மையின் தலையை ஸ்மார்ட் போன் மூலமாக கட்டுப்படுத்தலாம். இதற்கு ப்ளே ஸ்டேஷன் கண்ட்ரோலர் இருக்கிறது. இதன் விலை 4,500 யூரோக்கள் வரை நிர்ணயிக்கப்படலாம். இந்திய மதிப்பில் 3.34 லட்சமாகும்.

2014 முதலே...

2014 முதலே...

ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் மூலமாக கடந்த 2014 முதலே இந்த எக்ஸ் டால் உருவாக்க செயற்பாடுகள் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன.

டெர்மினேட்டர் சை போர்க் வகையில் இதை உருவாக்க திட்டமிட்டு இருந்துள்ளனர். இதன் தலையை மட்டும் தனியாக கண்ட்ரோல் செய்ய மொபைல் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மொழிகள்!

மொழிகள்!

வரும் 12 மாதங்களுக்குள் ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் இந்த எக்ஸ் டால் செக்ஸ் பொம்மைகளை பேச வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

ரோபோட் குரல் போல இல்லாமல், மனித குரல் போல பேச வேண்டும் என்பதற்காக நிறைய ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்கு சற்று நேரம் எடுத்துக் கொள்ளும் என கூறுகிறார்கள்.

முகபாவனைகள்!

முகபாவனைகள்!

வெறுமென பேசுவது மட்டுமின்றி, முக பாவனைகளும் தரும் வகையில் இந்த செக்ஸ் பொம்மையை தயாரித்து வருகிறார்கள் எக்ஸ் டால் நிறுவனத்தார்.

கடந்த இரண்டு வருடமாக இதன் நகர்வுகள், தொடும் திறன் போன்றவற்றை பரிசோதித்து வந்துள்ளனர். இந்த பொம்மைகள் ஒரு அடல்ட் பெண்ணின் உருவ நிலையில் உள்ளபடி தயாரித்து வருகிறார்கள்.

இன்னும் இந்த பொம்மையை மேம்படுத்த நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

All Image Credits: EXdoll

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things To Know About Worlds First Realistic Sex Doll!

Things To Know About Worlds First Realistic Sex Doll!