Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
வர்த்தக ரீதியாக அதிகம் சம்பாதிக்கும் இந்தியாவின் டாப் 10 பிரபலங்கள்!!!
கடந்த ஆண்டில் நடிப்பு, விளம்பரம் என இரண்டிலும் சேர்த்து பல கோடிகளை அள்ளிய டாப் 10 இந்திய பிரபலங்களை பற்றி தான் நாம் இங்கு பார்க்கவிருக்கிறோம். இந்த டாப் 10 பட்டியலில் சிங்கிள் பெண்ணாக இருப்பவர் கத்ரீனா கைப் மட்டுமே.
எத்தனை வயதானாலும் இன்னும் துடிப்பாக நடித்து வரும் அமிதாப்பச்சன், கிரிக்கெட்டுக்கு டாட்டா காட்டினாலும் ரசிகர் மனதில் கெட்டியாக ஒட்டிக் கொண்டிருக்கும் சச்சின் மற்றும் பாலிவுட் பாட்சாக்கள் என முக்கிய பிரபலங்கள் தான் இந்த பட்டியலில் நிறைந்திருக்கிறார்கள்.....

சயப் அலிகான்
சாயப் அலிகானுக்கு கடந்த வருடம் தங்கம் போன்றது என்று தான் கூற வேண்டும். நடிகராகவும் சரி, வர்த்தக ரீதியாகவும் சரி இவர் பெருமளவில் உயர்ந்திருக்கிறார். கடந்த ஆண்டு இவர் 60 கோடி வரை சம்பாதித்து டாப் 10 வரிசையில் பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

ஹ்ரித்திக் ரோஷன்
இந்தியாவில் ஜேம்ஸ்பாண்ட் லுக்கில் இருக்கும் ஒரே நடிகர் ஹ்ரித்திக் தான். திரைப்படத்தில் மட்டுமின்றி விளபரங்களிலும் இவர் கலக்கி வருகிறார். கடந்த ஆண்டில் இவர் 63 கோடி வரை சம்பாதித்தி இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

கத்ரீனா கைப்
ஏறத்தாழ கடந்த பல ஆண்டுகளாக ஆசியாவின் கவர்ச்சி மங்கை, கனவுக்கன்னி என வரிசைப்படுத்தும் அனைத்து பட்டியலிலும் இவர் தான் டாப். இந்த பட்டியலில் 64 கோடி சம்பாதித்து எட்டாவது இடத்தை எட்டிப்பிடித்திருக்கிறார்.

ரன்பீர் கபூர்
அடுத்தடுத்து நட்சத்திர நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படும் ரொமாண்டிக் ஹீரோ ரன்பீர். இவர் கடந்த ஆண்டு மட்டுமே 68 கோடிகள் சம்பாதித்தி இந்த பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

சச்சின்
கிரிக்கெட்டை விட்டு விலகினாலும் கூட, ரசிகர்களின் மனதில் இருந்து என்றும் விலகாத ஒரே வீரர் சச்சின் தான். கடந்த ஆண்டு 95 கோடி சம்பாதித்து ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறார் சச்சின்.

அக்ஷய் குமார்
இந்தியாவின் உண்மையான, தைரியமான ஆக்ஷன் ஹீரோ யார் என்றால் அது அக்ஷய் குமாராக தான் இருக்க முடியும். கடந்த வருடத்தில் அதிகமாக வரி செலுத்திய பாலிவுட் நடிகர் அக்ஷய் தான். கடந்த ஆண்டில் மட்டும் ஏறத்தாழ 119 கோடி சம்பாதித்து ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

அமிதாப்
"பிக் பீ" என்று செல்லமாக அழைக்கப்படும் அமிதாப்பச்சன், வருடங்கள் கடந்தாலும் கூட இளைய தலைமுறையுடன் போட்டிப் போட்டு அதிகமாக சம்பாதிக்கும் நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு மட்டும் இவர் 148 கோடி சம்பாதித்து, நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார்.

டோனி
இந்திய கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் என்றால், அந்த கடவுள் கொடுத்த வரம் தான் டோனி. எட்டு வருடங்களாக இந்திய அணியின் கேப்டனா இருந்து வரும் டோனி பல சாதனைகளை படைத்திருக்கிறார். 156 கோடி சம்பாதித்து இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார் இவர்.

சல்மான்கான்
இந்திய "பாக்ஸ் ஆபிஸை" அடிக்கடி உலுக்கி பார்க்க கூடிய நடிகர் சல்மான். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் இவர், கடந்த ஆண்டு 159 கோடி சம்பாதித்து இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார்.

ஷாருக் கான்
இவரை கிங் ஆப் கான்'ஸ் என்று கூறுவது மிகையாகாது. நடிப்பு, ஆக்ஷன், காமெடி, காதல் என அனைத்திலும் "வூடுகட்டி" கலக்கும் அசாத்திய கலைஞன். கடந்த ஆண்டில் 221 கோடி சம்பாத்து இந்த பட்டியலின் முதல்வனாக திகழ்கிறார் ஷாருக்கான்.



Click it and Unblock the Notifications