உலகிலுள்ள சில விசித்திரமான உணவகங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

வகையான விசித்திரமான உணவுகள் விற்கும் உணவகங்கள் பார்த்திருப்பீர்கள், சென்றுருப்பீர்கள், ஏன் உணவும் ருசித்திருப்பீர்கள். ஆனால், உணவகமே வகைவகையாக விசித்திரமாக இருந்து பார்த்திருக்கிறீர்களா? ஆம், உலகின் ஆங்காங்கே நிறைய விசித்திரமான உணவகங்கள் இருக்கின்றன.

இந்திய மக்கள் விரும்பி சாப்பிடும் சில விசித்திர உணவுகள்!!!

நிர்வாணமாக உணவருந்தும் உணவகம், காண்டம்ஸ் பரிசளிக்கும் உணவகம், இதய நோய்களை உண்டாக்கும் உணவகம், சிறைப் போன்ற அமைப்பில் இருக்கும் உணவகம் என சில கண்களை கவரும் வகையிலும், சிலவன முகம், வாய், மூக்கு என அனைத்தையும் சுழிக்கும் வகையிலும் இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
க்லோதிங் ஆப்சனல் டின்னர், அமெரிக்கா

க்லோதிங் ஆப்சனல் டின்னர், அமெரிக்கா

அமெரிக்காவில் இருக்கும் இந்த உணவகத்தில் நீங்கள் அட்டகாசமான உடை அணிந்து செல்ல வேண்டும் என்பதில்லை. ஏன் எனில், இந்த உணவகத்திற்கு நிர்வாணமாக தான் செல்ல வேண்டும்.

டான்ஸ் லே நாய்ர், ஐரோப்பியா

டான்ஸ் லே நாய்ர், ஐரோப்பியா

இந்த உணவகத்தில் பணிபுரியும் நபர்கள் கண்பார்வை அற்றவர்கள். இந்த உணவகத்தில் வெளிச்சம் மிக குறைவாக தான் இருக்கும். மேலும், உணவருந்த செல்லும் நபர்களின் கண்களையும் கட்டிவிடுவார்கள்.

டிக்ஸ் லாஸ்ட் ரிசார்ட், அமெரிக்கா

டிக்ஸ் லாஸ்ட் ரிசார்ட், அமெரிக்கா

உணவருந்த வரும் வாடிக்கையாளர்களையே கேலி கிண்டல் செய்து அமர்க்களப்படுத்தும் வினோதமான உணவகம் இது.

நிஞ்சா, நியூயார்க்

நிஞ்சா, நியூயார்க்

நிஞ்சாக்களை போல ஆங்காங்கே மறைந்திருந்து வந்து உணவருந்த வரும் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து செல்வார்கள். உபத்திரவமும் செய்வார்கள்.

டெவில் ஐலாண்ட் பிரிசன், சீனா

டெவில் ஐலாண்ட் பிரிசன், சீனா

சிறை போல அமைக்கப்பட்டிருக்கிறது இந்த உணவகத்தின் உள் கட்டமைப்பு. இங்கு உணவருந்த சென்றாலே நீங்கள் சிறை சென்று வந்தது போல தான் இருக்கும்.

மாடர்ன் டாய்லெட், தைவான்

மாடர்ன் டாய்லெட், தைவான்

இந்த உணவகத்தில் நீங்கள் உண்பதற்கான அனைத்து உணவுகளும் டாய்லெட் போன்ற வடிவிலான பாத்திரங்களில் தான் வழங்கப்படும். ஏன், நீங்கள் அமரும் இருக்கைகள் கூட டாய்லெட் போன்று தான் இருக்கும்.

இத்தா கடல் உணவகம், மாலத்தீவு

இத்தா கடல் உணவகம், மாலத்தீவு

இந்த உணவகம் கடலுக்கு அடியில் இருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 16 அடி கீழே அமைந்திருக்கிறது இந்த உணவகம். உலகிலேயே இவ்வகையிலான உணவகங்களில் இது தான் முதலில் கட்டமைக்கப்பட்டது.

ஹார்ட் அட்டாக் கிரில், அமெரிக்கா

ஹார்ட் அட்டாக் கிரில், அமெரிக்கா

இந்த உணவகத்தில் இருக்கும் அனைத்து உணவுகளும் அதிகமான கலோரிகளில் தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலான உணவுகள் பர்கர் வகையை சார்ந்தவை. இவற்றை உண்டால் கண்டிப்பாக உங்களுக்கு விரைவாக இதய நோய்கள் வந்துவிடும். மேலும் இந்த உணவகமே மருத்துவமனை போல தான் கட்டமைக்கப்பட்டுள்ளது.

தன்னின உண்ணி உணவகம் (Cannibalistic Restaurant), ஜப்பான்

தன்னின உண்ணி உணவகம் (Cannibalistic Restaurant), ஜப்பான்

ஜப்பானில் இருக்கும் இந்த உணவகத்தில் நிர்வாணமான பெண் போன்ற ஒரு பொம்மை உருவத்தின் மேல் தான் உணவு பரிமாறப்படும். மேலும், அந்த உடலை நீங்கள் கிழித்து பார்த்தல் உள்ளே உறுப்புகள் போன்ற அமைப்புகளும் இருக்கும். உள்ளே இருப்பவை உண்ணத்தக்க உணவுகள் தான் எனவும் கூறுகிறார்கள்.

காப்பேஜ் அண்ட் காண்டம்ஸ் (Cabbages and Condoms), தாய்லாந்து

காப்பேஜ் அண்ட் காண்டம்ஸ் (Cabbages and Condoms), தாய்லாந்து

இந்த உணவகம் முழுதும் காண்டம்ஸ் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், நீங்கள் உணவருந்தி செல்லும் போது பரிசாக காண்டம்ஸ் வழங்குகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Image Courtesy

English summary

Most Unusual Restaurants In The World

Most Unusual Restaurants In The World, take a look.