Latest Updates
-
சௌ சௌ வாங்குனா இந்த செட்டிநாடு பொரிச்ச குழம்பு செய்யுங்க - சாதம், டிபன் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
ஜூன் 29-ல் நடக்கப்போகும் புதனின் வக்ர பெயர்ச்சியால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இந்த 4 குணம் உள்ள பெண் அவரது கணவரின் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றுவாராம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கொள்ளு குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 16 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணக்கஷ்டம் தேடிவருமாம் - ஜாக்கிரதை -
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் நடக்கப்போகும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்.. -
மாங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும்
சுவிட்சர்லாந்து பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான உண்மைகள்!
சுவிட்சர்லாந்து என்றாலே பலருக்கும் கருப்புப்பணம் பதுக்கி வைக்கும் வங்கிகளின் கூடாரம் என்ற எண்ணம் தான் வரும். ஆனால், அதற்கும் மேல் நீங்கள் சுவிட்சர்லாந்து பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள் சில இரு
சுவிட்சர்லாந்து என்றால் ஒரு நாடு என்பதை தாண்டி அதன் செல்வம் தான் நம்மில் பலருக்கும் நினைவு வரும். அதிலும், உலக செல்வதை கருப்பு பணமாக பதுக்கி வைத்திருக்கும் ஒரு துரோகி நாடு என குமுறும் மக்களும் அதிகமாக இருக்கிறார்கள். முக்கியமாக நமது நாட்டில்.

வளர்ந்து வரும் நாட்டின் தலையெழுத்து இந்த கருப்பு பணத்தினால் தான் மாறுகிறது என்பது நாம் அறிந்தது தான். வங்கி, கருப்பு பணம் என்பதை தான் சுவிட்சர்லாந்து பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டிய சில சுவாரஸ்யமான உண்மைகளும் இருக்கின்றன....

உண்மை #1
இன்றளவும் சுவிட்சர்லாந்தில் பல பகுதிகளில் மக்கள் தொடர்ந்து நாய் மற்றும் பூனை இறைச்சி உண்டு வருகின்றனர். சுவிட்சர்லாந்தில் இது லீகல் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை #2
சுவிட்சர்லாந்து தன் நாட்டு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை 1971-ல் தான் வழங்கியது.

உண்மை #3
ஒரு சராசரி வயதுவந்த சுவிட்சர்லாந்து குடிமகனின் சொத்து மதிப்பு $5,13,000 ஆகும்.

உண்மை #4
உலகிலேயே அதிக வயது வாழ்நாள் கொண்டுள்ள மக்கள் பட்டியலில் சுவிட்சர்லாந்து இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்நாட்டு மக்களின் சராசரி வயது 83.4 என அறியப்படுகிறது.

உண்மை #5
கினி (guinea pigs) தனிமையில் வாடும் குணாதிசயம் கொண்டுள்ளதால், ஒரே ஒரு கினி மட்டும் வளர்ப்பது சுவிட்சர்லாந்தில் இல்லீகல் ஆகும்.

உண்மை #6
ஈராக்கியர்களின் தலைகளை விட, சுவிட்சர்லாந்தில் துப்பாக்கிகளின் எண்ணிக்கை அதிகம்.

உண்மை #7
உலகின் நீளமான சுரங்கம் சுவிட்சர்லாந்து - இத்தாலி இடையே ஆல்ப்ஸ் மலை அடியில் இருக்கிறது. இது 57 கி.மீ நீளம் கொண்டது. இதை கட்டிமுடிக்க 17 ஆண்டுகள் ஆயின.

உண்மை #8
சுவிட்சர்லாந்து தனது இராணுவ படையில் இருந்து 31 நபர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது. 1815-க்கு பிறகு சுவிட்சர்லாந்து தன் இராணுவத்தை அப்போது தான் பயன்படுத்தியது.

உண்மை #9
சுவிட்சர்லாந்தில் பூனைகளின் நகங்களை வெட்டுவது சட்டவிரோத செயல் ஆகும். இங்கு மட்டுமல்ல, அமேரிக்காவின் 22 மாகாணங்கள், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளிலும் இது தடை செய்யப்பட்டுள்ளது.

உண்மை #10
கடந்த 2015-ல் ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு சுவிட்சர்லாந்து, ஸ்வீடன் (அ) நைஜீரியா நாடுகளின் மதிப்பை விட அதிகமாக இருந்தது.



Click it and Unblock the Notifications