Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
பலரும் அறியாத பொங்கல் பண்டிகையின் வரலாறு!
பண்டையக் காலத்தில் முன்னோர்கள் செய்த ஒரே தொழில் உழவு தான். அதற்கு உதவியாக இருந்த சூரியன், மாடு, மற்றும் உழவர்களுக்கு நன்றி கூறும் பண்டிகை தான் பொங்கல்.
மேற்கத்திய நாடுகளில் "தேங்க்ஸ் கிவ்விங் டே" என்பது தான் பொங்கல் என்றால் இன்றைய ஐ.டி வாழ் தலைமுறைக்கு நன்கு புரியும் என்று கூறலாம். பண்டையக் காலத்தில் முன்னோர்கள் செய்த ஒரே தொழில் உழவு தான். அதற்கு உதவியாக இருந்த சூரியன், மாடு, மற்றும் உழவர்களுக்கு நன்றி கூறும் பண்டிகை தான் பொங்கல்.
விவசாயம் நடக்க முதல் காரணமாக இருக்கும் சூரிய ஒளி, அதற்காக தான் சூரியனுக்கு படையல் வைத்து சூரிய பொங்கல் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. பிறகு உழவிற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் மாட்டிற்கு நன்றி கூறும் வகையில் மாட்டுப்பொங்கல், பிறகு விவசாயத்தை செம்மையாக செய்யும் உழவர்களுக்கு உழவர் பொங்கல் என வரிசையாக கொண்டாடப்படுவது தான் பொங்கல் பண்டிகை...

பொங்கல்
பொங்கல் என்பது தமிழக மற்றும் இந்திய தென் மாநிலங்களில் கொண்டாடப்படும் பழமை வாய்ந்த பண்டிகையாகும். முக்கியமாக தமிழர்கள் மத்தியில் பொங்கல் மிகவும் பிரபலமான கலாச்சார விழாவாக திகழ்கிறது. பொங்கலின் வரலாறு என்று காண வேண்டும் எனில் நாம் கி.மு 200 ஆண்டுக்கு செல்ல வேண்டும்.

கி.மு. 200
சங்க காலமான கி.மு 200 - கி.மு. 300 களில் பொங்கல் என்பது சமஸ்கிரத புராணம் மற்றும் திராவிட அறுவடை பண்டிகையாக குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்று முன்னோர்கள் பொங்கல் சங்க காலத்தில் தை நீராடல் என்ற பெயரில் கொண்டாடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பாவை நோன்பு
சங்கக் காலத்தில் கொண்டாடப்பட்ட தை நீராடல் தான் இன்று பொங்கலாக கொண்டாடப்படுகிறது என்றும். அந்த காலத்தில் பெண்கள் தை நீராடலின் போது பாவை நோன்பு விரதத்தை கடைப்பிடித்து வந்தனர் என்றும் கூறப்படுகிறது.

பல்லவர் காலத்தில்
பல்லவர்களின் காலமான கி.பி 400 - கி.பி 800 க்கு இடையில், பொங்கல் மிகவும் முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது. மழையும், வளமும் செழிக்க வேண்டி வணங்கி இளம் பெண்கள் விரதம் இருந்து வந்தனர்.

பால் தவிர்த்து
இந்த காலக் கட்டத்தில் பெண்கள் பால் மற்றும் பால் பொருட்களை தவிர்த்து, தலையில் எண்ணெயயிட்டுக் கொள்ளாமல், கடுமையான சொற்களை பயன்படுத்தாமல் இருந்து விரதம் இருந்து வருவார்கள். அதிகாலையில் எழுந்து குளித்து கடவுள் வழிபாடு நடத்தி வந்தனர்.

கட்யாயணி
ஈர மண்ணில் செய்யப்பட்ட கட்யாயணி என்ற பெண் கடவுளை வணங்கி, தை மாதத்தின் முதல் நாளன்று விரதத்தை முடித்துக் கொள்வார்கள். மரபும், சடங்குகளும் நிறைந்த இந்த பொங்கல் கொண்டாட்டம்.

திருப்பாவை குறிப்பு
ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை ஆகியவற்றில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் திருவள்ளூர் வீரராகவா கோவிலில் உள்ள கல்வெட்டிலும் கூட இது குறிப்பிடப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
