பல் ஈறுகளில் பச்சை குத்திக் கொள்ளும் வினோத சடங்கு முறை!

Posted By:
Subscribe to Boldsky

பற்களை பாதுகாப்பது, அவற்றை பராமரிப்பது என்பது மிகவும் அவசியமானது. இதனை கண்டுகொள்ளாமல் விடுவதால் தொற்று ஏற்ப்பட்டு பல விதமான நோய்கள் உண்டாகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு பற்களை எல்லாரும் பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக வருந்தோறும் இன்றைய தினம் தேசிய பற் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

பச்சைக் குத்திக் கொள்வது இன்றைக்கு ஒரு பேஷனாகி விட்டது. சிலர் உடல் முழுவதும் பச்சைக் குத்திக் கொள்வார்கள். ஆனால் இதுவரை நீங்கள் கேள்விப்படாத வகையில் பற்களின் ஈறுகளில் பச்சைக் குத்திக்கொள்கிறார்கள் ஆப்பிரிக்க மக்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்ரிக்கா :

ஆப்ரிக்கா :

ஆப்ரிக்காவில் உள்ள மேற்கு பகுதியில் சென்கல் என்ற பகுதியில் உள்ள பெண்கள் அதிகமாக ஈறுகளில் பச்சை குத்திக் கொள்கிறார்கள். குறிப்பிட்ட எந்த டிசைனும் இல்லாத ஒரே மாதிரிபச்சை குத்திக் கொள்கிறார்கள். ஈறுகளில் பச்சை குத்திக் கொள்வது, கருப்பு நிறத்தில் இருக்கிறது.

இப்படி பச்சைக் குத்திக் கொள்வது தான் அழகு என்றும் நினைக்கிறார்கள்.

Image Courtesy

நடைமுறை :

நடைமுறை :

நெடுங்காலமாக நடைப்பெற்று வரும் இந்த வழக்கத்தை அங்கிருக்கும் பெண்கள் கடைபிடிக்கிறார்கள். வயதான பெண்மணி ஒருவர், தன் மடியில் படுக்க வைத்து இப்படி பச்சை குத்துகிறார். ஒரு வகையான திரவ எண்ணெய் இதற்கு பயன்படுத்தப்படுகிறது.

மிகச்சிறிய ஊசியை கொண்டு ஈறுகளில் குத்துகிறாள். சிலர் வலி தாங்காமல் அலற அவர்களை சமாதானப்படுத்திக் கொண்டே தொடர்ந்து குத்துகிறார்கள். அதற்கு மேல் கருப்பு நிற வண்ணத்தை பூசுகிறார்கள்.

Image Courtesy

7 லேயர்கள் :

7 லேயர்கள் :

ஒவ்வொருவரின் விருப்பத்திற்கு ஏற்றப்படி பல லேயர்கள் வைக்கப்படுகிறது. குறைந்தது எல்லாரும் 7 லேயர்கள் வரை பூசிக் கொள்வார்களாம். ஆனால் மூன்று லேயர்களை தாண்டும் போதே வலி அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Image Courtesy

பற்கள் பாதுகாப்பு :

பற்கள் பாதுகாப்பு :

இந்த நடைமுறை பற்களையும் பாதுகாக்கும் என்று சொல்கிறார்கள். ஈறு வலி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஆகியவை ஏற்படாது என்கிறார்கள். வலி அதிகமாக இருப்பதால் பெரும்பாலானோர் தவிர்த்து வருகிறார்கள். ஆனாலும் தங்களை அழகாக காட்டிக் கொள்ள ஈறுகளில் பச்சை குத்திக் கொள்வது தொடர்கிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

African Women tattooed their gums

African Women tattooed their gums
Story first published: Thursday, September 21, 2017, 11:03 [IST]