பிள்ளையார்பட்டி விநாயகர் மட்டும் தனித்துவமாக இருப்பது ஏன்???

Posted By:
Subscribe to Boldsky

யானை முகமுடைய பிள்ளையார் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி வணங்கும் கடவுளாக திகழ்கிறார். கல்விக்கு உகந்த தெய்வமாக இருக்கும் விநாயகரை தென்னிந்தியாவில் மட்டும் தான் பிரம்மச்சாரியாக காண்கிறோம். ஆனால், வட இந்தியாவில் இவருக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாக வைத்து வணங்குகிறார்கள்.

குபேரனின் கர்வத்தை அழிக்க விநாயகர் எடுத்த பாடம்!

இந்தியா முழுதும் நூற்றுக்கணக்கான விநாயகர் வழிபாட்டு ஸ்தலங்கள் இருக்கின்றன. ஆனால், நமது தமிழ்நாட்டில் இருக்கும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மட்டும் தான் தனித்துவமாக திகழ்கிறார். இந்த தனித்துவம் இவரது தோற்றத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது.

விநாயகரின் துணைவிகள் பற்றிய கதை!!!

இங்கு இவர் மிக எளிமையான தோற்றத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இனி, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் தனித்துவமான சிறப்புகள் பற்றி காணலாம்....

விநாயகர் ஏன் எலியை வாகனமாக கொண்டுள்ளார்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துதிக்கை வலம்சுழித்ததாக இருக்கும்

துதிக்கை வலம்சுழித்ததாக இருக்கும்

கற்பக விநாயக பெருமானின் துதிக்கை வலம் சுழித்ததாக அமைந்திருப்பது தனி சிறப்பாக திகழ்கிறது.

இரண்டு கரங்கள்

இரண்டு கரங்கள்

பொதுவாக மற்ற வழிபாட்டு ஸ்தலங்களில் இருப்பதைப் போல நான்கு கைகள் இன்றி இரண்டு கரங்களை கொண்டு விளங்குகிறார்.

அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குவது.

அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குவது.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மற்ற கோவில் விநாயகரை போன்று இல்லாமல், அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குகிறார்.

"அர்த்தபத்ம" ஆசனம்

வயிறு, ஆசனத்தில் படியாமல் "அர்த்தபத்ம" ஆசனம், போன்று கால்கள் மடித்திருக்க அமர்ந்தருள்கிறார் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்.

பெருமித கோலம்

பெருமித கோலம்

இடக்கரத்தை கடிஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதமானக் கோலத்தில் காட்சியளிப்பது.

வலக்கரத்தில் மோதகம் தாங்கியருள்வது

வலக்கரத்தில் மோதகம் தாங்கியருள்வது

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வலக்கரத்தில் மோதகம் தாங்கி அருள்பாலிக்கிறார்.

தந்ததின் வேறுபாடு

தந்ததின் வேறுபாடு

ஆண், பெண் இணைப்பை புலப்படுத்தும் வகையில், வலத்தந்தம் நீண்டும், இடத்தந்தம் குருகியும் காணப்படுகிறது பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் தோற்றத்தில்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unique Specialty Of Pillaiyarpatti Vinayagar

Do you know about the unique specialty of Pilaiyarpatti Vinayagar? Read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter