தீபாவளியில இலட்சுமி பூஜை செய்யும் வழிமுறை!

Posted By: Staff
Subscribe to Boldsky

இலட்சுமி பூஜை தீபாவளிக் கொண்டாட்டங்களின் ஒரு முக்கிய பகுதி. இலட்சுமி தேவி பிருகு முனிவரின் மகளாவார். பார்கடல் கடையப்பட்டபோது மறு அவதாரம் எடுத்து மஹாவிஷ்னுவை மணந்தார்.

அவள் வளர்ச்சி மற்றும் செல்வத்தின் கடவுள். அவளுடைய பக்தர்கள் வாழ்வில் வெற்றிபெற இவளை துதிக்கிறார்கள். இந்த இலட்சுமி பூஜையை செய்ய சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவளின் அருளைப் பெற செய்யவேண்டிய பூஜை விதிகள் மிகவும் எளிமையானவை. என்பதோடு ஒருவருக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

The Lakshmi Puja Vidhi For Diwali

இந்த பூஜையை செய்ய உகந்த முகூர்த்த நேரம்

இந்த வருடம் இலட்சுமி பூஜை அக்டோபர் 30 ஆம் தேதி வருகிறது. அன்று பூஜை செய்ய வேண்டிய நேரம் மாலை 5.39 முதல் இரவு 10.19 மணிக்குள்.

இலட்சுமி பூஜையை செய்து முடிக்கும் விதிமுறைகள்

1. இலட்சுமி பூஜையை ஒருவர் தொடங்க முதலில் வீட்டை சுத்தம் செய்யவேண்டும். அதாவது கங்கை நீர் கொண்டு வீடு முழுவதும் தெளித்து அனைத்து விதமான அசுத்தங்களையும் களைய வேண்டும்.

2. அடுத்து சிவப்பு நிற துணியால் மூடப்பட்ட ஒரு மேடை மேல் நடுவில் தானியங்களைப் பரப்பி அதன் மேல் ஒரு கலசத்தை வைக்கவேண்டும். இந்த கலசம் தங்கம், செம்பு அல்லது டெராகோடாவால் செய்ததாக இருக்கலாம். பின்னர் இந்த கலசத்தில் முக்கால் அளவிற்கு சுத்தமான நீரை நிரப்பவேண்டும்.

3. கலசத்தின் கழுத்தில் ஐந்து அல்லது ஏழு மாவிலை கட்டி ஒரு கிண்ணத்தில் அரிசியை வைத்து கலசத்தை மூடவும். இந்த அரிசியில் ஒரு தாமரை மலரை மஞ்சள் தூள் கொண்டு வரையவும். பின்னர் அதன் மேல் இலட்சுமி தேவியின் திருவுருவத்தை வைக்கவும். கூடவே சில நாணயங்களை அதனுடன் வைக்கவும்.

4. கலசத்தின் வலது புறத்தில், அதாவது தென்மேற்காக வினாயகர் சிலை ஒன்றையும் வைக்கவும். எந்த ஒரு பூஜையாக இருந்தாலும் முதலில் வணங்கப் படவேண்டியவர் வினாயகர் என இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த சிலைக்கு மஞ்சள், குங்குமம் மற்றும் அட்சதை கலந்த பொட்டினை வைக்கவும்.

5. உங்களுடைய தொழில் தொடர்பான புத்தகங்கள் மற்றும் ஆவனங்கள் இருந்தால் அதை மேடையின் மீது கலசத்தின் அருகில் வைக்கவும். பின்னர் ஆரத்தியை கலந்து தட்டில் வைத்துக் கொள்ளவும். மஞ்சள், குங்குமம், அட்சதை, சந்தனம், குங்குமப் பூ, தாமரை மலர் மற்றும் தீபத்தை தட்டில் வைத்துக் கொள்ளவும். தீபத்தை ஏற்றி பூஜையைத் தொடங்கவும்.

6. கலசத்திற்கு திலகமிட்டு கொஞ்சம் அட்சதையை கையில் எடுத்துக் கொண்டு இலட்சுமி தேவியின் மந்திரங்களை உச்சரித்து அவளை தியானியுங்கள். இதைச் செய்து இலட்சுமி தேவியினை எழுப்பி அவளின அருளைப் பெறுங்கள்.

7. பின்னர் இலட்சுமி தேவி சிலையை முதலில் தண்ணீராலும் பின்னர் பஞ்சாமிர்தத்தாலும் (பால், தயிர், கங்கை நீர், தேன் மற்றும் நெய் (அல்லது வெண்ணை) கலந்த கலவை) அபிஷேகம் செய்யுங்கள். பின்னர் மறுபடியும் தங்க ஆபரணமோ அல்லது முத்தோ மூழ்க வைத்த தண்ணீரால் அபிஷேகம் செய்யவேண்டும். பின்னர் ஒரு காய்ந்த துணியால் சிலையைத் துடைத்து பின்னர் கலசத்தின் மீது வைக்கவேண்டும்.

8. மீண்டும் திலகமிட்டு இலட்சுமி அன்னைக்குப் படைக்க வேண்டியவற்றை கலசத்தின் முன் வைக்கவேண்டும். இது சாமந்தி மலர்கள், குங்குமம், மஞ்சள், அட்சதை, சந்தானம், அரைத்த குங்குமப் பூ இனிப்புப் பலகாரங்கள், பழங்கள் மற்றும் தேங்காய் ஆகியவற்றைக் கொண்டிருக்கவேண்டும். இயன்றால் நீங்கள் சில தங்க அல்லது வெள்ளி ஆபரணங்கள், முத்து மற்றும் நாணயங்களையும் படைக்கலாம்.

9. இவையனைத்தும் முடிந்தபிறகு ஆரத்தி எடுக்க வேண்டும். ஆனால் இங்கும் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். மற்ற கடவுள்களுக்கு செய்வதை போல் பாடல்களை பாடுகையில் மந்திரங்களை உச்சரிக்கையில் கைகளை தட்டக்கூடாது. இலட்சுமி தேவி உரத்த சத்தங்களை விரும்பமாட்டாள். எனவே ஒரு சிறு மணியை ஒலித்தால் ஆரத்தி எடுப்பதற்கு போதுமானதாக இருக்கும்.

English summary

The Lakshmi Puja Vidhi For Diwali

The Lakshmi Puja Vidhi For Diwali
Subscribe Newsletter