Latest Updates
-
இட்லி, தோசைக்கு ஏற்ற பச்ச மாங்கா வேர்க்கடலை சட்னி - சிம்பிளா எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 11 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஏமாற்றம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
Tamil New Year 2026 Rasi Palan: தமிழ் புத்தாண்டில் குபேர ராஜயோகம் - திடீர் ஜாக்பாட் யாருக்கு தெரியுமா? -
30 ஆண்டுக்கு பின் சனிபகவான்-புதன் மீன ராசியில் இணைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
அட்டகாசமான கொத்தமல்லி மாங்காய் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
முகம் எப்பவும் எண்ணெய் வழிந்து அசிங்கமாக இருக்கா? அப்ப இந்த நேச்சுரல் கிளென்சரை யூஸ் பண்ணுங்க! -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டிலேயே எந்த தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் தெரியுமா? -
கோடைகாலத்தில் எடையை புயல் வேகத்தில் குறைக்க உதவும் சிறந்த 10 உணவுகள் -
வீட்டில் எப்பவும் செல்வமும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கணுமா? அப்ப இந்த பொருட்களை வாங்கி வையுங்க! -
தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப டாக்டர் ஸ்வேதா சொல்ற இந்த விதைகளை தினமும் 1 ஸ்பூன் சாப்பிடுங்க!
உலகில் உள்ள டாப் 10 குள்ள மனிதர்கள்!!!
சாதாரண மனிதனின் உயரம் குறைந்தது 5 அடி 10 அங்குலம் இருக்க வேண்டும். இருப்பினும் உலகில் பிறந்த அனைவருமே இந்த உயரத்தில் இருப்பதில்லை. சில சாதாரண உயரத்தை விட அதிகமாகவும், இன்னும் சிலர் மிகவும் குறைவாகவும் இருப்பார்கள்.
நம்ப முடியாத சில விசித்திரமான உண்மைகள்!
இப்படி சில மனிதர்கள் மிகவும் குட்டையாக இருப்பதற்கு காரணம் ஹார்மோன் பற்றாக்குறை தான். ஹார்மோன் பற்றாக்குறையினால் தான் மனிதர்களின் வளர்ச்சியில் இடையூறு ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
உலகில் இருக்கும் அசர வைக்கும் 12 விசித்திரமான பெண்கள்!!!
இங்கு வரலாற்றில் இடம் பெற்ற உலகில் இருக்கும் மிகவும் குட்டையான டாப் 10 மனிதர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றதோடு, இன்னும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

ஸ்டேசி ஹெரால்ட் (Stacey Herald)
அமெரிக்காவில் உள்ள கென்டக்கி பகுதியைச் சேர்ந்தவர் தான் ஸ்டேசி ஹெரால்ட். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவரது உயரம் 28 அங்குலம் தான். இவரால் எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாது. தற்போது அவர் வீல்சேரின் உதவியால் தான் நகர்கிறார். இவருக்கு பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. அவையாவன சரியாக வளர்ச்சியடையாத நுரையீரல் மற்றும் உடையக்கூடிய எலும்புகள் மற்றும் இவரது உயரத்தால் பிரசவம் கடினமாக நடந்ததோடு, அவரது உள்ளுறுப்புக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
Source

ஹடெஸ் கொகாமேன் (Hatice Kocaman)
துருக்கியைச் சேர்ந்த இவர் 28 அங்குலம் உயரம் கொண்டவர். இவரது இந்த நிலைக்கு பெற்றோர்களிடமிருந்து வந்த மரபணு எலும்பு நிலை என்றும் சொல்கிறார்கள். மேலும் இவர் தனது உயரத்தால் உலகிலேயே மிகவும் குட்டையான பெண் என்று கின்னஸ் சாதனை படைத்தார்.
Source

எட்வர்ட் நினோ ஹெர்னாண்டஸ் (Edward Niño Hernández)
கொலம்பியாவைச் சேர்ந்த எட்வர்ட் 1986 இல் பிறந்தார். இவர் 27 அங்குல உயரம் என்பதால், பின் கின்னஸ் சாதனை படைத்தார். மேலும் இவரிடம் 1988 ஆம் ஆண்டு வரை எவ்வித வளர்ச்சியும் காணப்படவில்லை. பிறந்த போது 15 அங்குலமாக இருந்த இவர், அதன் பின் 12 அங்குலம் தான் உயரமாகியுள்ளார். இவர் குட்டையான மனிதர் மட்டுமின்றி, அவருக்கு பார்வை பிரச்சனையும் உள்ளது.
Source

பிரிட்ஜெட் ஜோர்டான் (Bridgette Jordan)
இந்த பெண்மணி 1989 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது உயரம் 27 அங்குலம். இவரது உயரத்தால், இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார். இவர் மிகவும் சிறப்பான நடனம் ஆடுவார்.
Source

லின் யூ-சிஹ் (Lin Yü-chih)
தய்வானைச் சேர்ந்த இவர் 1972 ஆம் ஆண்டு பிறந்தார். உடையக்கூடிய எலும்புகளுடன் இவரது உயரம் 26.6 அங்குலம் மற்றும் இவரால் வீல்சேரின் உதவியால் தான் நகர முடியும். இவர் மிகவும் சிறப்பான எழுத்தாளர் மற்றும் தைப்பேவில் சமூக நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டவர்.
Source

கஜேந்திரா தாபா மகர் (Khagendra Thapa Magar)
நேபாளத்தை சேர்ந்த இவர் 26 அங்குல உயரம் கொண்டவர். இவர் அப்பகுதியில் உள்ள நடன குழுவுடன் சேர்ந்து நடனமாடி வருகிறார். இவரது ஆசை அமெரிக்கா செல்வதாம். இவர் தற்போது உலகின் மூன்றாவது குட்டையான மனிதனாவார்.
Source

மட்ஜ் பெஸ்டர் (Madge Bester)
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்த பெண் 1968 ஆம் ஆண்டு பிறந்ததார். இவர் 25.5 அங்குல உயரம் கொண்டவர். இவரும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். ஆனால் இவரால் நடக்க முடியாது. அதனால் நடிக்க முடியாத மற்றும் குள்ள பெண் என்று கின்னஸில் அடம் பெற்றுள்ளார்.
Source

ஜோதி அம்கே (Jyoti Amge)
இந்தியாவின் நாக்பூர் பகுதியில் 1993 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் ஜோதி அம்கே. இவர் 24.7 அங்குல உயரம் கொண்டவர். மேலும் இவருக்கும் உடையக்கூடிய எலும்புகள் உள்ளதால், நடக்கும் போது அவ்வப்போது பெற்றோரின் உதவியும் தேவைப்படும்.

ஜன்ரே பாலாவிங் (Junrey Balawing)
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜன்ரே பாலாவிங் உலகின் இரண்டாவது குட்டையான மனிதராவார். இவர் 23.6 அங்குல உயரத்தை அடைந்த பின் இவரது உயரம் நின்றுவிட்டது. இன்று வரை அவரது உயரத்தில் மாற்றம் தெரியவில்லை. இவரும் சற்று தள்ளாடி நடப்பார். இருப்பினும் இவர் சமாளித்துக் கொள்வார்.
Source

சந்திர பகதூர் டாங்கி (Chandra Bahadur Dangi)
சந்திர பகதூர் டாங்கி தான் உலகில் உள்ள குட்டையான டாப் 10 மனிதர்களுள் முதன்மையானவர். இதுவரை இவரது சாதனையை யாராலும் தொட முடியவில்லை. இவர் 1939 ஆம் ஆண்டு நேபாளத்தில் பிறந்தார். இவரது கால்கள் தான் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.
Source



Click it and Unblock the Notifications











