90-களுக்கு முன் தீபாவளி கொண்டாட்டம் : நெகிழ்வூட்டும் நினைவுகளின் பயணம்!

Posted By:
Subscribe to Boldsky

தீபாவளி கொண்டாட்டம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு இன்றைய தலைமுறை ஒரு வார்த்தையில் பதில் கூறிவிட்டு சென்று விடுவார்கள். சென்ற தலைமுறையிடம் கேளுங்கள், ஒரு கட்டுரையே எழுதுவார்கள். நான்கைந்து நாட்களும் கொண்டாட்டம். தீபாவளி வரும் பத்து நாளுக்கு முன்னரே வீதிகளில் ஆங்காங்கே பழைய பட்டாசுக்கள் வெடித்து சிதறும்.

Nostalgic Memories About Diwali Celebrations

தாத்தா, பாட்டி தீபாவளி பணம், அம்மா சுடும் சுவையான பலகாரம். மாமா, பெரியப்பா, சித்தப்பா வீடுகளுக்கு வந்து செல்வது. தையல் காரரிடம் துணி தைக்க கொடுத்து காத்திருந்து வாங்கி உடுத்துவது. நிச்சயம் இந்த விஷயங்கள் உங்களை குழந்தை பருவத்திற்கு கூட்டி செல்லும்.

நேற்று வாட்ஸ்-அப்பில் எனக்கு வந்த ஒரு செய்தியின் தொகுப்பில் இருந்து...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நினைவு #1

நினைவு #1

நண்பர்களில் யாருக்கு அதிக தீபாவளி பணம் கிடைத்தது என்ற தேடல்.

நினைவு #2

நினைவு #2

தைக்க கொடுத்த தீபாவளி புதுத்துணியை தையல்காரர் தைத்து கொடுத்து விடுவாரா ஏக்கம்.

நினைவு #3

நினைவு #3

ஒரு வாரத்திற்கு முன்னதாக அம்மா தீபாவளி பலகாரம் செய்யும் போது, அருகே அமர்ந்து சுடசுட ருசிப் பார்ப்பது.

நினைவு #4

நினைவு #4

எண்ணெய் தேய்த்து, ஒருசில வார இதழ்கள், தின பத்திரிக்கைகள் இலவசமாக இணைத்து தரும் கங்கா நீர் கலந்து குளிப்பது.

நினைவு #5

நினைவு #5

தெருவில் முதல் ஆளாக எழுந்து யார் பட்டாசு வெடிப்பது என்ற போட்டிப் போட்டு சீக்கிரமாக முதல் சரம் வெடிப்பது.

நினைவு #6

நினைவு #6

ஆசை, ஆசையாக வாங்கி வைத்த புத்தாடையில், அம்மா எப்போது மஞ்சள் வைத்து தருவார் என காத்திருப்பது. (சிலருக்கு அந்த மஞ்சள் வைப்பது பிடிக்காது. அதற்கு அடம் பிடிப்பது தனிக் கதை)

நினைவு #7

நினைவு #7

வேண்டாம், வேண்டாம் என அடம்பிடித்து, கண்கள் எரிய, கண்ணீர் கசிய சீயக்காய் தேய்த்து அம்மா கையால் தலைக்கு குளிப்பது.

நினைவு #8

நினைவு #8

அப்பா, அம்மா காலில் விழுந்து தீபாவளி அன்று புத்தம் புதிய தாளை வாங்கி கசங்காமல் பத்திரப்படுத்துவது.

நினைவு #9

நினைவு #9

ஊர் முழுக்க பட்டாசு வாசனை அடித்தாலும், சரியாக 8 மணிக்கு அம்மா ஸ்பெஷலாக சமைக்கும் உணவின் வாசனை மூக்கை துளைக்க, பட்டாசு வெடிப்பதை விட்டுவிட்டு ஓடி சென்று சாப்பிடுவது.

நினைவு #10

நினைவு #10

சரம் தீர்ந்து விட்டால் பிஜிலி வெடியை சரம் போல கோர்த்து வெடிப்பது. வருடம் முழுக்க ஒதுக்கப்பட்டாலும், தீபாவளி அன்று தேடப் பிடித்து பழைய பீர் பாட்டில் எடுத்து ராக்கெட் விடுவது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Nostalgic Memories About Diwali Celebrations

Nostalgic Memories About Diwali Celebrations
Please Wait while comments are loading...
Subscribe Newsletter