Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
கருவிழியை சவரம் செய்யும் சீனக்கலைஞர்! அதிர்ச்சியூட்டும் சீன மருத்துவம்
சீனாவைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் கருவிழியை சவரம் செய்கிறார்
எப்போது அசாதரணமான விஷயங்களை செய்வதில் சீனக்கலைஞர்கள் வல்லவர்கள். அப்படி, பார்ப்பவர்களை அச்சுறுத்தும் விஷயத்தை செய்திடும் சீனக்கலைஞரை பற்றிய அறிமுகம் தான் இது.
சவரம் செய்வதை சர்வ சாதாரணமாக கடந்துவிடுவோம். ஆனால் இங்கே சீனக்கலைஞர் ஒருவர் கருவிழியை சவரம் செய்கிறார்.

40 ஆண்டுகளாக :
சீனாவைச் சேர்ந்த அறுபத்தி ரெண்டு வயதாகும் நபர் க்சியாங் காவு. இவர் கடந்த நாற்பது ஆண்டுகளாக கண்களில் சவரம் செய்து வருகிறார்.

கண்களுக்கு சவரம் :
கூர்மையான கத்தியை பட்டை தீட்டி அதில் ஏதோ ஒரு திரவத்தை வைக்கிறார். அதனைக் கொண்டு தன் முன்னால் படுத்திருக்கும் நபரின் கண்களை அகல விரித்து சவரம் செய்கிறார்.

இருபதாம் நூற்றாண்டு :
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இப்படி கண்களை சவரம் செய்வது மருத்துவமனைகளிலேயே நடைமுறையில் இருந்திருக்கிறது. இதன் மூலமாக ட்ராக்கோமா நோயை குணப்படுத்த முடியும் என்று நம்பப்பட்டு வந்திருக்கிறது.

பார்வையை பாதிக்கும் :
பின்னர் பயன்படுத்தும் கத்தி துருபிடித்திருந்தால் அது பார்வையையே பாதிக்கும் என்று எச்சரிக்கப்பட்டதால் இந்த நடைமுறை அப்படியே வழக்கொழிந்து போய்விட்டது.

துல்லியமான பார்வை :
நாற்பது ஆண்டுகளாக பலரும் இவரிடம் கண்களை சவரம் செய்திருக்கிறார்களாம் ஆனால் இதுவரை யாருக்கும் எந்த காயமும் ஏற்ப்பட்டதில்லையாம். முப்பது வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு மட்டுமே கண் சவரம் செய்கிறார். இப்படிச் செய்வதால் கண்களில் அழுக்கு சேராதாம். பார்வை துல்லியமாக இருக்குமாம்.



Click it and Unblock the Notifications
