For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவன் தன் தந்தை பற்றி கூறிய கதை உங்களுக்கு தெரியுமா?

|

சிவனுக்கு தந்தையா என்றதும் அனைவருக்கும் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும், குழப்பமாகவும் இருந்திருக்கலாம். ஏனெனில், நாம் அறிந்த வரை சிவன் என்பவன் ஆதியும், அந்தமும் அற்றவன். அனைத்தும் திறந்த யோகி தான் சிவன்.

பார்வதி தேவியை அடைய சிவனை அழிக்க முயன்ற பசுமாசுரனின் கதை!

இதுவரை நாம் அறிந்த கதைகளில் சிவனின் குடும்பத்தை அறிந்திருப்போம், மனைவி, பார்வதி, பிள்ளைகள் விநாயகனும், முருகனும் என. ஆனால், சிவனுக்கே தந்தை யார் என முனி ஒருவர் வினவிய கதையும் உண்டு....

ஏன் சிவபெருமானுக்கு இந்த 5 பொருட்களைப் படைக்கக்கூடாது?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொதுவான கூற்று

பொதுவான கூற்று

நாம் அனைவரும் அறிந்த பொதுவான கூற்று, சிவனுக்கு பெற்றோர் கிடையாது, பிறப்பையும், இறப்பையும் கடந்த யோகி சிவன் என்பதாகும். உண்மையில் சிவனின் பெற்றோர் என யாரும் இல்லை. ஆனால், ஓர் முனிவரிடம் தன் தந்தை, பாட்டன் பற்றி சிவனே அளித்த பதில் என ஓர் கதையுண்டு.

ஆதியும் அந்தமும்

ஆதியும் அந்தமும்

சிவனை ஆதியும், அந்தமும் அற்றவன் என கூறுவதுண்டு. சிவனை தான் நாம் பிரபஞ்சமாக பார்க்கிறோம். காரணம் பிரபஞ்சமும் ஆதியும் அந்தமும் அற்ற வெற்று இடமாகும்.

முனிவர் ஒருமுறை

முனிவர் ஒருமுறை

முனி ஒருவர் சிவனை கண்டு, உன் தந்தை யாரென வினவினார். அதற்கு சிவன்,"பிரம்மா தான் என தந்தை" என பதிலளித்தார்.

அவனுடைய தந்தை?

அவனுடைய தந்தை?

அப்போது "அவனுடைய தந்தை (தாத்தா) யார்?" என மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு, விஷ்ணு தான் அவனுடைய தந்தை (தாத்தா)" என பதிலளித்தார் சிவன்.

அவனுக்கும் தந்தை யார்?

அவனுக்கும் தந்தை யார்?

தொடர்ந்து விஷ்ணுவின் தந்தை யார் என வினவினார் அந்த முனிவர். அதற்கு, "நான் தான்" என பதிலளித்து அதிர்ச்சியளித்தார் சிவன்.

விளக்கம்

விளக்கம்

கணிதத்தில் வட்டத்திற்கு அளிக்கப்படும் விளக்கம் தான் சிவனின் பிறப்பும், வட்டத்திற்கு இது தான் ஆரம்பம், முடிவு என்பது கிடையாது. தொடக்கமும், முடிவும் அற்றது. இதை தான் நாம் ஆதியும், அந்தமும் என கூறுகிறோம்.

பிரம்மா, விஷ்ணு கதை

பிரம்மா, விஷ்ணு கதை

ஓர் காலத்தில் பிரம்மாவும், விஷ்ணுவும் இருவரில் யார் வலிமை மிக்கவர் என்று விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஓர் ஒளி தோன்றியது. அதிலிருந்து வெளிப்பட்ட வேர் ஆகாயம் முதல் பூமி வர ஆதி அந்தம் இன்றி பரவியது.

ஒளியில் இருந்து வெளிப்பட்டார்

ஒளியில் இருந்து வெளிப்பட்டார்

விஷ்ணு மற்றும் பிரம்மா இருவராலும் அதன் ஆதியும், அந்தமும் கண்டறிய முடியவில்லை. அப்போது, அந்த ஒளியில் இருந்து சிறிது நேரம் கழித்து வெளிப்பட்டார் ஆதியும் அந்தமும் இல்லாது சிவன், என்ற கதை ஒன்று இருக்கிறது.

பிரபஞ்சத்தின் மாயை

பிரபஞ்சத்தின் மாயை

ஓர் ஒளியின் சிதறலில் இருந்து வெற்று இடமாக உருவனாது தான் நமது பிரபஞ்சம் என்ற கதைகளும் உண்டு. சிவன் ஒளி ரூபமானவன், பிறப்பையும், இறப்பையும் கடந்த யோகி சிவன், இவனுக்கு தந்தையும் இல்லை, தாயுமில்லை. சிவம் என்பது ஓர் ஒளி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Who Is The Father Of Lord Shiva

A Story behind the question, Who is the father of lord shiva? read here in tamil.
Desktop Bottom Promotion