For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாம் ஏன் தீபாவளியை கொண்டாடுகின்றோம்?

நாம் ஏன் தீபாவளியை கொண்டாடுகின்றோம்?

By Super Admin
|

தீபங்களின் பண்டிகையான தீபாவளி இந்தியா முழுவதும் அக்டோபர் அல்லது நவம்பர் மாத மத்தியில் கொண்டாடப்படுகிறது. தீபாவளியை இந்துக்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் ஆகிய அனைவரும் கொண்டாடுகின்றனர். தீபாபவளியானது இருளை ஒளி வீழ்த்தியதை குறிக்கின்றது. நாம் நம்முடைய குழந்தை பருவத்தில் இருந்து இந்த திருவிழா தொடர்பான ஏராளமான கதைகளை கேட்டு வளர்ந்துள்ளோம். இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் தீபாவளி சம்பந்தப்பட்ட கதைகள் பல்வேறு வடிவங்களில் கதைக்கப்படுகின்றது. அவை அனைத்தும் உங்களின் ஆன்மீகத் தேடலை முன்னோக்கி எடுத்துச் செல்லும் ஒரு உன்னத விஷயங்கள் ஆகும்.

Why Do We Celebrate Diwali

திருவிழா சம்பந்தமாக உலவும் செவி வழிச் செய்திகளை தெரிந்து கொள்வது தீபாவளி கொண்டாட்டங்களை மிகவும் மதிப்பு மிக்கதாக மாற்றும். மேழும் இது நம்மைச் சுற்றி சாதகமான அதிர்வுகளைக் கொண்டு வரும் ஒரு உன்னத நேரம் ஆகும். ஆன்மீகத் தேடலைத் தவிர்த்து, இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் இந்த தீபாவளி பண்டிகை மீது ஆர்வம் கொள்ள வைக்கக் கூடிய பல விஷயங்கள் உள்ளன.

இப்போதெல்லாம் தீபாவளி என்றாலே ஷாப்பிங் என்று மாறி விட்டது. நாம் நம்முடைய நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்கள் மற்றும் அண்டை வீட்டாருக்கு புதிய துணி அல்லது பரிசுகளை வாங்கிக் குவிக்கின்றோம். பரிசுகளை பரிமாறிக் கொள்வது தீபாவளி கொண்டாட்டத்தின் முக்கிய பகுதியாக உள்ளது. பரிசுகளில் உலர் பழங்கள், இனிப்புகள் மற்றும் பருவகால சிறப்புகள் போன்றவை அடங்கும். மேழும் பட்டாசு இந்த தீபாவளி கொண்டாட்டத்தின் தவிர்க்க முடியாத பகுதியாக உள்ளது.

இங்கே நாம் இந்தக் கட்டுரையில் ஏன் தீபாவளியை கொண்டாடுகின்றோம் என்பதைப் பற்றி விவாதிக்கப் போகின்றோம்.

ராமர் வெற்றி பெற்ற தினம்:

ராமாயணத்தின் படி, ராமர் அவரது மனைவி சீதா மற்றும் சகோதரர் லச்சுமணனுடன் அயோத்தியை விட்டு வெளியேறி 14 ஆண்டுகள் வனவாசம் சென்றார். வனவாசத்தின் முடிவில் அவர் அரக்கர்களின் அரசனான ராவணனை வதம் செய்தார். ராமர், ராவணனை வென்றதைக் கொண்டாட அயோத்தி முழுவதும் வண்ண விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்டு வான வேடிக்கை நிகழ்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தீய சக்தி தோல்வி அடைந்ததை நினைவு கூறும் விதமாக தீபாவளி கொண்டாடப்படுகின்றது.

பாண்டவர்கள் நாடு திரும்பிய தினம்:

மகாபாரதத்தில் கூட தீபாவளி பற்றிய ஒரு கதை உண்டு. பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் கெளரவர்களிடம் தோற்று நாடு நகரங்களை எல்லாம் இழந்து நாட்டை விட்டு வெளியேறி 13 ஆண்டுகள் வனவாசம் மற்றும் அஞ்ஙாதவாசம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதை மக்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இறுதியில், பாண்டவர்கள் கெளரவர்களை பாரதப் போரில் தோற்கடித்து தங்களின் நாட்டிற்கு திரும்பினர். பாண்டவர்கள் நாடு திரும்பியதை மக்கள் மிகுந்த உற்சாகத்துடன விளக்குகள் ஏற்றி வானவேடிக்கை காட்டி கொண்டாடினர். அதன் தொடர்ச்சியாக தீபாவளி கொண்டாடப்படுகின்றது.

அன்னை லக்ஷ்மியின் அவதார தினம்:

அன்னை லக்ஷ்மி, செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மி, தீபாவளி அன்று ஆழ்கடலில் இருந்து அவதாரம் புரிந்தார் என்று கருதப்படுகிறது. எனவே இந்தியாவின் சில பகுதிகளில் தீபாவளியை அன்னை லக்ஷ்மியின் பிறந்த நாளாகக் கொண்டாடுகின்றனர். மேழும் சில புராணங்களில் தீபாவளி அன்று அன்னை லட்சுமி, மகாவிஷ்ணுவை திருமணம் செய்து கொண்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நரகாசுர வதம் நடைபெற்ற நாள்:

தீபாவளி கொண்டாட்டத்தை பற்றிய இன்னொரு காரணம் அல்லது கதை இந்த நரகாசுர வதம் ஆகும். இதன் படி பகவான் கிருஷ்ணர் அசுரனான நரகாசுரனைக் கொன்று அவனிடமிருந்து பல பெண்களை மீட்டார். அதன்பின் கிருஷ்ணருக்கு மரியாதை காட்ட அவரால் மீட்கப்பட்ட பெண்கள் ரங்கோலி வடிவங்களை வரைந்தனர். அதுவே தீபாவளி கொண்டாட்டமாக மாறி விட்டது.

விக்ரமாதித்தனின் முடிசூட்டு விழா நடந்த நாள்:

இது நாம் ஏன் தீபாவளியைக் கொண்டாடுகின்றோம் என்பதைத் தெரிவிக்கும் மற்றொரு கதை. இந்தக் கதை இந்தியாவின் சில பகுதிகளில் கூறப்படும் புனைவுகளில் ஒன்றாகும். மிகப்பிரபலமான அரசரான விக்ரமாதித்தன், தீபாவளி நாளில் முடிசூடிக்கொண்டார். எனவே இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இந்த வரலாற்று நிகழ்வு தீபாவளியாக கொண்டாடப்படுகின்றது.

அன்னை காளியை சிவன் அடக்கிய நாள்:

வங்காளம் மற்றும் ஒரிசாவில் அன்னை காளியின் பெயரால் தீபாவளி கொண்டாடுகிறது. தேவர்கள், அசுரர்களால் தோற்கடிக்கப்பட்ட பொழுது, அன்னை காளி அனைத்து அசுரர்களையும் வதம் செய்தார். அன்னை காளிக்கு போரின் போது ஏற்பட்ட கோபம் கட்டுப்பாட்டை மீறிச் சென்றது. அதன் காரணமாக அன்னை காளி அனைவரையும் வதம் செய்யத் தொடங்கினார். அப்பொழுது இறைவன் அன்னையை அடக்கி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார். இந்த நாள் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது.

அன்னை லக்ஷ்மி விஷ்ணுவால் காப்பாற்றப்பட்ட நாள்:

தீபாவளியைப் பற்றிய பல்வேறு கதைகளில் இதுவும் ஒன்றாகும். அன்னை லக்ஷ்மி பாகுபலி என்கிற அரசரால் சிறை வைக்கப்படுகின்றாள். பகவான் விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரத்தில் அன்னை லக்ஷ்மி காப்பாற்றப்படுகின்றார். அன்னை சிறை மீட்கப்பட்ட தினமே தீபாவளியாகக் கொண்டாடப்படுகின்றது.

Read more about: diwali
English summary

Why Do We Celebrate Diwali

Why Do We Celebrate Diwali
Desktop Bottom Promotion