For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா வல்லரசாக இருப்பதற்கான 12 காரணங்கள்!!!

|

அமெரிக்கா....!!! 90-களில் இருந்து உலக இளைஞர்கள் படையெடுத்துக் கொண்டிருக்கும் ஓர் கண்டம். உல்லாசமான வாழ்க்கை, கைவிரல் நுனியில் அதிநவீன தொழில்நுட்பம் என பல ஆசைகள் உள்ளத்தில் பெருக்கெடுத்து ஓடுவதால், அமெரிக்கா எனும் காந்தம் இவர்களை மிக விரைவாக ஈர்க்க தொடங்கியது. அமெரிக்காவிற்கும் உலக இளைஞரின் திறன் தேவைப்பட்டது, முக்கியமாக இந்திய மூளைகள்.

உலகை கலக்கிய அமெரிக்க ஜனாதிபதிகளின் சில விசித்திரமான செயல்பாடுகள்!!!

அமெரிக்கர்கள், அமெரிக்கா என்றாலே சிறப்பு தான். அங்கு குப்பையே இருக்காது, கடுமையான சட்டம் என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால், அங்கும் குற்றங்களும், குப்பைகளும் கொட்டிக் கிடக்க தான் செய்கிறது. எனினும் கூட அமெரிக்கா என்றால் சில துறைகளில் அவர்கள் தான் "டாப்" என்ற நிலை நிலவுகிறது. அவற்றை பற்றி இனிக் காண்போம்....

உலகின் சில நாடுகளில் வழங்கப்படும் விசித்திரமான இராணுவ பயிற்சிகள் !!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹாலிவுட்

ஹாலிவுட்

உலகத்தின் அனைத்து திரைத் துறையினரும் கூறும் ஓர் வாக்கியம், "ஹாலிவுட் தரத்தில் படம் எடுக்க வேண்டும்.." ஆம், உலகிலேயே திரை தொழில்நுட்பத்தில் மேலோங்கி இருப்பவர்கள் ஹாலிவுட் துறையினர் தான். இங்கு அந்தவளவிற்கு பொருளாதாரம் இருக்கிறது. மற்றும் இவர்களிடம் இருக்கும் உலக வர்த்தகம் இதற்கான காரணமாக இருக்கின்றது.

பணம்

பணம்

உலக வர்த்தகமே அமெரிக்க டாலர் மதிப்பில் தான் இயங்கி வருகிறது. எண்ணெய், கூட்ஸ் ஏற்றுமதி, இறக்குமதி என அனைத்தும் அமெரிக்க டாலர்களில் தான் வர்த்தகம் நடந்து வருகிறது.

ஃபாஸ்ட் ஃபுட்கள்

ஃபாஸ்ட் ஃபுட்கள்

பிட்சா, பர்கர் என ஃபாஸ்ட் புட் உலகத்தை படைத்தவர்களே அமெரிக்கர்கள் தான். பிட்சா தயாரிப்பில் உலகிலேயே சிறந்து விளங்குகிறார்கள் அமெரிக்கர்கள்.

கூடைப்பந்து

கூடைப்பந்து

கூடைப்பந்து ஆட்டத்திலும் அமெரிக்கர்களை அடித்துக் கொள்ள ஆட்கள் இல்லையாம். இதற்கென தனியாக பொருளாதாரம் ஒதுக்கி இந்த விளையாட்டில் தொடர்ந்து சிறந்து விளையாடி வருகிறார்கள் அமெரிக்கர்கள்.

மோட்டார் வாகனங்கள்

மோட்டார் வாகனங்கள்

மோட்டார் வாகனங்கள் உற்பத்தி செய்வதைவிட, மோட்டார் வாகன தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது அமெரிக்கா. ஏறத்தாழ 30 இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு அமெரிக்க மோட்டார் வாகன துறையில் இருக்கிறதாம்.

ராணுவ வன்பொருள்

ராணுவ வன்பொருள்

ராணுவ வன்பொருள் (ஹார்ட்வேர்) தயாரிப்பும், அதிநவீன கண்டுபிடிப்புகள் என போருக்கான அனைத்து வாகன, ஆயுதங்களில் இவர்கள் முன்னோடியாக திகழ்கிறார்கள். பல உலக நாடுகள் அமெரிக்க இராணுவ ஆயுத தயாரிப்பு கம்பெனிகளிடம் இருந்து தான் ஆயுதங்களை வாங்குகின்றன.

விண்வெளி பயணம்

விண்வெளி பயணம்

கோவையில் இருந்து பொள்ளாச்சி சென்று வருவது போல தான், அமெரிக்கா விண்வெளிக்கு சென்று வருகிறது. கடந்த 1958-ம் ஆண்டில் இருந்தே நாசா தான் உலக விண்வெளி ஆராய்ச்சியில் முதன்மை இடத்தில் இருந்து வருகிறது.

கார்பன் டைஆக்சைடு உமிழ்வுகள் குறைப்பது

கார்பன் டைஆக்சைடு உமிழ்வுகள் குறைப்பது

பூமியில் இருந்து வெளிப்படும் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுகளை குறைப்பதிலும் அமெரிக்கர்கள் தான் சிறந்து விளங்குகின்றனர். இயற்கை எரிவாயு பயன்பாட்டை அமெரிக்கா அதிகரித்து வருவது இதற்கான முக்கிய காரணமாக இருந்து வருகிறது. மேலும் சுற்றுப்புற சூழல் குறித்த பிரச்சாரங்கள், விழிப்புணர்வுகளும் அங்கு அதிகரித்து வருகின்றன.

வானூர்தி

வானூர்தி

வானூர்தி துறை மற்றும் தயாரிப்பில் முன்னோடியாக திகழ்கிறது அமெரிக்கா. வானூர்தி தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன அமைப்புகள் என சிறந்து விளங்குகிறார்கள். ஏறத்தாழ 7,000 வானூர்திகள் அமெரிக்காவில் பறந்துக் கொண்டிருக்கின்றன.

கணினி

கணினி

90-களில் ஏற்பட்ட கணினி புரட்சிக்கு முக்கிய காரணம் அமெரிக்கா தான் மைக்ரோசாப்ட், ஆப்பிள், ஐ.பி.எம் என கணினி துறை சார்ந்த உச்சபட்ச நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்கள் தான்.மேலும் ஹார்ட்வேர், சாப்ட்வேர், இணையம் என அனைத்திலும் தனது ஆளுமையை வலிமையாக வைத்திருக்கிறது அமெரிக்கா.

மருத்துவம்

மருத்துவம்

மருத்துவ தொழில்நுட்பம், ஆராய்சிகள் மற்றும் மருந்து தயாரிப்புகளில் சிறந்து செயல்பட்டு வருகிறது அமெரிக்கா. உலகளவில் தாங்கள் தான் மருத்துவ துறையில் சிறந்தவர்கள் என்று கல்லூன்றி நிற்கின்றனர் அமெரிக்கர்கள். இன்றைய தினத்தில் புதியதாக வெளிவரும் சோதனை மருந்துகளில் 70% அமெரிக்கர்களுடையது தான்.

உதவுதல்

உதவுதல்

பல வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளுக்கு அமெரிக்கா பொருளாதார அளவில் உதவி வருகிறது. ஆப்ரிக்கா, தென்கிழக்காசிய நாடுகள் என உலகின் பல நாடுகளுக்கு பெருமளவில் உதவி வருகிறது அமெரிக்கா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Twelve Things Americans Do Best In The World

Fifteen Things Americans Do Best In The World, take a look.
Desktop Bottom Promotion