உங்க கைரேகை உங்கள பத்தி என்ன சொல்லுதுன்னு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

அறிவியல் கல்வியியலில் ரேகையியல் என்ற ஓர் பாடப்பிரிவும் இருக்கிறது. இது உங்கள் கைரேகை அச்சு மற்றும் அதன் வடிவியல் குறித்து ஆய்வு செய்வதாகும். மேலும், இந்த கைரேகை வடிவியலை கொண்டு ஒருவரது குணாதிசயங்கள் மற்றும் ஆளுமை எப்படி இருக்கும் எனவும் இந்த ரேகையியல் படிப்பில் பயில்கின்றனர்.

உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!

அறிவியல் சார்ந்த இந்த ரேகையியல் மூலம் ஒருவரது ரேகை வடிவியல் மற்றும் தோற்றத்தை வைத்து அவர் எப்படிப்பட்டவராக இருப்பார் என்றும் கூறுகிறார்கள். இனி, கைரேகை வடிவில் எத்தனை வகைகள் இருக்கின்றன. அதை வைத்து எப்படி உங்களை பற்றி அறிவது என்பது என்பது குறித்துக் காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுழல்கள்

சுழல்கள்

பொதுவாக இந்த சுழல் வடிவ கைரேகை வடிவியல் அதிகமாக ஐரோப்பிய மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இது மாதிரியான கைரேகை கொண்டவர்கள் இயல்பாக அமைதி மற்றும் சமநிலை குணாதிசயங்கள் கொண்டுள்ளனர்.

சுழல்கள்

சுழல்கள்

மேலும், இவர்கள் மற்றவர்கள் மீது அனுதாபம், இரக்கம் அதிகம் கொண்டிருக்கிறார்கள். இவர்களிடம் மற்றவர்கள் எளிதாக நண்பர்களாகிவிடுகிறார்கள். விடாமுயற்சியும், பொறுப்பும் அதிகமாக உள்ள இவர்கள் மிக அரிதாக தான் புதிய முயற்சிகளில் இறங்குவார்கள்.

சுழல்கள்

சுழல்கள்

இவர்கள் மற்றவர்களிடம் அதிகமாக பேசி பழகுவார்கள். உள்ளே ஒன்று வைத்துக் கொண்டு வெளியே ஒன்று பேசாமல், திறந்த மனதுடன் பேசுவார்கள்.இவர்களது ஆரோக்கியம் மேலோங்கி இருக்கும். இவர்கள் கடின சூழல்களை கையாள்வதில் திறன் வாய்ந்து காணப்படுவார்கள்.

சுழல்கள்

சுழல்கள்

சுழல் போன்ற கைரேகை கொண்டவர்கள் மத்தியில் கற்பனை திறன் அதிகமாக இருக்கும். நிறைய பகல்கனவு காண்பார்கள். தங்களுக்கு பிடிக்காத வேலையில் ஈடுபட மாட்டார்கள்.

வளைவுகள்

வளைவுகள்

வளைவுகள் போன்ற கைரேகை கொண்டவர்களிடம் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். இது அவர்களது நடத்தை, நடவடிக்கை, இயக்கங்கள், நடை என அனைத்திலும் எதிரொலிக்கும். இவர்களிடம் பிடிவாத குணமும் இருக்கும்.

வளைவுகள்

வளைவுகள்

யாராலும் இவர்களது மனதை மாற்ற முடியாது. அவர்கள் எடுக்கும் முடிவில் தான் தீர்க்கமாக இருப்பார்கள். இவர்களால் மற்றவர்கள் கூறுவதை எடுத்துக் கொள்வது, கேட்பது மிகவும் கடினம். தங்கள் இலட்சியத்தை அடைய மற்றவர்களை பயன்படுத்திக் கொள்ள சற்றும் தயங்க மாட்டார்கள்.

வளைவுகள்

வளைவுகள்

வளைவுகள் போன்ற கைரேகை கொண்டவரிகளின் குணாதிசயம் நிதானமற்றதாக இருக்கும். இவர்கள் கலை மற்றும் இசையை விரும்பும் நபர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் உணர்வு, உணர்ச்சிகளை உள்ளபடியே மற்றவர்களிடம் வெளிப்படுத்துவார்கள்.

வளைவுகள்

வளைவுகள்

சிரமமான சூழ்நிலையாக இருப்பினும், இவர்களிடம் அமைதியை எதிர்பார்க்க முடியாது. ஆயினும், இவர்கள் நேர்மையானவர்கள், தங்கள் உறவையும், நட்பையும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

சுருள்

சுருள்

சுருள் போன்ற கைரேகை வடிவம் கொண்டவர்கள், சற்று முன் கோபக்காரராக இருப்பார்கள். இவர்கள் இயற்கையாகவே திறமைசாலியாகவும், வேகமாக அறிந்துக் கொள்வது, எதையும் ஆய்வு செய்து தெரிந்துக் கொள்வது என இருப்பார்கள்.

சுருள்

சுருள்

இவர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபடுவார்கள். ஆர்வ குறைவால் அதை பாதியில் விட்டுவிடுவார்கள். இவர்களது மனநிலை சமநிலையில் இருக்காது. எளிதாக எரிச்சல் அடைவார்கள். இவர்களை பற்றி முழுமையாக அறிந்துக் கொள்வதே சிரமம்.

சுருள்

சுருள்

இவர்கள் எளிதில் முழு திருப்தி அடையமாட்டார்கள். மேலும், மற்றவர்கள் மீது சந்தேகப்படும் குணம் இவர்களிடம் இருக்கும். இவர்கள் முழுமையாக செயல்படாத குணாதிசயம் கொண்டவர்கள். பேச்சில் அதிகமாகவும், செயலில் குறைவாகவும் இருப்பார்கள்.

சுருள்

சுருள்

பல் துறை ஆர்வம் இருப்பினும், இவர்கள் சிக்கலான ஆளுமை கொண்டிருப்பார்கள். சில சமயங்களில் அவர்களுக்கே அவர்களது திறன் என்னவென்று தெரியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Your Fingerprints Say About Who You Are

What your fingerprints say about who you are, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter