மனித இன தோற்றத்தில் ட்விஸ்ட், வரலாற்றை புரட்டிப்போட்ட 3 லட்ச வருடங்களுக்கு முன் நடந்தது என்ன?

Posted By:
Subscribe to Boldsky

நீங்கள் ஆங்கில படத்தில் மட்டுமே கண்ட மனிதர்கள் மற்றும் குரங்கு இனத்திற்கு இடைப்பட்டது போன்ற தோற்றம் கொண்டிருந்த சிறுமூளை மனிதர்கள் மூன்று லட்சம் வருடத்திற்கு முன்னரே அழிந்துவிட்டதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் நம்பி வந்தனர்.

ஆனால், இந்த சிறுமூளை மனிதர்கள் மனிதர்களுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் எப்படி அழிந்தார்கள் என்பது தான் கேள்வி குறியாக இருக்கிறது என சமீபத்திய ஜோகன்ஸ்பர்க் ஆய்வு ஒன்றில் அறியப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜோகன்ஸ்பர்க் அருகே...

ஜோகன்ஸ்பர்க் அருகே...

ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இரண்டு இடங்களில் மனித இன படிமங்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டிபிடித்துள்ளனர்.

அதில், மூன்று லட்சம் வருடங்களுக்கு முன் அழிந்ததாக அறியப்பட்டு வந்த மனித இனம் போன்ற தோற்றம் கொண்டவர்களது படிமங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

2,36,000 - 3,35,000-களுக்கு இடைப்பட்ட காலத்தில்...

2,36,000 - 3,35,000-களுக்கு இடைப்பட்ட காலத்தில்...

மனித இனம் போன்ற தோற்றம் கொண்டிருந்த இவர்களை சிறு மூளை மனிதர்கள் என ஆராய்சியாளர்கள் கூறி வந்துள்ளனர்.

இந்த இனம் இரண்டு இலட்சம் வருடங்களுக்கு முன்பே அழிந்திருக்க கூடும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிவரப்பட்ட இந்த குறிப்பிட்ட மனித இனம் 2,36,000 ஆண்டுகளுக்கும் 3,35,000 ஆண்டுகளுக்கும் இடையே வாழ்ந்து வந்திருந்தது இந்த ஆராய்ச்சியின் மூலம் அறியப்பட்டுள்ளது.

மனிதர்களுடன் சேர்ந்து...

மனிதர்களுடன் சேர்ந்து...

இந்த சிறுமூளை மனித இனத்தில் இருந்து தான் தற்போதைய மனிதர்கள் மாறுப்பட்டு பரிமாணம் அடைந்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.

ஆனால், இந்த இனம் மனிதர்கள் இடம் நெருங்கி இருந்த சிம்பான்சி, கெரில்லாக்களுடன் மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வந்தது என அறியப்படுகிறது.

மேலும், இந்த சிறு மூளை மனிதர்கள் வாழ்ந்து வந்த காலக்கட்டத்தில் தான் தற்போதைய மனிதர்களின் மூதாதையர்கள் வாழ்ந்து வந்திருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இறந்தவர்களை புதைக்கும் வழக்கம்...

இறந்தவர்களை புதைக்கும் வழக்கம்...

மேலும் இந்த சிறுமூளையுடைய மனித இனம் இறந்தோரை புதைக்கும் வழக்கம் கொண்டிருந்துள்ளனர் என்பது ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இறந்தவர்களை புதைக்கும் வழக்கம் தற்போதைய மனித இனத்திற்கு மட்டுமே இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கருதி வந்த கருத்திற்கு இந்த புதிய கண்டுபிடிப்பு வியப்பாக அமைந்துள்ளது.

மனிதர்கள் காரணமா?

மனிதர்கள் காரணமா?

மனித இனம் போன்றே தோற்றம் கொண்டிருந்த சிறு மூளையுடைய மனித இனத்தின் அழிந்ததற்கு தற்போதைய மனித இனம் காரணமாக இருந்திருக்குமா என்ற கேள்விக்கு அறிவியலர் ஆம் என பதில் அளித்துள்ளனர்.

அந்த காலகட்டத்தில் இந்த மனித இனத்திற்கும் பிற மனித இனங்களுக்கும் மரபணு பரிமாற்றங்கள் நடந்திருக்க கூடிய சாத்தியங்கள் இருந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மரபணு கிடைக்கவில்லை...

மரபணு கிடைக்கவில்லை...

பல வியப்புகள் அளித்துள்ள இந்த ஆய்வில், அந்த இனத்தின் மரபணு மட்டும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது கிடைத்தால் மனித இன வரலாற்றின் பல கேள்விகளுக்கு விடை கிடைத்துவிடும். மேலும், பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இருந்த மனித நிலையையும் அறியும் வாய்ப்பு கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A Twist in Our History: Early humans Co-existed in Africa with human-like Species 300000 Years Ago!

A Twist in Our History: Early humans Co-existed in Africa with human-like Species 300000 Years Ago!
Subscribe Newsletter