Latest Updates
-
வெள்ளை பணியாரமும்.. மிளகாய் சட்னியும் - இந்த காம்போவை ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க... அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...!
பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அசுரத்தனமாக மாறிய விசித்திர மனிதர்கள்!
பிளாஸ்டிக் சர்ஜரி என்ற வார்த்தை உலகளவில் அனைவரும் அறியக் காரணமாக இருந்தது மைக்கல் ஜாக்சன். பலமுறை தனது முகத் தோற்றத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றியமைத்து கொண்டார் மைக்கல். இதனால், நாள்பட அவருக்கு சரும கோளாறுகளும், அழற்சிகளும் உண்டாக ஆரம்பித்தன.
அழகை அதிகரிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொண்ட நடிகர் நடிகைகள்!!!
இப்போது சிலிக்கான் பந்துகள் கொண்டு மேல் அழகு, பின்னழகு போன்றவற்றை பெரிதுப்படுத்துக் கொள்ளவும், அழகுப்படுத்திக் கொள்ளவும் நிறைய மாடல்கள் முனைகின்றனர். மாடல்கள் மட்டுமல்ல வெகுஜன மக்களும் கூட. இதில் சிலர் ஏடாகூடமாகவும், தவறுதல்கள் நடந்தும் அசுரத்தனமாகவும் மாறியுள்ளனர்.

மார்பகங்கள்
பிஷைன் எனும் இந்த நபர் தான் ஐரோப்பாவின் பெரிய போலியான மார்பகங்கள் கொண்டுள்ள நபர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் இவர் தனது மார்பகங்களை மிக பெரிதாக மாற்றிக் கொண்டார்.
Image Courtesy

மார்பகங்கள்
இதனால் எனக்கு முதுகுவலி ஏதும் ஏற்படவில்லை எனவும், ஆடைகள் வாங்குவதில் தான் சற்று சிரமமாக இருக்கிறது என பிஷைன் கூறியுள்ளார்.

புட்டம்
$15000 செலவு செய்து தனது பின்னழகை பெரிதுப் படுத்திக் கொண்டுள்ளார் இந்த பெண். சிலிக்கான் பந்துகளை வைத்து உடல் பாகங்களை பெரிதுப் படுத்திக் கொள்வதும், அழகாக மாற்றிக் கொள்வதும் மேற்கத்திய நாடுகளில் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதனால் நிறைய பேர் உடல்நல அபாயங்களையும் சந்தித்து வருகின்றனர்.
Image Courtesy

ஆறு இன்ச்
தனது உயரத்தில் ஆறு இன்ச் அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில். மிகவும் வலி மிகுந்த அறுவை சிகிச்சை செய்துக் கொண்டுள்ளார் இவர்.
Image Courtesy

இதழ்கள்
ஜெசிக்கா ரேப்பிட் போல தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக கிறிஸ்டினா ரேய் எனும் 22 வயது பெண் தனது இதழ்களை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பெரிதுப்படுத்திக் கொண்டார்.
Image Courtesy

இதழ்கள்
மேலும், இவர் ஜெசிக்கா ரேப்பிட் என்ற கார்டூன் கதாபாத்திரம் போல தோற்றம் கொள்ள கூந்தல் அலங்காரத்தையும் மாற்றிக் கொண்டார். இதற்காக இவர் செய்த செலவு நான்காயிரம் ஈரோக்கள்.
Image Courtesy

போலி டாக்டர்
ஆணாக இருந்து திருநங்கையாக மாறிய நபர் ஒருவர் பின்னழகை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்ள வந்திருக்கிறார். அவருக்கு கிறுக்குத்தனமாக ஏதோ கலவையை இன்ஜெக்ஷன் போட்டுள்ளார் மோரிஸ் எனும் போலி மருத்துவர்.
Image Courtesy

போலி டாக்டர்
இதனால் அந்த திருநங்கை அபாயமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு தான் மோரிஸ் போலி என கண்டறியப்பட்டு மியாமி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பார்பி கேர்ள்
வலேரியா லுக்யாநோவா எனும் உக்ரைன் பெண் மிகவும் பிரபலமானவர். இவர் பார்பி கேர்ள் போல தோற்றமளிக்க வேண்டும் என்பதால். தனது விலா எலும்பையே அகற்றிக் கொண்டார். இதனால் தனது இடை பார்பி கேர்ள் போல மெலிந்து தோற்றமளிக்கும் என இவர் நம்பினார், அதே போல மாறியும்விட்டார்.
Image Courtesy

கான்கிரீட் இன்ஜெக்ஷன்
மியாமியின் மோரிஸ், போலி மருத்துவரிடம் சிக்கி இப்படி மாறிவிட்டார் இந்த பெண்மணி. மிஸ்.நரைன்சிங் என்பவர். இவரும் ஆணாக பிறந்து பெண்ணாக வாழ்ந்து வருபவர் ஆவார். விஷத்தன்மையான கான்கிரீட் இன்ஜெக்ஷன் போட்டு கண்ணம், இதழ் கொடூர மாற்றம் உண்டாக்கிவிட்டார் அந்த போலி மருத்துவர் மோரிஸ்.
Image Courtesy

ஆணுக்கு மார்பகங்கள்
ஒரு லட்ச அமெரிக்க டாலர்கள் பெட்டு கட்டி அதில் ஜெயிக்க, பிரியான் செம்பிக் என்பவர் கடந்த 1996-ம் ஆண்டு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் 38C அளவு மார்பகங்கள் உண்டாக்கிக் கொண்டார். இதில் ஆச்சரியம் என்னவெனில். இப்போது வரை இந்த மார்பகங்களோடு தான் உலா வருகிறார் பிரியான் செம்பிக்.
Image Courtesy



Click it and Unblock the Notifications











