சில்க், ஜெமினி, கலாபவன்: சில பிரபலங்களின் பெயர் வினோதமாக அமைந்தது எப்படின்னு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நமது தமிழ் பிரபலங்கள் பலரது பெயர் உண்மையான பெயரில்லை. சிலரது பெயர் திரைக்கு வரும் போது மாற்றி வைத்துக் கொள்ளப்படும். இயக்குனர்களே இதை பலருக்கு செய்துள்ளனர். சிவாஜி எனும் இயற்பெயர் கொண்ட சூப்பர்ஸ்டார்-க்கு ரஜினி என பெயர் வைத்தது கே.பி அவர்கள்.

பிரபலங்களின் திகைப்பூட்டும் மரணங்கள்!!!

ஆனால், சில காரணங்களால் தானாக சிலருக்கு அவர்களது பெயர் மாறியதும் உண்டு. சில்க் ஸ்மிதா, கலாபவன் மணி, ஜெமினி, கணேஷன், சிவாஜி கணேஷன், தேங்காய் ஸ்ரீனிவாசன் என இந்த பட்டியலில் பலபேர் இருக்கிறார்கள். இவர்கள் பெயர் எப்படி இவ்வாறு மாறியது என இனிக் காணலாம்...

திருமணமான ஆண்களின் மீது காதல் கொண்ட நடிகைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கலாபவன் மணி

கலாபவன் மணி

கொச்சியில் கலாபவன் எனும் ஓர் அமைப்பில் கலை நிகழ்சிகள் நடத்தி வரப்பட்டது. அதில் மிமிக்ரி ட்ரூப்பில் பங்கெடுத்து நிகழ்சிகளில் தோன்றி வந்தார் மணி ராமன் எனும் கலாபவன் மணி. இந்த அமைப்பில் இருந்து பிரபலமடைந்து வந்ததால் கலாபவன் எனும் பெயர் மணியின் முன் அடைமொழியாக சேர்ந்து பின்னாட்களில் கலபாவன் மணியாக திரையுலகில் பிரபலமடைந்தார்.

ஜெமினி கணேஷன்

ஜெமினி கணேஷன்

அந்த காலத்திலேயே காதல் மன்னன் என்று பெயர் பெற்றவர். அதற்கு ஏற்றார் போல பல திருமணங்களும் செய்தவர் ராமசாமி கணேஷன் எனும் ஜெமினி கணேஷன். இவர் மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார்.

ஜெமினி கணேஷன்

ஜெமினி கணேஷன்

ஜெமினி ஸ்டூடியோவில் ப்ரொடக்ஷன் எக்சிகியூட்டிவாக இருந்து நடிகராக மாறிய போது ராமசாமி கணேஷன் ஜெமினி கணேஷனாக மாறினார்.

நிழல்கள் ரவி

நிழல்கள் ரவி

வில்லன், ஹீரோ, குணச்சித்திர நடிகர், பின்னணி குரல் கொடுப்பது என பல முகங்களை தமிழ் ரசிகர்களுக்கு காட்டியவர் ரவி. பாரதிராஜாவின் நிழல்கள் எனும் படத்தின் மூலம் இவர் பெரிதும் பேசப்பட்டதால் ரவி எனும் பெயருக்கு முன்னர் நிழல்கள் அடைமொழியாக ஒட்டிகொண்டது.

ஜெயம் ரவி

ஜெயம் ரவி

ஜெயம் ரவிக்கும் நிழல்கள் ரவி போல தான். முதல் படத்திலேயே தனி முத்திரையை பதித்தால் ஜெயம் ரவி, ஜெயம் ராஜா என இந்த சகோதர்களின் பெயருக்கு முன்னாள் ஜெயம் நிரந்தரமாக ஒட்டிக் கொண்டது.

ஆடுகளம்

ஆடுகளம்

முருகதாஸ், நரேன் இவர்கள் இருவரும் ஆடுகளம் படத்திற்கு முன்பே பல படங்களில் நடித்திருந்தாலும் கூட, ஆடுகளம் படத்தின் மூலம் இவர்கள் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றது. ஆதலால், இந்த படத்திற்கு பிறகு இவர்கள் பெயருக்கு முன்னால் ஆடுகளம் எனும் பெயர் சேர்ந்துக் கொண்டது.

தேங்காய் ஸ்ரீனிவாசன்

தேங்காய் ஸ்ரீனிவாசன்

உண்மையில் இவரது பெயர் கா.தங்கவேலு. கல் மனம் எனும் படத்தில் இவர் தேங்காய் வியாபாரியாக நடித்து பெரும் பெயர் பெற்றார். ரசிகர்கள் மத்தியில் இந்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. இதன் பிறகு இவரது பெயர் தேங்காய் ஸ்ரீனிவாசன் எனவே மாறிவிட்டது.

சிவாஜி கணேஷன்

சிவாஜி கணேஷன்

நாடகம் ஒன்றில் மராத்திய சிவாஜி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிதத்தன் காரணத்தால் சிவாஜி கணேஷன் எனும் பெயர் வந்தது.

டேனியல் பாலாஜி

டேனியல் பாலாஜி

சித்தி எனும் மெகா தொடரில் இவர் நடித்த டேனியல் கதாபாத்திரத்தின் பெயரே இவரது பெயருக்கு முன்னர் ஒட்டிக் கொண்டது.

கேப்டன்

கேப்டன்

1991-ல் வெளிவந்த கேப்டன் பிரபாகரன் படத்தின் பிறகு தான் விஜயகாதின் பெயருக்கு முன்னர் கேப்டன் எனும் அடைமொழி சேர்ந்தது.

சில்க் ஸ்மிதா

சில்க் ஸ்மிதா

வண்டி சக்கரம் எனும் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் சில்க் ஸ்மிதா. இதன் மூலம் இவருக்கு திரையுலகில் நல்ல அறிமுகம் கிடைத்தது. இதன் காரணத்தால் இவர் பெயர் சில்க் ஸ்மிதாவாகவே நிலைக் கொண்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Silk, Gemini and Kalabhavan: Why Some Actors Have Such Interesting Names?

Silk, Gemini and Kalabhavan: Why Some Actors Have Such Interesting Names? read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter