Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
பிறப்பில் ஏழையாக இருந்து வாழ்வில் முன்னேறிய சில மனிதர்கள்!
இன்று உலகில் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் பலர் பிறக்கும் போதே பணக்காரர்களாக பிறக்கவில்லை. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் பல கஷ்டங்களை அனுபவித்து தான் வெற்றியை ருசி கண்டுள்ளார்கள். பல தோல்விக்குப் பின் வெற்றி காணும் போது அடையும் இன்பமே தனி தான்.
ஆனால் அதற்கு பொறுமை என்பது மிகவும் அவசியம். இப்போது இக்கட்டுரையில் பிறப்பில் ஏழையாக இருந்து வாழ்வில் முன்னேறி தற்போது பிரபலமாக உள்ள சில மனிதர்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
இங்கு கொடுக்கப்பட்டவர்களுள் சிலர் மிகவும் பிரபலமானவர்கள். ஏன் நீங்கள் அவர்களுக்கு ரசிகர் அல்லது ரசிகைகளாக கூட இருக்கலாம். சரி, இப்போது அவர்களைப் பற்றி காண்போமா....!

ரோமன் அப்ரமோவிச்
எண்ணெய் மற்றும் அலுமினிய செல்வந்தரான இவர் 4 வயது வரை அனாதையாக குடிசையில் வாழ்ந்தவர். இவர் தான் வசித்த பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை விற்று வாழ்ந்து வந்தார். தற்போது இவர் மிகப்பெரிய தொழிலதிபர் பட்டியலில் உள்ளார்.

ஸ்டீவ் ஜாப்ஸ்
கம்ப்யூட்டர் வல்லுநர் என அறியப்படுபவர் தான் ஸ்டீப் ஜாப்ஸ். இவரது பெற்றோர்கள் படித்துக் கொண்டிருக்கும் போது இவரைப் பெற்று, ஒரு ஏழை தம்பதியினருக்கு தத்து கொடுத்துவிட்டனர். பின் ஸ்டீவ் ஜாப்ஸ் தன் படிப்பை நிறுத்திவிட்டு, தன்னிடம் இருக்கும் திறமையை வெளிகொணர்ந்து கம்ப்யூட்டர் ஒன்றை கண்டுபிடித்து, ஆப்பிள் நிறுவனம் ஒன்றைத் துவங்கி, தற்போது உலகில் பிரபலமான ஒருவராக இருக்கிறார்.

ஜஸ்டின் பெய்பர்
உலகம் முழுவதும் பல ரசிகைகளைக் கொண்ட ஒரு பாப் பாடகர் தான் ஜஸ்டின் பெய்பர். இவர் பிரபலமாவதற்கு முன், ஏழ்மை வாழ்க்கையை வாழ்ந்தவர். அதுவும் எலியால் பாதிக்கப்பட்ட வீட்டில் மக்ரோனி மற்றும் சீஸ் மட்டும் உட்கொண்டு வாழ்ந்து வந்தவர். பின் தன் திறமையால் தற்போது மிகவும் பிரலமான பாப் பாடகராக உள்ளார்.

ஜிம் மோரிசன்
ஜிம் மோரிசன் மிகவும் பிரபலமாவதற்கு முன், தங்குவதற்கு வீடு கூட இல்லாமல், கிடைக்கும் இடத்தில் உறங்கி கிடைப்பதை உட்கொண்டு வாழ்ந்து வந்தவர். தற்போது இவர் மிகவும் பிரபலமான அமெரிக்க பாடகர், பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளராக உள்ளார் என்றால் பாருங்கள்.

லியனார்டோ டிகாப்ரியோ
லியோனார்டோ டிகாப்ரியோ போதை மருந்து மற்றும் விபச்சாரம் சூழப்பட்ட ஹாலிவுட் பகுதியில் வளர்ந்தார். ஆனால் இவர் தன் திறமையால் ஹாலிவுட்டில் பல திரைப்படங்களை நடித்து, தற்போது டாப் ஹாலிவுட் நடிகர்களுள் ஒருவராக, ஆஸ்கர் விருதை வென்ற ஒரு நடிகராக உள்ளார்.

ஓப்ரா வின்ஃப்ரே
ஓப்ரா வின்ஃப்ரே சிறு வயதில் பல இன்னல்களைச் சந்தித்தவர். அதில் சிறு வயதில் 9 வயதில் பாலியல் தொல்லை, 14 வயதில் தாய்மை மற்றும் தன் குழந்தையின் குறை வயது மரணம் என பல கஷ்டங்களைத் தாங்கி, பின் தன் திறமையால் தற்போது உலகின் செல்வாக்கு மிகுந்த பெண்களில் ஒருவராக உள்ளார்.

ஹாலே பெர்ரி
ஆஸ்கர் விருது வென்ற மற்றும் சர்வதேச அழகியான ஹாலே பெர்ரி, ஒரு நல்ல நிலையை அடையும் முன் பல கஷ்டங்களைக் கடந்தவர். இவரது கனவு மாடல் மற்றும் நடிகையாவது. ஆனால் பெற்றோர்கள் இவருக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. எனவே இவர் வேலை தேடி நியூயார்க் வந்து, வீடற்றவர்கள் குடியிருப்பில் தங்கி, தன் வாழ்க்கையைத் தொடங்கி, தற்போது பிரபல நடிகையாக வாழ்வில் முன்னேறியுள்ளார்.



Click it and Unblock the Notifications