உலகின் ஜைஜாண்டிக் நபர் ஆண்ட்ரூவின் திகைக்க வைக்கும் படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

அர்னால்ட் அருகே நின்றால் பலரும் குட்டி எறும்பு போல தான் தெரிவார்கள். ஆனால், ஆண்ட்ரூ அருகே நின்றால் அர்னால்டு அனிருத் போல தான் தெரிவார் என்றால் உங்களால் நம்ப முடியுமா? நம்பி தான் ஆகவேண்டும். WWE-க்கு முன்னே WWF பார்த்து, ரசித்தவர்களுக்கு ஆண்ட்ரூ மிகவும் பரிச்சயம் ஆனவர் தான்.

ஜைஜாண்டிக் என்ற வார்த்தைக்கு இவரை விட பொருத்தமாக யாரும் இருக்க மாட்டார்கள் என கூறலாம். அந்த அளவிற்கு உயரமும், உடல் அகலமும் கொண்ட மாபெரும் மனிதர், உயரம் மற்றும் உடல் எடையில். கொஞ்சம் நேரம் வியந்து போக வேண்டும் என்றால் இந்த படங்களை கண்டு செல்லுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அர்னால்ட்!

அர்னால்ட்!

கானன் தி டெஸ்ட்ராயர் என்ற படத்தின் ஷூட்டிங் உணவு இடைவேளையில் அர்னால்டை அலேக்காக தூக்கி காற்றில் மிதக்கவிட்டப்படி போஸ் கொடுக்கும் ஆண்ட்ரூ.

பாபி!

பாபி!

பிரஃபஷ்னல் பாக்ஸிங் வீரர் பாபி சாகோனை ஆண்ட்ரூ 1979ல் நேரடியாக சந்தித்த போது எடுத்துக் கொண்ட படம். ஏதோ கைக்குழந்தையை தடுத்து நிறுத்துவது போல தனது ஒற்றை கையில் பிடித்து வைத்துள்ளார் ஆண்ட்ரூ.

குடி!

குடி!

ஆண்ட்ரூ உலகிலேயே பெரிய குடிகாரர் என கூறலாம். ஒரே முறையில் தொடர்ந்து 150 பீர் குடிக்கும் அளவிற்கு ஆண்ட்ரூ குடிப்பார். அவரது கைகளில் பிடித்திருப்பது ஒரு டின் பீர் தான். ஆனால், ஏதோ மூக்கு பொடி டப்பா போல இருக்கிறது.

பொம்மை அல்ல...

பொம்மை அல்ல...

பொதுவாகவே ஆண்ட்ரூ ஏதேனும் சாதாரண பொருள் அருகே சென்று நின்றால் அது பொம்மை போல தான் காட்சியளிக்கும். இதை பாருங்கள், பார்க்க குழந்தைகள் ஓட்டும் பொம்மை பைக் போல இருக்கும் இது, பெரியவர்கள் ஓட்டும் பைக்.

12 வயதில்...

12 வயதில்...

ஆண்ட்ரூ தனது 12 வயதில் எடுத்துக் கொண்ட படம் இது. அப்போதே அவர் 6'3 அடி உயரமும், 240 பவுண்டு எடையும் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகமது அலி!

முகமது அலி!

1975ல் உலக சாம்பியன் முகமது அலியுடன் ஆண்ட்ரூ எடுத்துக் கொண்ட புகைப்படம் இது. இருவரது கை அளவை பார்த்தாலே வியப்பாக இருக்கிறது. ஆண்ட்ரூ நிஜமாகவே ஜைஜாண்டிக் நபர் தான்.

போதுமா...

போதுமா...

மூன்று ஆட்கள் செய்யும் வேலையை ஒற்றை ஆளாக செய்யும் திறன் கொண்டிருந்தார் ஆண்ட்ரூ. எதையும் அசால்ட்டாக தூக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. இதோ! நான்கு பெண்களை எப்படி தூக்கி பிடித்திருக்கிறார் பாருங்கள்.

WWF!

WWF!

1985ல் நடந்த ரெஸில்மேனியாவின் போட்டியில், மெடிசன் சதுர பூங்காவில் ஆண்ட்ரூ நடுவில் நின்று அனைவரையும் பறக்கவிட்ட போது எடுத்த படம் இது.

பெண்களுடன்!

பெண்களுடன்!

பாரிசில் நடந்த ஃபேஷன் ஷோ ஒன்றில் 1966ல் வெறும் டவல் மட்டுமே கட்டிய பெண்களுடன் ஆண்ட்ரூ, இரு கைகளின் நீளத்தின் கீழே பத்து பெண்கள்.

ஜப்பான்!

ஜப்பான்!

ஆண்ட்ரூ ஜப்பான் சென்ற போது அங்கே கழிவறைகள் பயன்படுத்த மிகவும் சிரமப்பட்டாராம். பாத்டப் தான் அவருக்கு மாற்றாக அளிக்கப்பட்டது எனவும் சில தகவல் பதிவாகியுள்ளன. அவர் இடுப்பில் குழந்தை போல அமர்ந்திருக்கும் பெண்ணுக்கு 20 வயதுக்கும் மேல் இருக்கும்.

ப்ளைட்!

ப்ளைட்!

ப்ளைட்டில் இருவர் அமர்ந்து செல்லும் இருக்கையில் ஆண்ட்ரூ ஒருவர் மட்டும் தான் அமர முடியும். அவரது உயரமும், உடல் அகலமும் அவ்வளவு பெரியது ஆகும். 1980-ல் ஒருமுறை ஆண்ட்ரூ ஜப்பானுக்கு ப்ளைட்டில் சென்ற போது எடுத்த படம் இது.

All Image Courtesy: ATI

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Thing to Know About Andre The Giant!

Thing to Know About Andre The Giant!